ரோசென்மண்டாக்

ரோசென்மண்டாக் (Rosenmontag (ஆங்கிலம்: Rose Monday[1]) என்பது செர்மனியத் திருவிழா ஆகும். இது ஒவ்வோர் ஆண்டும் கிறித்தவரகளின் தவக் காலம் தொடங்கும் நாளான திருநீறுப் புதனுக்கு முந்தைய திங்களன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.[2] செவ்வாயன்று கொண்டாடப்படும் "மார்டி கிறாஸ்" இதே போன்றதுதான். ரோஸ் திங்கள் ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம் (யுபன்) உள்ளிட்ட ஜெர்மன் மொழி பேசும் நாடுகளில் கொண்டாடப்படுகிறது, குறிப்பாக பெர்ன், டூசல்டார்ஃப், ஆசேன் மற்றும் மெயின்ஸ் ஆகியவற்றில் ரைன்லேண்ட் கார்னிவல் கோட்டை போன்ற இடங்களில் ,[3] பான், தியூசல்டோர்ஃபு,[4] ஆஃகன், மைன்ஸ்.[5] மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ரோசென்மண்டாக்
Rosenmontag
ஆஃகன்னில் 2009 இல் நடந்த ரோஸ் திங்கள் திருவிழாவில் குழந்தை ஆடைகளில் உள்ளவர்கள்.
நாள்திருநீறுப் புதனுக்கு முந்தைய திங்கள்
2024 இல் நாள்12 பெப்ரவரி
2025 இல் நாள்3 மார்ச்
2026 இல் நாள்16 பெப்ரவரி
2027 இல் நாள்8 பெப்ரவரி
நிகழ்வுஆண்டு

இந்தத் திருவிழாவானது ஜெர்மன் மொழியில் ரோசென்மண்டாக் என்று அழைக்கப்படுகிறது. இது ரோசஸ் மொண்டாக் என்ற இரு சொற்களின் சேர்கையாகும். இதில் ரோசஸ் என்பதன் பொருள் களியாட்டம் என்பதாகும் மொன்டாக் என்பதன் பொருள் திங்கள் என்பது ஆகும்.

மீள்பார்வை

தொகு

இந்தத் திருவிழாவில் கலந்துகொள்ளும் இளைஞர்கள், பொதுமக்கள் போன்றவர்கள் அரசியல் தலைவர்களின் பொம்மைகளைச் செய்து நையாண்டி செய்தபடி வருகிறார்கள். அப்படி வருபவர்களும் தங்களுக்குப் பிடித்த கதாபாத்திரங்கள்போல ஒப்பனை செய்துகொண்டு வருவது பார்ப்பவர்களை நகைப்பில் ஆழ்த்தும். திருவிழாவுக்காக வடிவமைக்கப்படும் உலக அரசியல் தலைவர்களின் கேலிச் சித்திரப் பொம்மைகளைப் பார்க்க திருவிழாவின்போது உலகம் முழுவதிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஜெர்மனியில் குவிந்துவிடுகின்றனர். 2018 ஆண்டு நடைபெற்ற இந்த விழாவில் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தும் 74 வகையாகன கேலிச் சித்திர பொம்மைகள் இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் இடம்பெற்றன.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Rosenmontag 2018: What is it and how is it celebrated?". www.aljazeera.com. Retrieved 2018-02-12.
  2. "Shrove Monday in Germany". timeanddate.com. Retrieved 2013-02-10.
  3. "Karneval revellers brave chilly rain for Rosenmontag parade" பரணிடப்பட்டது 2009-02-25 at the வந்தவழி இயந்திரம், AFP/thelocal.de 23 February 2009. Retrieved 24 February 2009
  4. Riedemann, Margaret. "Rose Monday Parade – Carnival Monday in Duesseldorf". Archived from the original on 2013-02-16. Retrieved 2013-02-10.
  5. Abrams, Michael (31 January 2013). "Mainz: Colorful Rosenmontag parade is the highlight of Fastnacht". Stars and Stripes. Archived from the original on 2013-05-13. Retrieved 2013-02-10.
  6. ரேணுகா (23 பெப்ரவரி 2018). "நையாண்டி பொம்மைத் திருவிழா!". கட்டுரை. தி இந்து தமிழ். Retrieved 23 பெப்ரவரி 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோசென்மண்டாக்&oldid=3578171" இலிருந்து மீள்விக்கப்பட்டது