ரெகிதி

மத்தியப் பிரதேச நகரம்

ரெகிதி (Rehti) என்பது இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தில் உள்ள செஹோர் மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி ஆகும். ரெகிதி 15 வார்டுகளாகப் பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது.

ரெகிதி
நகரம்
ரெகிதி is located in மத்தியப் பிரதேசம்
ரெகிதி
ரெகிதி
மத்தியப் பிரதேசத்தில் அமைவிடம்
ரெகிதி is located in இந்தியா
ரெகிதி
ரெகிதி
ரெகிதி (இந்தியா)
ஆள்கூறுகள்: 22°44′N 77°26′E / 22.73°N 77.43°E / 22.73; 77.43
நாடு இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்செஹோர்
அரசு
 • வகைசனநாயம்
 • நிர்வாகம்நாடாளுமன்றம்
பரப்பளவு
 • மொத்தம்12 km2 (5 sq mi)
ஏற்றம்
303 m (994 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்11,611
 • அடர்த்தி970/km2 (2,500/sq mi)
மொழிகள்
 • அதிராப்பூர்வமாகஇந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
அஞ்சல் குறியீட்டு எண்
466446
ஐஎசுஓ 3166 குறியீடுIN-MP
வாகனப் பதிவுMP-37

நிலவியல்

தொகு

ரெகிதி 22°44′N 77°26′E / 22.73°N 77.43°E / 22.73; 77.43 இல் அமைந்துள்ளது.[1] இந்த இடம் சராசரியாக 303 மீட்டர் (994 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இது விந்தியாச்சல் மலைத்தொடருக்கு அருகில் அமைந்துள்ளது. மேலும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. இதன் அருகிலுள்ள வானூர்தி நிலையம் போபால் வானூர்தி நிலையம், அருகிலுள்ள தொடருந்து நிலையம் 37 கிமீ தொலைவில் உள்ள ஹோஷங்காபாத் தொடருந்து நிலையம் ஆகும்.

மக்கள்தொகையியல்

தொகு

2011 ஆண்டைய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி, ரெகிதி பேரூராட்சியின் மக்கள் தொகை 11,611 ஆகும். இதில் 6,062 பேர் ஆண்கள் 5,549 பேர் பெண்களும் உள்ளனர். மக்கள் தொகையில் 0-6 வயதுக்குள் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 1,525 ஆகும். இது ரெகிதியின் மொத்த மக்கள் தொகையில் 13.13% ஆகும். ரெகிதி நகரின் கல்வியறிவு விகிதம் 80.57% ஆக உள்ளது. இது மாநில சராசரியான 69.32% ஐ விட கூடுதல் ஆகும். ரெகிதியில் கல்வியறிவு பெற்ற ஆடவர்கள் விகிதம் 88.03% என்றும், கல்வியறிவு பெற்ற பெண்கள் விகிதம் 72.50% என்றும் உள்ளது. ரெகிதி பேரூராட்சியில் மொத்தம் 2,215 வீடுகளுக்கு மேல் தண்ணீர், கழிவுநீர் போன்ற அடிப்படை வசதிகளை பெற்றுள்ளன. பேரூராட்சி எல்லைக்குள் சாலைகள் அமைக்கவும், அதன் அதிகார வரம்பிற்கு உட்பட்ட சொத்துக்களுக்கு வரி விதிக்கவும் இதன் உள்ளாட்சி நிர்வாகம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

வேலை விவரம்

தொகு

ஊரின் மொத்த மக்கள்தொகையில், 3,738 பேர் வேலையிலோ அல்லது வணிக நடவடிக்கைகளிலோ ஈடுபட்டுள்ளனர். இதில் 3,130 பேர் ஆண்கள், 608 பேர் பெண்களாவர். மொத்த உழைக்கும் மக்களான 3,738 பேரில், 86.76% பேர் குறிப்பிடத்தக்க வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் 13.24% பேர் விளிம்பு நிலை வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அணுகல்

தொகு

ரெகிதி நகரானது மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபாலில் இருந்து 70 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ரெகிதிதிக்கு பிற நகரங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அருகிலுள்ள தொடருந்து நிலையம் புதானி தொடருந்து நிலையம் ஆகும்.

முக்கிய இடங்கள்

தொகு

ரெகிதிக்கு அருகில் உள்ள பிரபலமான தலமாக சல்கன்பூர் கோயில் உள்ளது. இது ரெகிதியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. டெலவாடி காடுகள் இந்த நகருக்கு அருகிலேயே உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெகிதி&oldid=3742226" இலிருந்து மீள்விக்கப்பட்டது