உருபீடியம் ஐதரசன் சல்பேட்டு

வேதிச்சேர்மம்
(ருபீடியம் ஐதரசன் சல்பேட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ருபீடியம் ஐதரசன் சல்பேட்டு (Rubidium hydrogen sulfate) என்பது RbHSO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கந்தக அமிலத்தினுடைய ருபீடியம் உப்பு ஆகும்.

ருபீடியம் ஐதரசன் சல்பேட்டு
Rubidium hydrogen sulfate

rubidium ion

hydrogen sulfate ion
இனங்காட்டிகள்
15587-72-1
பண்புகள்
RbHSO4
வாய்ப்பாட்டு எடை 182,54 கி/மோல்−1
தோற்றம் நிறமற்ற படிகங்கள்[1]
அடர்த்தி 2.89 கி·செ.மீ−3
உருகுநிலை 214 °C (417 °F; 487 K)[2]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் ருபீடியம் ஆக்சைடு
ருபீடியம் ஐதராக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தொகுப்பு முறையில் தயாரிப்பு

தொகு

ருபீடியம் இரு சல்பேட்டுடன் விகிதச்சமநிலை அளவுகளில் ஈரப்பதமற்ற சூழலில் தண்ணீர் சேர்க்கப்பட்டால் ருபீடியம் ஐதரசன் சல்பேட்டு உண்டாகிறது[3]

 .

சோடியம் சல்பேட்டுடன் பொட்டாசியம் சல்பேட்டு சேர்ப்பது போன்ற மற்றொரு முறையும் இதற்காகப் பின்பற்றப்படுகிறது. இவ்வினைக்கு ருபீடியம் குளோரைடு மற்றும் சிறிதளவு சூடான கந்தக அமிலம் தேவைப்படுகிறது. வினையின் இறுதியில் சிறிதளவு ஐதரசன் குளோரைடும் உருவாகும்.

 

பண்புகள்

தொகு

P21/n ஒற்றைசரிவு படிக அமைப்பைக் கொண்ட இது ஈரமுறிஞ்சும் ஒரு சேர்மமாகும். அணிக்கோவை மாறிலிகளின் மதிப்புகள் a = 1440 பை.மீ, b = 462,2 பை.மீ, c = 1436 பை.மீ மற்றும் β = 118,0° என்ற அளவுகளில் உள்ளது. ருபீடியம் ஐதரசன் சல்பேட்டு படிகங்கள் அமோனியம் ஐதரசன் சல்பேட்டு படிகங்களுடன் சமவுரு தோற்ற அமைப்பைக் கொண்டுள்ளன[4]

நிலையான உள்ளுறை வெப்பம்[5] −1166 கியூ/மோல் பெற்றுள்ள இச்சேர்மம் தண்ணீரில் கரைந்துருகும் போது 15.62 கி.யூ/ மோல் [6] ஆற்றலை வெளிவிடுகிறது.

மீண்டும் சூடு படுத்தும்போது இவ்வுருகல், ருபீடியம் இரு சல்பேட்டு மற்றும் தண்ணீராக மாற்றமடைகிறது:[7]

 

பொட்டாசியம் மற்றும் சீசியம் உலோகங்கள் போல ருபீடியமும் மற்றொரு ஐதரசன் சல்பேட்டைக் Rb3H(SO4)2. கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Jean D'Ans, Ellen Lax: Taschenbuch für Chemiker und Physiker. 3. Elemente, anorganische Verbindungen und Materialien, Minerale, Band 3. 4. Auflage, Springer, 1997, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-5406-0035-0, S. 692 (Taschenbuch für Chemiker und Physiker, p. 692, கூகுள் புத்தகங்களில்).
  2. R. Fehrmann, S. Boghosian, H. Hamma-Cugny, J. Rogez: "Phase diagrams, structural and thermodynamic properties of molten salt solvents for the industrial SO2-oxidation catalyst" Abstract[தொடர்பிழந்த இணைப்பு]
  3. S. B. Rasmussen, H. Hamma, K. M. Eriksen, G. Hatem, M. Gaune-Escard, R. Fehrmann: "Physico-chemical properties and transition metal complex formation in alkali pyrosulfate and hydrogen sulfate melts". VII International Conference on Molten Slags Fluxes and Salts, The South African Institute of Mining and Metallurgy, 2004. Volltext (PDF; 661 kB)
  4. J. P. Ashmore, H. E. Petch: "The Structure of RbHSO4 in its Paraelectric Phase" in Can. J. Phys 1975, 53(24), S. 2694-2702. எஆசு:10.1139/p75-328
  5. L. A. Cowan, R. M. Morcos, N. Hatada, A. Navrotsky, S. M. Haile: "High temperature properties of Rb3H(SO4)2 at ambient pressure: Absence of a polymorphic, superprotonic transition" in Solid State Ionics 2008, 179, S. 305-313. Volltext பரணிடப்பட்டது 2010-06-22 at the வந்தவழி இயந்திரம் (PDF; 837 kB)
  6. M. de Forcrand: "Sur les chlorures et sulfates de rubidium et de caesium" in Compt. Rend. Hebd. 1906, 143, S. 98. Volltext
  7. R. Abegg, F. Auerbach: "Handbuch der anorganischen Chemie". Verlag S. Hirzel, Bd. 2, 1908. S. 432.Volltext