ரேணுகா ரவீந்திரன்
ரேணுகா ரவீந்திரன் (Renuka Ravindran, இராஜகோபாலன்), இந்திய அறிவியலாளர் ஆவார். இவர் இந்திய அறிவியல் கழகத்தின் முதல் பெண் பீடாதிபதியாகப் பணியாற்றினார்.[1]
ரேணுகா ரவீந்திரன் Renuka Ravindran | |
---|---|
பிறப்பு | மே 11, 1943 |
வாழிடம் | |
தேசியம் | இந்தியர் |
பணியிடங்கள் | இந்திய அறிவியல் கழகம் |
கல்வி மற்றும் பணி
தொகுரேணுகா இராஜகோபாலன் சென்னை வேப்பேரி பிரசண்டேசன் கான்வென்ட்டின் மாணவியாக இருந்தார். பின்னர் சென்னை பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் பயின்றார்.[2] இவர் இந்திய அறிவியல் கழகத்தில் இருந்து கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் செருமனி ஆச்சென் பல்கலைக்கழகத்தில் இருந்து பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.[3][4] 1967 ஆம் ஆண்டில் இந்திய அறிவியல் கழகத்தில் இணைந்து கணிதவியல் பிரிவில் பேராசிரியராகவும், பின்னர் இந்திய அறிவியல் கழகத்தின் பீடாதிபதியாகவும் பணிபுரிந்தார். செருமனியில் கெய்செர்சிலாப்டன் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றினார்.[5] அவர் நேரியல்சாரா அலைகள் மற்றும் நியூட்டன் விதிக்கு உட்படாத திரவங்கள் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "PROFILE OF PROF. RENUKA RAVINDRAN". .ias.ac.in. பார்க்கப்பட்ட நாள் 26 April 2015.
- ↑ "DISTINGUISHED ALUMNAE". Women's Christian College. பார்க்கப்பட்ட நாள் 26 April 2015.
- ↑ "Renuka Ravindran Education". math.iisc.ernet.in. பார்க்கப்பட்ட நாள் 26 April 2015.
- ↑ "Renuka Ravindran". RWTH Aachen University. பார்க்கப்பட்ட நாள் 26 April 2015.
- ↑ "Passionate about taking science to young minds". The Telegraph. 21 May 2004. Archived from the original on 26 April 2015. பார்க்கப்பட்ட நாள் 26 April 2015.