ரூபி மியர்சு
ரூபி மியர்சு (Ruby Myers) (பிறப்பு: 1907 - இறப்பு: 1983 அக்டோபர் 10), இவர் தனது சுலோச்சனா என்ற மேடைப் பெயரால் நன்கு அறியப்பட்டவர். யூத வம்சாவளியைச் சேர்ந்த இந்திய மௌனத் திரைப்பட நடிகை ஆவார். இந்தியாவில் பாக்தாத் யூதர்களின் சமூகத்தைச் சேர்ந்தவராவார்.
சுலோச்சன | |
---|---|
1920இல் சுலோச்சனா. | |
பிறப்பு | ரூபி மியர்சு 1907 புனே, மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
இறப்பு | 10 அக்டோபர் 1983[1] மும்பை, மகாராட்டிரம், இந்தியா | (அகவை 75–76)
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1920s–1980s |
இம்பீரியல் திரைப்பட நிறுவனத்தின் திரைப்படங்களில் தின்சா பில்லிமோரியாவுடன் இணைந்து நடித்தபோது, இவர் தனது காலத்திலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருந்தார். 1930 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வர் ரூபி பிக்சர்சு என்றத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் திறந்தார்.[2]
1973 ஆம் ஆண்டு திரைப்படங்களில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான இந்தியாவின் மிக உயர்ந்த விருதான தாதா சாகெப் பால்கே விருது, இவருக்கு வழங்கப்பட்டது.
திரைப்பட வாழ்க்கை
தொகுரூபி மியர்சு 1907இல் புனேவில் பிறந்தார்.[3] சதைப்பற்றுள்ள, சிறிய மற்றும் பழுப்பு நிற கண்களை கொண்ட சுலோச்சனா, இந்தியத் திரைப்படங்களின் ஆரம்பகால யூரேசிய பெண் நட்சத்திரங்களில் ஒருவராவார்.
இவர் ஒரு தொலைபேசி இயக்குபவராக பணிபுரிந்தபோது கோகினூர் திரைப்பட நிறுவனத்தின் மோகன் பாவ்னானி தனது திரைப்படங்களில் நடிக்க இவரை அணுகினார். இந்த வாய்ப்பால் உற்சாகமாக இருந்தபோதிலும், அந்த நாட்களில் நடிப்பு பெண்களுக்கு மிகவும் சந்தேகத்திற்குரிய தொழிலாக கருதப்பட்டதால் இவர் அதை நிராகரித்தார். எவ்வாறாயினும், பவ்னானி தனது முயற்சியைத் தொடர்ந்தார். இறுதியாக இவர் நடிக்க ஒப்புக் கொண்டார். ஆரம்பத்தில் இவர் எந்தவொரு நடிப்பையும் அறிந்திருக்கவில்லை. இம்பீரியல் திரைப்பட நிறுவனத்திற்கு செல்வதற்கு முன்பு பாவ்னானியின் இயக்கத்தில் இவர் ஒரு நட்சத்திரமானார்.
இவரது பிரபலமான படங்களில் டைப்பிஸ்ட் கேர்ள் (1926), பாலிடான் (1927) மற்றும் வைல்ட் கேட் ஆஃப் பம்பாய் (1927) ஆகியவை அடங்கும், இதில் இவர் ஒரு தோட்டக்காரர், ஒரு காவல்காரர், ஒரு ஐதராபாத் பெரிய மனிதன், ஒரு தெருவோர சிறுவன், ஒரு வாழைப்பழ விற்பனையாளர் மற்றும் ஒரு ஐரோப்பியர் உள்ளிட்ட எட்டு வேடங்களை நடித்துள்ளார்.[4]
1928 - 29 இல் மாதுரி (1928), அனார்கலி (1928) மற்றும் இந்திரா பி. ஏ. (1929) போன்ற மூன்று காதல் படங்களை இயக்கிய இயக்குனர் ஆர். எஸ். சௌத்ரி மௌனத் திரைப்பட சகாப்தத்தில் இவரது புகழின் உச்சத்தில் இவரைக் கொண்டு சென்றார். ஒரு காதி கண்காட்சியைத் திறந்து வைக்கும் மகாத்மாகாந்தி குறித்த ஒரு குறும்படம் காண்பிக்கப்பட்டபோது, அதனுடன் மாதுரியிலிருந்து சுலோச்சனாவின் மிகப் பிரபலமான நடனம் சேர்க்கப்பட்டது.
