ரோகித் வேமுலாவின் தற்கொலை

ரோகித்து சக்கரவர்த்தி வேமுலா (Rohith Chakravarti Vemula, சனவரி 30, 1989[1] – சனவரி 17, 2016)[2] ஐதராபாத்து பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்காக படித்துக் கொண்டிருந்த மாணவர் ஆவார். சனவரி 17, 2016 அன்று அவர் மேற்கொண்ட தற்கொலை நாடெங்கும் கிளர்ச்சியையும் கோபத்தையும் தூண்டியுள்ளது; மீயுயர் கல்வி நிறுவனங்களில் தலித்களுக்கும் மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கும் இழைக்கப்படும் அநீதியை வெளிக்கொணருமாறு ஊடகங்களில் பரவலாக பதியப்படுகின்றது.[3] அவரது தற்கொலைக் கடிதத்தின்படி, கல்லூரி தங்குவிடுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அவர் தங்கியிருந்த உம்மா அண்ணா என்பவரின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.[4]

ரோகித்து வேமுலா
பிறப்புரோகித்து சக்கரவர்த்தி வேமுலா
(1989-01-30)30 சனவரி 1989
இந்தியா
இறப்பு17 சனவரி 2016(2016-01-17) (அகவை 26)
ஐதராபாத்து, இந்தியா
இறப்பிற்கான
காரணம்
தூக்கிட்டு தற்கொலை
தேசியம்இந்தியர்

257 பேர் உயிரிழந்த மும்பை குண்டுவெடிப்புகளில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட யாகூபு மேமனுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்த ரோகித்திற்கும் அகில பாரதிய வித்யார்த்தி பரிசத்தின் செயற்பாட்டாளருக்கும் இடையே எழுந்த சண்டையைத் தொடர்ந்து ரோகித் மற்றும் அம்பேத்கர் மாணவர் சங்கத்தின் ஐந்து நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது; சூலை 2015இல் மாதந்தோறும் அவருக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை 25,000 நிறுத்தப்பட்டதுடன் கல்லூரி தங்கு விடுதியிலிருந்தும் வெளியேற்றப்பட்டார்.[5] இருப்பினும் பல்கலைக்கழக அலுவலர் உதவித்தொகை நிறுத்தப்பட்டதை மறுத்தார்; "ஆவணப்பணி"களால் வழங்கல் தாமதமானதாகத் தெரிவித்தார்.[5] பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி குமாரி,[6] இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சித் தலைவர் சீத்தாராம் ஏச்சூரி,[7] இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) கட்சியின் கவிதா கிருஷ்ணன்[8] தலித் எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான மீனா கந்தசாமி ஆகியோர் .[9]இதனை "நிறுவனக் கொலை" என விவரித்துள்ளனர்.

ரோகித்தின் தற்கொலையைத் தூண்டியதாக பாரதிய ஜனதா கட்சியின் செகந்தராபாது நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய தொழில் நலத்துறை அமைச்சருமான பி. தத்தாத்திரேயா மீதும் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அப்பா ராவ் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.[10][11]

மேற்சான்றுகள்

தொகு
  1. Saubhadra, Chatterji (20 January 2016). "Official certificate scotches doubts over Rohith's Dalit identity". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 20 January 2016.
  2. Aji, Sowmya. "Probe suggests Rohith Vemula's family not dalit: Police". The Economic Times. economictimes.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 23 January 2016.
  3. "Outrage over dalit scholar Rohith Vemula suicide - The Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2016-01-20.
  4. "Full text: Dalit scholar Rohith Vemula's suicide note - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2016-01-20.
  5. 5.0 5.1 "Behind Rohit Vemula's suicide: how Hyderabad Central University showed him the door". The Indian Express. indianexpress.com. 2016-01-19. பார்க்கப்பட்ட நாள் 2016-01-20.
  6. "Govt terrorism forced Dalit scholar to commit suicide: Mayawati". The Indian Express. http://indianexpress.com/article/india/india-news-india/govt-terrorism-forced-dalit-scholar-to-commit-suicide-mayawati/. பார்த்த நாள்: 22 January 2016. 
  7. "Sitaram Yechury dubs Rohit Vemula's suicide as 'institutional murder'". newswala.com. Archived from the original on 2016-01-26. பார்க்கப்பட்ட நாள் 2016-01-20.
  8. "Dalit Student's Suicide: What we know about Rohith Vemula's death". dnaindia.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2016-01-20.
  9. "'Vemula's Death an Institutional Murder'". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2016-01-20.
  10. "Rohith's caste kicks off storm, his tiff with ABVP over poster goes viral". Deccan Chronicle. Jan 20, 2016. http://deccanchronicle.com/current-affairs/200116/caste-of-rohith-kicks-off-storm-rohith-s-tiff-with-abvp-poster-goes-viral.html. பார்த்த நாள்: 20 January 2016. 
  11. Ghosh, Deepshikha (19 January 2016). "Huge Student Protests Against Rohith Vemula's Death: 10 Developments". Hyderabad: என்டிடிவி. http://www.ndtv.com/cheat-sheet/protests-outside-ministers-home-over-hyderabad-students-suicide-10-developments-1267405. பார்த்த நாள்: 19 January 2016. 

வெளியிணைப்புகள்

தொகு
தமிழ் ஊடகங்களில்