ரேவா பீடபூமி

ரேவா பீடபூமி (Rewa Plateau) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ரேவா மாவட்டத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கியது.

ரேவா பீடபூமி
रीवा पठार
ரேவா பீடபூமி is located in மத்தியப் பிரதேசம்
ரேவா பீடபூமி
ரேவா பீடபூமி
ரேவா, ரேவா மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா
ரேவா பீடபூமி is located in இந்தியா
ரேவா பீடபூமி
ரேவா பீடபூமி
ரேவா பீடபூமி (இந்தியா)
உயர்ந்த புள்ளி
ஆள்கூறு24°15′N 81°10′E / 24.250°N 81.167°E / 24.250; 81.167
புவியியல்
அமைவிடம்ரேவா, ரேவா மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா
நிலவியல்
மலையின் வகைபீடபூமி

ரேவா பீடபூமி தெற்கில் கைமூர் மலைத்தொடருக்கும் வடக்கில் விந்திய மலைத்தொடர் அல்லது பின்ஜ் பகாருக்கும் இடையில் அமைந்துள்ளது. பின்ஜ் பகாரின் வடக்கே உப்ரிகர் என்று அழைக்கப்படும் வண்டல் சமவெளிகள் உள்ளன. இந்தப் பீடபூமி ரேவா மாவட்டத்தின் குசூர், சிர்மௌர் மற்றும் மகஞ்ச் வட்டங்களை உள்ளடக்கியது. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்ல உயரம் குறைகிறது. கைமூர் மலைத்தொடர் 450 மீட்டர் உயரத்திற்கும் (1,480 ) மேல் உள்ளது. தியோந்தரின் வண்டல் சமவெளிகள் சுமார் 100 மீட்டர் (330 ) ஆகும்.[1] கைமூர் மலைத்தொடரின் குறுக்கே தொடர்ச்சியான பீடபூமிகள் உள்ளன. இந்த நீர்நிலைகள் கொண்ட பீடபூமிகள், மேற்கில் பன்னா பீடபூமி தொடங்கி, பண்டேர் பீடபூமி மற்றும் ரேவா பீடபூமி, கிழக்கில் ரோக்தாசு பீடபூமியில் முடிவடையும்.[2]

வண்டல் மண்

தொகு

கென் பள்ளத்தாக்கு ரேவா பீடபூமியை சத்னா பீடபூமியிலிருந்து பிரிகிறது. தட்டையான தன்மை காரணமாக இவற்றை உயர் சமவெளிகள் என்றும் அழைக்கலாம். ரேவா பீடபூமியின் தெற்குப் பகுதி மட்டுமே மலைப்பாங்கானது.[3]

தென்மேற்கில் ரெக்லியிலிருந்து வடகிழக்கில் சத்னா வரை உள்ள ரேவா பீடபூமி பிளிசுடோசீன் மற்றும் சமீபத்திய காலகட்டங்களின் வண்டல்களால் மூடப்பட்டுள்ளது.[4]

ஆறுகளும் அருவிகளும்

தொகு

இந்தப் பீடபூமியில் தமசா ஆறு அல்லது தான்சு ஆறு மற்றும் சோன் மற்றும் அவற்றின் துணை ஆறுகள் பாய்கின்றன. இரண்டு ஆறுகளுக்கும் இடையிலான நீர்நிலையை கைமூர் மலைத்தொடர் உருவாக்குகிறது. பெரும்பாலான ஆறுகள் கைமூர் மலைத்தொடரில் உருவாகின்றன.[1]

ரேவா பீடபூமியிலிருந்து கீழே வரும்போது தமசா ஆறும் அதன் துணை ஆறுகளில் குறிப்பிடத்தக்க அருவிகளாகக் கக்காய் அருவி (127 மீ) தமாசின் துணை ஆறான பிகாட் ஆற்றிலும் கியோட்டி நீர்வீழ்ச்சி (98 மீ) மகானா ஆற்றிலும் (தமாசு துணை ஆறு), பாகுதி அருவி ஓடா ஆற்றிலும் (பெலாகா ஆற்றுன் துணை ஆறு) புர்வா அருவி தமாசு ஆற்றிலும் அமைந்துள்ளன.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Rewa district". Geography. Rewa district administration. பார்க்கப்பட்ட நாள் 2010-07-11.
  2. K. Bharatdwaj (2006). Physical Geography: Introduction To Earth. Discovery Publishing House. p. 158. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788183561631. பார்க்கப்பட்ட நாள் 2010-06-28.
  3. Sharma, Shri Kamal (2000). Spatial framework and economic development. Northern Book Centre. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788172111113. பார்க்கப்பட்ட நாள் 2010-07-11.
  4. Sharma, Shri Kamal (2000). Spatial framework and economic development: a geographical perspective. Northern Book Centre. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788172111113. பார்க்கப்பட்ட நாள் 2010-07-11.
  5. K. Bharatdwaj (2006). Physical Geography: Hydrosphere. Discovery Publishing House. p. 154. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788183561679. பார்க்கப்பட்ட நாள் 2010-07-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேவா_பீடபூமி&oldid=4143404" இலிருந்து மீள்விக்கப்பட்டது