பேசும் படங்கள் வந்ததால் சுலோச்சனா திடீரென்று தனது வாழ்க்கையில் ஒரு மந்தமான நிலையைக் கண்டார். ஏனெனில் அப்போது ஒரு நடிகருக்கு இந்துஸ்தானியில் தேர்ச்சி தேவை. எனவே, மொழியைக் கற்க ஒரு வருடம் விடுமுறை எடுத்துக்கொண்ட இவர், மாதுரியின் (1932) பேசும் பதிப்பில் ஒரு சிறந்த மறுபிரவேசம் செய்தார்.
இவரது மௌன வெற்றிகளைத் தொடர்ந்து இந்திரா எம்.ஏ. (1934), அனார்கலி (1935) மற்றும் பம்பாய் கி பில்லி (1936) ஆகியவற்றுடன் சுலோச்சனா மீண்டும் களமிறங்கினார். இவர் மாதத்திற்கு 5000 ரூபாய் சம்பளத்தை ஈட்டிக் கொண்டிருந்தார், இவர் செவ்ரோலெட் என்ற வாகனத்தை கொண்டிருந்தார். மௌனத் திரைப்படங்களின் சகாப்தத்தின் மிகப்பெரிய கதாநாயகர்களில் ஒருவரான டி. பில்லிமோரியாவுடன் இணைந்து காதலியாக 1933 மற்றும் 1939 க்கு இடையில் பிரத்தியேகமாக பணிபுரிந்தார். அவர்கள் மிகவும் பிரபலமான இணையானார்கள்.
ஆனால் இவர்களின் காதல் கதை முடிந்ததும் இவர்களின் தொழில் வாழ்க்கை முடிந்தது. வாய்ப்புகளைத் தேடி சுலோச்சனா இம்பீரியலை விட்டு வெளியேறினார். புதிய, இளைய மற்றும் திறமையான நடிகைகள் திரைத்துறையில் நுழைந்தனர். அவர் கதாபாத்திர வேடங்களில் மீண்டும் நடிக்க முயற்சித்தார். ஆனால் இவை கைகூடவில்லை. இருப்பினும், சர்ச்சையைத் தூண்டும் சக்தி இவருக்கு இன்னும் இருந்தது. 1947 ஆம் ஆண்டில், மொரார்ஜி தேசாய் திலீப் குமார் - நூர் ஜெஹான் நடித்த ஜுக்னு என்றப் படத்தை தடைசெய்தார். ஏனெனில் இது சுலோச்சனாவின் பழங்கால வசீகரிப்பிற்காக ஒரு வயதான சக பேராசிரியராக தார்மீக ரீதியாக கண்டிக்கத்தக்க செயலைக் காட்டியது.
1953 ஆம் ஆண்டில், அவர் தனது அனார்கலியின் மூன்றாவது பதிப்பில் நடித்தார், ஆனால் இந்த முறை சலீமின் தாயாக துணை வேடத்தில் நடித்தார்.
சுலோச்சனா 1930 களின் நடுப்பகுதியில் தனது சொந்த திரைப்பட நிறுவனமான ரூபி பிக்சர்சை நிறுவினார். இந்திய திரைப்படத்திர்கு இவரது வாழ்நாள் பங்களிப்புக்காக 1973 ஆம் ஆண்டில் தாதா சாஹேப் பால்கே விருதைப் பெற்றார்.[5]
அவர் 1983 இல் மும்பையில் உள்ள தனது வீட்டில் இறந்தார்.
மேலும் படிக்க
தொகு- Great Masters of Indian Cinema: The Dadasaheb Phalke Award Winners, by D. P. Mishra, Publications Division, Ministry of Information and Broadcasting, Govt. of India, 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-230-1361-2. page 16.
- Actress Sulochana Cinema at the End of Empire: A Politics of Transition in Britain And India, by Priya Jaikumar, Duke University Press, 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8223-3793-2. Page 73.
- The Hundred Luminaries of Hindi Cinema, by Dinesh Raheja, Jitendra Kothari. India Book House Publishers, 1996. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7508-007-8. page 1871
குறிப்புகள்
தொகு- ↑ Ruby Myers, Sulochana - Biography பரணிடப்பட்டது 2012-10-11 at the வந்தவழி இயந்திரம் British Film Institute.
- ↑ Silent Screen Stars' India Heritage:Performing Arts:Cinema In India:Personalities:Silent Screen Stars.
- ↑ Queens of hearts The Tribune, 9 December 2007.
- ↑ Hansen, Kathryn (1998). "Stri Bhumika: Female Impersonators and Actresses on the Parsi Stage". Economic and Political Weekly 33 (35): 2299.
- ↑ Madurainetwork.com - Dada Saheb Phalke Award