ரிது நந்தா
ரிது நந்தா (பிறப்பு ரிது ராஜ் கபூர் ; 30 அக்டோபர் 1949 - 14 சனவரி 2020) என்பவர் இந்தியத் தொழிலதிபர் மற்றும் காப்பீட்டு ஆலோசகர் ஆவார்.[1]
பணி
தொகுநந்தா, ரிது நந்தா காப்பீட்டுச் சேவையின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் ஆக பணியாற்றினார். இவர் ஆரம்பத்தில் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் வணிகமான நிகிதாசாவை நிர்வகித்தார். இதன் மோசமான வளர்ச்சியின் காரணமாக மூடப்பட்டது. இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்திடமிருந்து தசாப்தத்தின் வணிக தூதர் மற்றும் சிறந்த காப்பீட்டு ஆலோசகர் விருதுகளைப் பெற்றார்.
ஒரே நாளில் 17,000 ஓய்வூதியர் கோட்பாடுகளை விற்று கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்தார் நந்தா.[2] எஸ்கோலைஃப் மற்றும் ரிமாரி கார்ப்பரேட் ஆர்ட் சேவை போன்ற நிறுவனங்களையும் நிர்வகித்தார்.
இளமையும் உறவுகளும்
தொகுநந்தா ஒரு பஞ்சாபி இந்து குடும்பத்தில் கிருஷ்ணா மற்றும் ராஜ் கபூர், ஒரு நடிகர்-இயக்குநரின் மகளாகப் பிறந்தார். இவர் 30 அக்டோபர் 1949 அன்று மும்பையில் பிறந்தார். இவரது தாத்தா நடிகர் பிருத்விராஜ் கபூர். இவரது பெரிய மாமா நடிகர் திரிலோக் கபூர். இவரது தாய் மாமாக்கள் நடிகர்கள் பிரேம் நாத், ராஜேந்திர நாத் மற்றும் நரேந்திர நாத் இவரது தந்தைவழி மாமாக்கள் சம்மி கபூர், சசி கபூர், தேவிந்தர் கபூர் மற்றும் ரவீந்தர் கபூர் ஆவர். இவரது தந்தை வழி அத்தை ஊர்மிளா சியால். நடிகர் பிரேம் சோப்ரா இவரது மாமா மூலம் திருமணம் செய்து கொண்டவர். இவரது சகோதரர்கள், ரந்தீர் கபூர், ரிசி கபூர் மற்றும் ராஜீவ் கபூர், திரைப்பட நடிகர்கள் ஆவர். இவருக்கு ரீமா ஜெயின் என்ற சகோதரியும் உள்ளார். திரைப்பட நடிகைகள் கரிஷ்மா கபூர் மற்றும் கரீனா கபூர் இவரது மருமகள். நடிகர் ரன்பீர் கபூர் இவரது மருமகன் ஆவார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுகபூர் இந்தியத் தொழிலதிபரான ராஜன் நந்தாவை (1944-2020) மணந்தார். இவருக்கு நிகில் நந்தா என்ற மகன், நடாஷா நந்தா என்ற மகள் என இரு குழந்தைகள் உள்ளனர். நிகில் அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சனின் மகளும் அபிஷேக் பச்சனின் மூத்த சகோதரியுமான சுவேதா பச்சனை மணந்தார். கபூர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, 14 சனவரி 2020 அன்று நோயால் இறந்தார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "You make your own happiness. It is a state of mind". Indian Express. http://indianexpress.com/article/news-archive/web/you-make-your-own-happiness-it-is-a-state-of-mind/3/. பார்த்த நாள்: 14 November 2014.
- ↑ "Raj Kapoor's daughter Ritu Nanda was top LIC insurance agent; held this world record". 14 January 2020.
- ↑ "Shweta Nanda's Mother-in-Law Ritu Nanda Passes Away, Akanksha Puri Fights with Co-Star". 14 January 2020.
மேலும் படிக்க
தொகு- மேன்மைக்கான பயணம் (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-223-0904-6 ) நிச்சிந்தா அமர்நாத், தேபாஷிஷ் கோஷ் மற்றும் அம்ரிதா சி சமதர்