ரினி சைமன் கன்னா

ரினி கன்னா (Rini Khanna) (பிறப்பு: 1964) இவர் ஓர் பிரபலமான இந்திய தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளர் ஆவார். இவர் அரசு நடத்தும் தூர்தர்ஷனுடன் (1985 - 2001), [1] பணிபுரிந்தார். இது இவரை "வீட்டுப் பெயராக" மாற்றியது., பின்னர் குரல்வழி தொழில்முறை மற்றும் பல்வேறு நிகழ்வுகளுக்கு நிகழ்ச்சி நபராக ஒரு தொழிலைத் தொடங்கியது . [2] [3] [4] 1982 ஆம் ஆண்டில் அகில இந்திய வானொலியுடன் செய்தி ஒளிபரப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். [5]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

புது தில்லியில் 1964 இல் ரினி சைமனாகப் பிறந்த இவர் தில்லி மற்றும் பல நகரங்களில் வளர்ந்தார். இந்திய விமானப்படை அதிகாரியான இவரது தந்தையுடன் அனைத்து சேவை ஊழியர்களையும் போலவே இவரும் பல ஊர்களில் பல பள்ளிகளுக்கு பயணம் செய்தார். தில்லி, அல்வாரா (பஞ்சாப்), மும்பை, ஜோத்பூர், பாக்டோகிரா, தாம்பரம் மற்றும் தில்லியில் கிட்டத்தட்ட ஒன்பது பள்ளிகளில் படித்தார். 1981 ஆம் ஆண்டில் தில்லியின் சுப்ரோத்தோ பூங்காவில் உள்ள விமானப்படை பள்ளியில் இருந்து பள்ளிப் படிப்பை முடித்தார். அதன்பிறகு தில்லி பல்கலைக்கழகத்தின் இயேசு மற்றும் மேரி கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார். மேலும் வரலாற்றில் முதுகலைப் பட்டமும் பெற்றார். மேலும் புதுதில்லியில் உள்ள இந்திய வெகுஜனத் தொடர்பு நிறுவ்னத்தில் பத்திரிகைத் துறையில் முதுகலை பட்டமும் முடித்தார். [6]

தொழில் தொகு

இப்போது முப்பது ஆண்டுகளாக நீடிக்கும் ஒரு தொழில் வாழ்க்கையில், ரினி இந்தியாவின் தேசிய வானொலி, அகில இந்திய வானொலியில் 13 மணிக்கு நிகழ்ச்சிகளையும் நேர்காணல்களையும் தயாரித்து வழங்கத் தொடங்கினார். பின்னர், அகில இந்திய வானொலியில் முக்கிய நேரங்களில் தேசிய செய்திகளைப் படிக்க தேர்வு செய்யப்பட்டார். கூடுதலாக, தொலைக்காட்சி மற்றும் வானொலிகளுக்கான சுதந்திர தினம், குடியரசு நாள் போன்ற மதிப்புமிக்க சந்தர்ப்பங்களில் இவர் வர்ணனை செய்கிறார்.

1985 ஆம் ஆண்டில் இந்தியாவின் பிரதான தொலைக்காட்சி சேனலான டெல்லி தூர்தர்ஷனில் தேசிய செய்திகளைத் தொகுக்க வானொலியில் இருந்து இவர் தேர்வு செய்யப்பட்டார், தேஜேஸ்வர் சிங்குடன் இணைத் தொகுப்பாளராக இருந்தார். [7] [8] செய்திகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், ரினி ஒரு அனுபவமிக்க குரல் திறமை, ஆவணப்படங்கள், விளம்பரப் படங்கள் மற்றும் படங்களுக்கான வர்ணனை மற்றும் குரல்வழிகளை வழங்குகிறார். சர்வதேச மற்றும் தேசிய மாநாடுகள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் மதிப்புமிக்க நிறுவனங்கள், ஐ.நா. முகவர், பெருநிறுவனக் குழுக்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கான கருத்தரங்குகளையும் இவர் தொகுத்து வழங்குகிறார்.

ஷம்மி நாரங்கின் ஆண் குரலுடன் உடன் தில்லி மெட்ரோவுக்கான பெண் குரலினி கன்னா வழங்கியுள்ளார். [9] [10]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

இவர் தொழிலதிபர் தீபக் கண்ணாவை மணந்தார். புது தில்லியில் வசந்த் குஞ்சில் வசிக்கும் இந்த தம்பதிக்கு 26 வயதாம் சாஹில் கன்னாஎன்ற ஒரு மகன் உள்ளனர். [5]

குறிப்புகள் தொகு

  1. "Tejeshwar Singh, voice of DD news, passes away". 16 December 2007 இம் மூலத்தில் இருந்து 24 பிப்ரவரி 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120224214346/http://www.expressindia.com/latest-news/Tejeshwar-Singh-voice-of-DD-news-passes-away/250839/. 
  2. "Second season". 7 March 2010. http://www.tribuneindia.com/2010/20100307/spectrum/main1.htm. 
  3. "Age of innocence: Media personalities look back..". 25 October 2009 இம் மூலத்தில் இருந்து 31 ஜனவரி 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100131124302/http://www.hindu.com/mag/2009/10/25/stories/2009102550300400.htm. 
  4. "Like Metro, voice alerts on DTC". 23 June 2011 இம் மூலத்தில் இருந்து 2013-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103165114/http://articles.timesofindia.indiatimes.com/2011-06-23/delhi/29693739_1_dtc-buses-announcements-delhi-transport-corporation. 
  5. 5.0 5.1 "The news, according to...Rini Simon Khanna". harmonyindia.org. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2020-04-02.
  6. "Manthan Award South Asia Grand Jury 2010 Profile: Rini Simon Khanna". Manthan Award. 2010. Archived from the original on 17 October 2012.
  7. "Tejeshwar Singh, voice of DD news, passes away". Indian Express. 16 December 2007 இம் மூலத்தில் இருந்து 24 February 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120224214346/http://www.expressindia.com/latest-news/Tejeshwar-Singh-voice-of-DD-news-passes-away/250839/. "..the stalwarts of the golden years of Doordarshan's news service, along with Neethi Ravindran, Komal G B Singh, Preet Bedi and Rini Khanna." 
  8. "CYNICAL CONTRARIAN: Ban the News". The Times of India. 4 May 2007 இம் மூலத்தில் இருந்து 2013-11-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131105135323/http://articles.timesofindia.indiatimes.com/2007-05-04/edit-page/27878905_1_abhi-ash-news-channels-wedding. 
  9. दिल्‍ली मेट्रो की अनाउंसमेंट के पीछे हैं इनकी आवाजें Aaj Tak
  10. Delhi metro to run Independence Day special train, check features

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரினி_சைமன்_கன்னா&oldid=3935068" இலிருந்து மீள்விக்கப்பட்டது