ஆலிவ் கேத்ரின் கிராடாக் (Olive Katherine Craddock) (1894 சனவரி 22 - இறப்பு: 1926 சூலை 14) இவர் ஓர் பிரித்தானிய இந்தியாவில் பயிற்சி பெற்ற ஒரு ஆங்கிலோ இந்திய நடனக் கலைஞர் ஆவார். இவர் ரோசனாரா என்ற பெயரில் நடனமாடினார். பிரித்தனிலும் அமெரிக்காவிலும் மத்திய இந்திய நடன நுட்பங்களை நிகழ்த்திக் காட்டியதற்காக இவர் அறியப்பட்டார். இவர் தனது முப்பது வயதில் குடல்வாலழற்சியால் இறந்தார். [2]

ரோசனாரா
ரோசனாரா
பிறப்புஆலிவ் கேத்ரின் கிராடாக்
1894 சனவரி 22
கொல்கத்தா, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு1926 சூலை 14 (aged 32)
ஆஷெவில்லி, வட கரோலினா, அமெரிக்கா
இறப்பிற்கான
காரணம்
குடல்வாலழற்சி[1]
தேசியம்பிரித்தன்
பணிநடனக் கலைஞர்

சுயசரிதை தொகு

கிராடாக் 1892 சனவரி 22, அன்று கொல்கத்தாவில் பிறந்தார். இவரது தந்தை ஜான் ஜேம்ஸ் நோலன் கிராடாக் என்பவராவார். அவர் ஒரு ஆங்கிலோ-இந்தியன் மற்றும் இவரது தாயார் மாபெல் மேரி ஆன் ஆடம்ஸ் என்பவராவார். இவர் 1909இல் பிரித்தனுக்குச் செல்வதற்கு முன்பு இந்தியாவில் நடனமாடக் கற்றுக்கொண்டார். [3] . இளவரசி ரோசனாரா பேகம் என்ற பிரபலத்தின் மீது ஈர்க்கப்பட்டு ரோசனாரா என்ற பெயரை கிராடாக் வைத்துக் கொண்டார். [1]

 
ராபர்ட் ஹென்றி என்பவர் வரைந்த ரோஷனாரா ஓவியம்

இவர் லோயி புல்லரின் நிறுவனத்துடன் நடனமாடினார். பின்னர் ஸ்பானிஷ் நடனக் கலைஞர் கார்மென் டர்டோலா வலென்சியாவிடம் பயிற்சி பெற்றார். 1911 ஆம் ஆண்டில் அவர் லண்டனில் ஆஸ்கார் ஆஷ்சின் கிஸ்மெட் மற்றும் பின்னர் ஸ்கீஹெராசாடில் ஜோபீட் என நடனமாடினார் . இந்த பாத்திரம் கோவன்ட் கார்டனில் பாலேஸ் ரஸ்ஸுடன் இருந்தது. அடுத்த ஆண்டு இவர் அண்ணா பாவ்லோவாவின் நடன நிறுவனத்துடன் ஒரு சிறப்பு நடனக் கலைஞராக தோன்றினார். [3] 1880களில் ஓரியண்டல் ஓபரா லக்மே [4] இலிருந்து பிரெஞ்சு இசையமைப்பாளர் லியோ டெலிப்ஸால் எடுக்கப்பட்ட பல நடனங்களை இவர் நிகழ்த்தியுள்ளார்.

கிராடாக் 1916ஆம் ஆண்டில் அமெரிக்காவில் வேலை செய்யத் தொடங்கினார். அங்கு அவர் வௌடீவில் திரையரங்குகளில் தோன்றினார். 1917 ஆம் ஆண்டில் இவரும் ஜப்பானிய நடனக் கலைஞரான மிச்சியோ இட்டேவும் அடோல்ஃப் போல்மின் நிறுவனமான பாலே இன்டைம் என்பதுடன் சிறப்பு நடனக் கலைஞர்களாக இருந்தனர். [5] ரோசனாரா இந்தியாவில் இசை படித்து பிரித்தன் பாடகராக இருந்த ரத்தன் தேவியுடன் இணைந்து பணியாற்றினார். தேவியுடன் அவரது கணவர் ஆனந்த குமாரசாமியும் போஸ்டன் கலை அருங்காட்சியகத்தில் இந்திய கலாச்சாரத்தில் நிபுணராகப் பணியாற்றினார். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய பாணி நடனங்களைக் காட்டிய ரூத் செயின்ட் டெனிஸுக்கு மாறாக ரோசனாரா ஒரு உண்மையான நாட்ச் நடனக் கலைஞராக இருந்ததைப் பற்றி குமாரசாமி எழுதினார். [6]

