ரோசினி தினகர்
ரோசினி தினகர் ( Roshni Dinaker ) என்பவர் ஒரு இந்திய திரைப்பட ஆடை வடிவமைப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் ஆவார். இவர் கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படத் துறைகளில் ஆடை வடிவமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். மேலும் இவர் 2018 இல் மலையாளத் திரைப்படமான மை ஸ்டோரி படம் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். [1] [2]
ரோசினி தினகர் | |
---|---|
பிறப்பு | குடகு மாவட்டம், கருநாடகம் |
பணி | திரைப்பட இயக்குநர், ஆடைகலன் வடிவமைப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2002–தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | தினகர் ஓ. வி. |
பிள்ளைகள் | 2 |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுரோசினி தினகர் இந்தியாவின், கருநாடகத்தின் குடகு மாவட்டத்தில் உள்ள மடிக்கேரியில் ஒரு மலையாள கிறித்தவக் குடும்பத்தில் டாமி மேத்யூ மற்றும் ஆஷா டோமி இணையரின் மகளாகப் பிறந்தார். இவரது தந்தை கேரளத்தின் கோட்டயம் ராமாபுரத்தைச் சேர்ந்தவர். இவர் பெங்களூரில் படித்தவர் ஆவார். இவர் ஓ. வி. தினகர் என்பவரை மணந்தார். இந்த இணையருக்கு ஆதித்யா மற்றும் ஆருஷ் தினகர் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். [3]
தொழில்
தொகுரோசினி தினகர் திரையுலகில் நுழைவதற்கு முன்பு பெருநிறுவன உலகில் பணியாற்றினார். [4] 2002 ஆம் ஆண்டில் இருந்து தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராக திரைப்படத் துறையில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார் ரோசினி தினகர். இவர் ஆடை வடிவமைப்பாளரான பானு அதையாவின் பணிகளால் ஈர்க்கப்பட்டவர் ஆவார். [5] [6] இவர் ஆடை வடிவமைப்பாளராக கன்னட திரைப்படமான சுபம் படத்தின் வழியாக அறிமுகமானார். டி. எஸ். நாகபரணா இயக்கிய கல்லரலி ஊவாகி படத்தில் இவர் பணியாற்றியதற்காக சிறந்த ஆடை வடிவமைப்பாளராக (2006-2007) கருநாடக மாநில அரசு திரைப்பட விருதைப் பெற்றார். ஆடை வடிவமைப்பாளராக 50க்கும் மேற்பட்ட படங்களில் இவர் பணியாற்றியுள்ளார். [7] பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் பார்வதி மேனன் நடித்த மை ஸ்டோரி என்ற மலையாளத் திரைப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தின் படப்பிடிப்பு 2017, நவம்பர், முதல் நாள் அன்று போர்த்துகலில் தொடங்கியது. பின்னர் படம் 2018 சூலை எட்டாம் நாள் வெளியானது. [8] [9] [10] இப்படத்தில் படத்தின் ஆடை வடிவமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும், ரோசினி தினகர் பனியாற்றினார். [11]
2018 ஆம் ஆண்டில், மூன்று பெண்களைப் பற்றிய கதையைக் கொண்ட மெட்டமார்போசிஸ் என்ற திரைப் படத்தில் பணிபுரிவதாக இவர் தெரிவித்தார். [12] [13] 2019 அக்டோபர் மாத நிலவரப்படி, ரோசினி தினகர் 2 ஸ்ட்ரோக் என்ற மலையாள அதிரடித் திரைப்படத்தை இயக்குகிறார். [14] இதன் வழியாக மலையாளத் திரையுலகில் அதிரடிப் படத்தை இயக்கிய முதல் பெண்மணி என்ற பெயரை பெற இருக்கிறார். [15]
திரைப்படவியல்
தொகுதினகரன் பணியாற்றிய படங்களின் முழுமையான பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்டு | திரைப்படம் | இயக்கம் | பணி |
---|---|---|---|
2006 | கல்லரலி ஊவாகி [16] | டி. எஸ். நாகாபரணா | ஆடை வடிவமைப்பாளர் |
2012 | சாருலதா [17] | பொன் குமரன் | ஆடை வடிவமைப்பாளர் |
2016 | யசோகதே [18] | வினோத் ஜே ராஜ் | ஆடை வடிவமைப்பாளர் |
2018 | மை ஸ்டோரி | ரோஷ்னி தினகர் | இயக்குநர், தயாரிப்பாளர், ஆடை வடிவமைப்பாளர் [19] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Prithviraj will head to Portugal for a romantic musical". 2016-06-08. பார்க்கப்பட்ட நாள் 2016-07-25.
