ரோடியம்(III) அயோடைடு
உரோடியம்(III) அயோடைடு (Rhodium(III) iodide) RhI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்பட்டும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கருப்பு நிறத்தில் ஒரு திண்மமாக இது காணப்படுகிறது.[1]
இனங்காட்டிகள் | |
---|---|
15492-38-3 | |
ChemSpider | 76627 |
EC number | 239-521-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 4428348 |
| |
பண்புகள் | |
I3Rh | |
வாய்ப்பாட்டு எடை | 483.62 g·mol−1 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H413 | |
P273, P501 | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | ரோடியம்(III) புரோமைடு; ரோடியம்(III) குளோரைடு; ரோடியம் முப்புளோரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுநீரிய பொட்ட்டாசியம் அயோடைடுடன் ரோடியம்(III) புரோமைடு சேர்த்து வினைபுரியச் செய்தால் உரோடியம்(III) அயோடைடு உருவாகிறது.[1]
- RhBr3 + 3KI → RhI3 + 3KBr
கட்டமைப்பு
தொகுஅலுமினியம் குளோரைடு (AlCl3), இட்ரியம்(III) குளோரைடு (YCl3) போன்ற சேர்மங்களின் மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்ட அதே படிக கட்டமைப்பையே உரோடியம்(III) அயோடைடும் ஏற்கிறது. கனசதுர நெருக்கப் பொதிவு அயோடைடு அயனிகளும். ரோடியம் அயனிகளும் எண்முக மூலக்கூற்று வடிவத்தின் இடைவெளிகளில் நிரம்பி உருவாகும் அடுக்குகளை இக்கட்டமைப்பு கொண்டுள்ளது. [2]
வினைகள்
தொகுநீரிலி வடிவத்தில் மட்டுமே உரோடியம்(III) அயோடைடு காணப்படுகிறது. நீரேற்றுகளாக இது உருவாவதில்லை.[1] தொடர்புடைய [RhI6]3− என்ற எதிர்மின் அயனியும்[1] உருவாகாது என முன்னதாகக் கூறப்பட்டது. ஆனால் ரோடியம்(III) குளோரைடை (RhCl3·3H2O) ஐதரயோடிக் அமிலம் மற்றும் பிப்பெரசீன் ஆகியவற்றாலான அடுக்கின் வழியாக விரவல் வினைக்கு உட்படுத்தி பின்னர் தயாரிக்கப்பட்டது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. pp. 1119–1120. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
- ↑ Brodersen, K.; Thiele, G.; Recke, I. (1968). "Strukturuntersuchungen an Rhodiumhalogeniden". J. Less-Common Met. 14 (1): 151–152. doi:10.1016/0022-5088(68)90214-2.
- ↑ Bujak, Maciej (2015). "Efficient Diffusion-Controlled Ligand Exchange Crystal Growth of Isostructural Inorganic–Organic Halogenidorhodates(III): The Missing Hexaiodidorhodate(III) Anion". Cryst. Growth Des. 15 (3): 1295–1302. doi:10.1021/cg501694d.