ரீட்டா ஆர். கால்வெல்
ரீட்டா ரோசி கால்வெல் (Rita Rossi Colwell) (பிறப்பு நவம்பர் 23,1934), அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுசூழல் நுண்ணுயிரியல் வல்லுநர் ஆவார். நுண்ணுயிரியல், மரபியல், கடலியல் போன்ற துறைகளில் இவர் பட்டம் பெற்றுள்ளார். உயிர் தகவலியல் துறையில் காஸ்மோஸ்ஐடி என்ற ஒரு நிறுவனத்தைத் தொடங்கி அதன் தலைவராக உள்ளார். 1998 முதல் 2004 வரை, தேசிய அறிவியல் அறக்கட்டளையின் 11ஆவது இயக்குநராகவும், முதல் பெண் இயக்குநராகவும் இருந்தார்.[1]
ரீட்டா ஆர். கால்வெல் | |
---|---|
தேசிய அறிவியல் அறக்கட்டளையின் 11வது இயக்குநர் | |
பதவியில் 1998–2004 | |
குடியரசுத் தலைவர் | பில் கிளின்டன் ஜார்ஜ் வாக்கர் புஷ் |
முன்னையவர் | நீல் பிரான்சிஸ் லான் |
பின்னவர் | ஆர்டன் எல். இளைய பெமென்ட் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | நவம்பர் 23, 1934 பெவர்லி, மாசச்சூசெட்ஸ், அமெரிக்கா |
தேசியம் | [அமெரிக்கர் |
முன்னாள் கல்லூரி | பர்டூ பல்கலைக்கழகம் வாஷிங்டன் பல்கலைக்கழகம் |
அறிவியல் பணி | |
துறை | நுண்ணுயிரியல் |
பணியிடங்கள் | தேசிய அறிவியல் அறக்கட்டளை மேரிலன்ட் பல்கலைக்கழகம்<br /ஜான்ஸ் ஹாப்கின்ஸ் புளூம்பெர்க் பள்ளி]] ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் |
ஆய்வேடு | கடல் விலங்குகளின் ஆரம்ப நுண்ணுயிரியல்; அவற்றின் பரவல், உடலியல் மற்றும் வகைபிரித்தல் பற்றிய ஆய்வு (1961) |
ஆய்வு நெறியாளர் | ஜான் லிசன் |
முனைவர் பட்ட மாணவர்கள் | ஜோடி தெமிங் |
ஆரம்ப காலம் மற்றும் கல்வி
தொகுகோல்வெல் நவம்பர் 23, 1934 அன்று மாசச்சூசெட்சில் உள்ள பெவர்லியில் பிறந்தார். இவரது பெற்றோரான லூயிசு மற்றும் லூயிசு ரோசிக்கு எட்டு குழந்தைகள் இருந்தனர். ரீட்டா குடும்பத்தில் பிறந்த ஏழாவது குழந்தை. இவரது தாயோ தந்தையோ அறிவியல் பின்னணியில் இருந்து வந்தவர்கள் அல்ல. 1956 இல், ரீட்டா பர்டூ பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியல் துறையில் பட்டம் பெற்றார். 1957 இல் மரபியலிலில் பெற்றார். நீர்வாழ் நுண்ணுயிரியலில் தனது முனைவர் ஆராய்ச்சியை 1961 இல் நுண்ணுயிரியலாளர் ஜான் லிஸ்டனின் வழிகாட்டுதலின் கீழ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றார்.[2][3] இவர் ஒட்டாவாவில் உள்ள கனேடிய தேசிய ஆராய்ச்சி சபையின் பிந்தைய முனைவர் பட்டப் படிப்பில் பங்கேற்றார்.
தொழில்
தொகுநீர் ஆதாரங்கள் மூலம் பரவும் உலகளாவிய தொற்று நோய் மற்றும் உலகளாவிய ஆரோக்கியத்தில் அதன் தாக்கங்கள் பற்றிய ஆய்வுக்காக கோல்வெல் அங்கீகரிக்கப்பட்டார்.[4] இந்த ஆராய்ச்சியின் மூலம், இவர் ஒரு சர்வதேச வலையமைப்பை உருவாக்கியுள்ளார், இது குடிநீரில்/குளிப்பதில் புதிய தொற்று நோய்கள் தோன்றுவதை கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. பெரும்பாலும் வளர்ந்துவரும் நாடுகளில் அதன் பங்கைப் பற்றியது.
