ரேணுகா கேசரமடு
ரேணுகா கேசரமடு (Renuka Kesaramadu) இந்தியாவைச் சேர்ந்த ஒரு சமகால ஓவியரும் சிற்பியுமாவார். [1] இவர் தனது கூட்டுக் கலைக்கண்காட்சிகள் மற்றும் ஐரோப்பாவில் பட்டறைகளில் பங்கேற்றதன் மூலம் சர்வதேச அளவில் நன்கு அறியப்பட்டவர். [2] [3] [4] [5] இவர் இந்தியாவில் ஒரு சில சர்வதேச கலை கருத்தரங்குகள் மற்றும் கண்காட்சிகளையும் பொறுப்பேற்று நடத்தியிருக்கிறார்.[6] [7] [8]
ரேணுகா கேசரமடு | |
---|---|
ರೇಣುಕಾ ಕೆಸರಮಡು | |
எலிபண்டா குகைகளில் ரேணுகா கேசரமடு | |
தாய்மொழியில் பெயர் | ರೇಣುಕಾ ಕೆಸರಮಡು |
பிறப்பு | ரேணுகாம்மா கே. சி 1957 (அகவை 66–67) தும்கூர், கர்நாடகா, இந்தியா |
தேசியம் | இந்தியன் |
கல்வி | இளம் அறிவியல், கலையில் முதுகலை, நுண்கலையில் முதுகலை |
படித்த கல்வி நிறுவனங்கள் | கென் கலைப்பள்ளி கர்நாடக சித்ரகலா பரிஷத் பெங்களூர்ப் பல்கலைக்கழகம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | ஓவியம், வரைதல், சிற்பம் |
விருதுகள் | அகில இந்திய கலைப் போட்டி – கர்நாடக சித்ரகலா பரிஷத் 1993 பாரதிய ச்க்சன் மண்டல் 1987, 1988, 1989 அகில இந்திய கலைப் போட்டி – மைசூரு தசரா 1992 |
Elected | கர்நாடக லலித் கலா அகதாமி |
கல்வி மற்றும் தொழில்
தொகுரேணுகா 1957ஆம் ஆண்டில் இந்திய மாநிலமான கர்நாடகவின் தும்கூர் மாவட்டத்தில் கேசரமடு என்ற கிராமத்தில் பிறந்தார். பெங்களூரு கர்நாடக சித்ரகலா பரிஷத்திலிருந்து கலை வரலாற்றில் முதுநிலை நுண்கலை பட்டமும், தமிழ்நாட்டின் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுகலைப் பட்டமும் மற்றும் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் அறிவியல் இளங்கலை பட்டமும் பெற்றுள்ளார். [9] இவர் 5 ஆண்டுகள் படித்து முதல் தரவரிசையுடன் ஓவியத்தில் அரசு சான்றிதழ் பட்டமும் பெற்றார். [10] புகழ்பெற்ற கலைஞர் ஆர். எம். ஹதபாத்தின் அறிவுறுத்தலின் கீழ் பெங்களூருவின் கென் கலைப்பள்ளியிலிருந்து தங்கப் பதக்கமும் பெற்றார். [11] பெங்களூரில் உள்ள கர்நாடக லலித் கலா அகாதமியின் [12] [13][14] உறுப்பினராகவும், சிறந்த நுண்கலை விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.
விருதுகள் மற்றும் சிறப்புகள்
தொகுரேணுகா இந்தியாவில் நடைபெற்ற தேசிய கலைப் போட்டிகளில் பல விருதுகளையும், இவரது கலைக்கான ஏராளமான உள்ளூர் விருதுகளையும், இவரது சேவைக்காக ஒரு சில விருதுகளையும் பெற்றுள்ளார். [15]
- 1993 இல் பெங்களூரு கர்நாடக சித்ரகலா பரிஷத், அகில இந்திய கலைப் போட்டி
- 1987, 1988 மற்றும் 1989 இல் அகில இந்திய கலைப் போட்டி பாரதிய சிக்சன் மண்டல், மும்பை
- 1992 இல் மைசூர் தசராவில் நடந்த அகில இந்திய கலைப் போட்டி
- 2009 ல் அகில இந்திய கலைப் போட்டி பிஜாப்பூர்
- 1994 இல் துமகுருவில் சிறந்த ஆசிரியர் விருது
- 1993 ல் தும்கூரில் கன்னட ராஜ்யோத்ஸவ விருது
- 1999 இல் தும்கூருவில் பன்னாட்டு சுழற் சங்கத்தின் விருது
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுரேணுகா கேசரமடு இந்தியாவில் தும்கூரில் வசிக்கிறார், அதே நேரத்தில் இவரது படைப்புகள் பெங்களூருவில் உள்ள கலைக்கூடங்கள் மூலம் இயக்கப்படுகின்றன. இவரது கணவர் பி. எஸ். மல்லிகார்ஜுனா கன்னட இசைக்கலைஞரும் நாடக நடிகரும் ஆவார்.
மேலும் காண்க
தொகு- தும்கூர்
- கர்நாடகாவைச் சேர்ந்தவர்களின் பட்டியல்
- கர்நாடகாவின் கலை மற்றும் கலாச்சாரம்
குறிப்புகள்
தொகு- ↑ "La Salle Scampia: RENUKA KESARAMADU". பார்க்கப்பட்ட நாள் 11 February 2016.
- ↑ "La Salle Scampia: III Simposio Internazionale d'Arte Contemporanea di Scampia". பார்க்கப்பட்ட நாள் 11 February 2016.
- ↑ "Italy – Second Symposium Exhibition at PAN, the Arts Palace of Naples _ La Salle.org". Archived from the original on 9 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 February 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Simposio internazionale d'arte". prosormano.it. Archived from the original on 8 மார்ச் 2010. பார்க்கப்பட்ட நாள் 11 February 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Voci di artiste – recensione". oltreluna.women.it. Archived from the original on 24 பிப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 11 February 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "ದೇಶಿ-ವಿದೇಶಿ-ಕಲಾ-ಜುಗಲ್". prajavani.net/. பார்க்கப்பட்ட நாள் 16 February 2016.
- ↑ "Dialogue of Identities – An Exhibition at Jehangir Art Gallery". buzzintown.com. Archived from the original on 2017-02-10. பார்க்கப்பட்ட நாள் 2020-05-06.
- ↑ "Dialogue of Identities – 2016". patriciagoodrich.com. Archived from the original on 22 பிப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 11 February 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Renuka Kesaramadu". Google. பார்க்கப்பட்ட நாள் 14 February 2016.
- ↑ "Ken School of Art -www.bangalorebest.com". bangalorebest.com. Archived from the original on 18 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 14 February 2016.
- ↑ "Life as he saw it". The Hindu. 25 November 2006. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/life-as-he-saw-it/article3203487.ece.
- ↑ "KLA". lalitkalakarnataka.org. பார்க்கப்பட்ட நாள் 14 February 2016.
- ↑ "KLA". lalitkalakarnataka.org. பார்க்கப்பட்ட நாள் 14 February 2016.
- ↑ "Karnataka Lalitkala Academy – Members List" (PDF). lalitkalakarnataka.org. பார்க்கப்பட்ட நாள் 14 February 2016.
- ↑ "Awards – Renuka Kesaramadu". Google. பார்க்கப்பட்ட நாள் 14 February 2016.