கிராடாக் 1923இல் நியூயார்க்கில் ஒரு "அன்னிய" குடியேறியவராக வந்தார். கிராடாக் நடனம் கற்றுக் கொடுப்பவராக இருந்தார். பின்னர் வந்த திரைப்பட நட்சத்திரமான பெட் டேவிஸ் இவரது மாணவர்களில் ஒருவர். [3] குடல்வாலழற்சியினால் பாதிக்கப்பட்ட இவர் தனது முப்பது வயதில் 1926 சூலை 16 அன்று வட கரோலினாவின் ஆஷெவில்லில் இறந்தார். [2] . [1]

படைப்புகள் தொகு

ரோசனாரா தனது பத்து நடனங்களை பதிப்புரிமை பெற்றிருந்தார். [7]

மரபு தொகு

அமெரிக்காவில் ஓரியண்டல் பாணி நடனங்களை பிரபலப்படுத்திய அமெரிக்க நடனக் கலைஞர் ரூத் செயின்ட் டெனிஸுடன் கிராடாக் ஒப்பிடப்பட்டார். கிராடாக் இந்தியாவில் பயிற்சி பெற்றிருந்தாலும், இவர் தனது நடனத்தின் முழுமையை மேம்படுத்த தனது நேரத்தை செலவிட்டார். ரூத் செயின்ட் டெனிஸ் ஓரியண்டல் பாணி நடனத்தால் ஈர்க்கப்பட்டார். மேலும் இவர் தனது சொந்த நடனப் பள்ளியை நிறுவினார். அங்கு இவரது மாணவர்களில் மார்த்தா கிரஹாம் என்பவரும் அடங்குவார். கிரடாக் தனது சொந்த பள்ளியை ஒருபோதும் நிறுவவில்லை. [3] [8]

ரோசனாராவை ஆஷ்கான் ஓவியர் ராபர்ட் ஹென்றி வரைந்துள்ளார். இந்த ஓவியம் 2000ஆம் ஆண்டில் 132,500 அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டது. [9]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Olive Craddock". National Portrait Gallery. பார்க்கப்பட்ட நாள் 2015-06-06.
  2. 2.0 2.1 "Roshanara Is Dead. Famous Dancer's Body Is Being Brought Here From Asheville, N.C.". த நியூயார்க் டைம்ஸ். 16 July 1926. https://query.nytimes.com/gst/abstract.html?res=9D01E4DF1331EE3ABC4E52DFB166838D639EDE. பார்த்த நாள்: 2015-06-06. 
  3. 3.0 3.1 3.2 3.3 Roshanara, Victoria and Albert Museum, Retrieved 14 October 2015
  4. Time and the Dancing Image. https://books.google.com/books?id=uaECpiO__W8C&pg=PA147. 
  5. Time and the Dancing Image. https://books.google.com/books?id=uaECpiO__W8C&pg=PA147. 
  6. Shiva Onstage: Uday Shankar's Company of Hindu Dancers and Musicians in Europe and the United States, 1931–38. https://books.google.com/books?id=Y-3NspSRoAAC&pg=PA135. 
  7. Dances, Viaf File, Retrieved 17 October 2015
  8. Deborah Jowitt (1989). Time and the Dancing Image. University of California Press. பக். 147–148. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-520-06627-4. https://books.google.com/books?id=uaECpiO__W8C&pg=PA147. 
  9. American Paintings, The City Review, Retrieved 14 October 2015

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Olive Katherine Craddock
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோசனாரா&oldid=2939300" இலிருந்து மீள்விக்கப்பட்டது