வாந்திபேதி ஆராய்ச்சி
தொகுவாந்திபேதி பற்றிய ஆரம்பகால ஆராய்ச்சி மற்றும் ஆய்வின் போது, வாந்திபேதி சாதகமற்ற சூழ்நிலையில் செயலற்ற நிலையில் இருக்கும் மற்றும் நிலைமைகள் மீண்டும் சாதகமாக இருக்கும் போது இயல்பான செயல்பாடுகளை மீண்டும் தொடங்கும் என்று கோல்வெல் கண்டுபிடித்தார்.[5]
சொந்த வாழ்க்கை
தொகுரீட்டா தனது கணவர் ஜாக் கால்வெல்லை பர்டூவில் இயற்பியல் வேதியியல் பட்டதாரி மாணவராக இருந்தபோது சந்தித்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் மூன்று பேரக்குழந்தைகள் இருந்தனர். ஜாக் எச். கால்வெல் (1931-2018) தேசிய தரநிலைப் பணியகத்தில் விஞ்ஞானியாவார்.[6]
விருதுகள்
தொகுரீட்டா கால்வெல் இதுவரை 61 கௌரவ பட்டங்களை பெற்றுள்ளார்.[7]
குறிப்புகள்
தொகு- ↑ "Rita Rossi Colwell, MSA SC 3520-11592". msa.maryland.gov. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
- ↑ Colwell, Rita Barbara Rossi (1961). Commensal bacteria of marine animals; a study of their distribution, physiology and taxonomy (Ph.D.). வாஷிங்டன் பல்கலைக்கழகம். இணையக் கணினி நூலக மைய எண் 20018876 – via ProQuest.
- ↑ Marmor, Jon (June 2000). "Wonder Women: Bumping Against the Glass Ceiling". Columns Magazine (வாஷிங்டன் பல்கலைக்கழகம்). https://www.washington.edu/alumni/columns/june00/colwell3.html.
- ↑ "RitaColwell – Cell Biology & Molecular Genetics". cbmg.umd.edu. Archived from the original on 2016-09-11. பார்க்கப்பட்ட நாள் 2016-09-13.
- ↑ Magny, Guillaume Constantin de; Murtugudde, Raghu; Sapiano, Mathew R. P.; Nizam, Azhar; Brown, Christopher W.; Busalacchi, Antonio J.; Yunus, Mohammad; Nair, G. Balakrish et al. (2008-11-18). "Environmental signatures associated with cholera epidemics" (in en). Proceedings of the National Academy of Sciences 105 (46): 17676–17681. doi:10.1073/pnas.0809654105. பன்னாட்டுத் தர தொடர் எண்:0027-8424. பப்மெட்:19001267.
- ↑ "Obituary. Jack Colwell". Washington Post. February 18, 2018. https://www.legacy.com/obituaries/washingtonpost/obituary.aspx?n=jack-colwell&pid=188221216. (typo in 2nd line of obituary)
- ↑ "The New School Commencement to be Held on May 21". 2010-05-17. Archived from the original on 2018-07-02. பார்க்கப்பட்ட நாள் 2023-04-08.
மேலும் படிக்க
தொகு- "RitaColwell – Cell Biology & Molecular Genetics". University of Maryland: College of Computer, Mathematical and Natural Sciences. Archived from the original on 6 ஏப்ரல் 2020. பார்க்கப்பட்ட நாள் 22 March 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - "Rita Colwell, Ph.D.: National Council for Science and the Environment (NCSE)". National Council for Science and the Environment. Archived from the original on 6 ஆகஸ்ட் 2020. பார்க்கப்பட்ட நாள் 22 March 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - "US NSF – News – Rita R. Colwell, Biography". National Science Foundation. பார்க்கப்பட்ட நாள் 22 March 2019.
வெளி இணைப்புகள்
தொகு- "Dr Rita Colwell: 'Climate change, oceans and infectious disease: Cholera pandemics as a model'". YouTube. Microbiology Society. October 30, 2015. Archived from the original on 2021-12-12.
- "Rita Colwell, "A Lab of One's Own"". Youtube. Harvard Science Book Talks and Research Lectures. September 14, 2020. Archived from the original on 2021-12-12.
- "A Deep Conversation with Rita Colwell". YouTube. University of California Television (UCTV). March 24, 2021. Archived from the original on 2021-12-12.
- "Prof. Rita Colwell Bio". CosmosID. CosmosID. June 17, 2021.
{{cite web}}
: CS1 maint: url-status (link)