- ↑ "Prithviraj, Parvathy reunite in My Story". 2016-07-16. பார்க்கப்பட்ட நாள் 2016-07-25.
- ↑ N., Jayachandran (30 December 2016). "Roshni Dinaker reveals the story behind 'My Story'". மலையாள மனோரமா. http://english.manoramaonline.com/entertainment/interview/roshni-dinaker-on-prithviraj-parvathy-movie-my-story.html. பார்த்த நாள்: 30 January 2017.
- ↑ "Designs on celluloid". Deccan Herald. 2016-05-14. பார்க்கப்பட்ட நாள் 2021-03-27.
- ↑ R, Shilpa Sebastian (2020-06-09). "Roshni Dinaker shares her experiences". The Hindu. https://www.thehindu.com/life-and-style/roshni-dinaker-will-take-a-webinar-class-on-costume-designing/article31786141.ece. பார்த்த நாள்: 2021-03-27.
- ↑ "Designs on celluloid". Deccan Herald. 2016-05-14. பார்க்கப்பட்ட நாள் 2021-03-27.
- ↑ Bindu Gopal Rao (2016-05-15). "Designs on celluloid". Deccanherald.com. பார்க்கப்பட்ட நாள் 2016-07-25.
- ↑ "I've got a hang of the industry: Roshni Dinakar". Deccanchronicle.com. பார்க்கப்பட்ட நாள் 2016-07-25.
- ↑ "Shaan Rahman composes for My Story". Timesofindia.indiatimes.com. 2016-07-16. பார்க்கப்பட்ட நாள் 2016-07-25.
- ↑ "Prithviraj, Parvathy reunite in My Story". Timesofindia.indiatimes.com. 2016-07-16. பார்க்கப்பட்ட நாள் 2016-07-25.
- ↑ "Roshni Dinaker". IMDb. பார்க்கப்பட்ட நாள் 2021-03-27.
- ↑ Nagarajan (2018-07-05). "'My Story' is a timeless love story, says Roshni". https://www.thehindu.com/entertainment/movies/roshni-dinaker-on-her-movie-my-story/article24338563.ece. பார்த்த நாள்: 2021-03-28.
- ↑ "Roshni Dinaker: I don't have the courage to direct another Malayalam film after My Story - Times of India". பார்க்கப்பட்ட நாள் 2021-03-28.
- ↑ "Roshni Dinaker to direct an action film next". பார்க்கப்பட்ட நாள் 2021-03-28.
- ↑ "Roshni Dinaker to direct an action film next". பார்க்கப்பட்ட நாள் 2021-03-28.
- ↑ "Designs on celluloid" (in ஆங்கிலம்). 2016-05-14. பார்க்கப்பட்ட நாள் 2021-03-28.
- ↑ "Designs on celluloid" (in ஆங்கிலம்). 2016-05-14. பார்க்கப்பட்ட நாள் 2021-03-28.
- ↑ "Designs on celluloid" (in ஆங்கிலம்). 2016-05-14. பார்க்கப்பட்ட நாள் 2021-03-28.
- ↑ "Roshni Dinaker". பார்க்கப்பட்ட நாள் 2021-03-28.