லக்சிமி சிவனேஸ்வரலிங்கம்

தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்

லக்சிமி சிவனேஸ்வரலிங்கம் (Luksimi Sivaneswaralingam, பிறப்பு: செப்டம்பர் 26, 1990) தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். பல்வேறு வகையிலான பாடல்களை யூடியூப், இன்ஸ்ட்டாகிராம் ஆகியவற்றின் ஊடாகப் பகிர்ந்து வருகிறார்.[1]

வாழ்க்கைச் சுருக்கம்

தொகு

இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்த இவர் புலம் பெயர்ந்து கனடாவில் தொராண்டோவில் வசித்து வருகிறார்.[2] இலக்சிமி தனது மூன்றாவது அகவையில் இசை கற்றுக் கொண்டார்.[1][2]

கனடாவின் பல மேடைகளில் இவர் பாடி வரும் இவர் பரத நாட்டியக் கலைஞரும் ஆவார். இலக்சிமி தொறாண்டோ பல்கலைக்கழகத்தில் மேற்கத்தைய செவ்வியலிசைத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். தற்போது முதுகலைக் கல்வியை தொடர்கின்றார்.[3] அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கனடாக் கிளையில் படித்து கருநாடக இசையில் பட்டம் பெற்றார். ஐபிசி தமிழ் வானொலி நடத்திய இன்னிசைக் குரல் நிகழ்ச்சியில் முதலாவது இடத்தைப் பெற்றார்.[3]

சிறப்புகள்

தொகு
  • டி. இமானின் இசையில் 2017 இல் வெளிவந்த போகன் திரைப்படத்தில் கவிஞர் தாமரை இயற்றிய செந்தூரா என்ற பாடலைப் பாடிப் பிரபலம் அடைந்தார்.[2][4][5]
  • இப்படை வெல்லும் இசைத்தொகுப்பை வெளியிட்டார்.[6]
  • 2018 ஆம் ஆண்டின் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விஜய் விருது இவருக்கு வழங்கப்பட்டது.[7]
  • 2018 இல் வெளியான டிக் டிக் டிக் தமிழ்த் திரைப்படத்தின் தெலுங்கு மொழிமாற்றுத் திரைப்படத்தில் கண்ணையா என்ற பாடலைப் பாடியுள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Singer from Sydney, tabla from Chennai: How Kollywood composers use technology to record songs". The News Minute. 17-04-2017. https://www.thenewsminute.com/article/singer-sydney-tabla-chennai-how-kollywood-composers-use-technology-record-songs-60484. 
  2. 2.0 2.1 2.2 Vasudevan, K. v (22-02-2017). "Meet the ‘Senthoora’ girl". தி இந்து. http://www.thehindu.com/entertainment/movies/It-was-Instagram-that-led-Imman-to-his-latest-find-Luksimi-Sivaneswaralingam/article17346718.ece. 
  3. 3.0 3.1 "லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம். தென்னிந்தியத் திரையில் ஒலிக்கும் கனடியத் தமிழ் குரல்". http://ekuruvi.com/luksimi-sivaneswaralingam-2/. 
  4. Suganth, M (16 மார்ச் 2017). "Imman’s new find is from Denmark - Times of India". The Times of India. TNN. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/immans-new-find-is-from-denmark/articleshow/57651143.cms. 
  5. Upadhyaya, Prakash (3-12-2016). "Jayam Ravi, Arvind Swamy's Bogan audio, trailer launched on Saturday". International Business Times, India Edition. https://www.ibtimes.co.in/jayam-ravi-arvind-swamys-bogan-music-trailer-be-launched-saturday-will-audio-songs-live-706669. 
  6. "Imman has introduced fresh voices in 'Ippadai Vellum' album" (in en). Sify. 12-10-2017 இம் மூலத்தில் இருந்து 2017-10-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171013061747/http://www.sify.com/movies/imman-has-introduced-fresh-voices-in-ippadai-vellum-album-news-tamil-rknkgzfhbhhdf.html. 
  7. "விஜய் சேது­பதி, நயன்­தாரா, ஏ.ஆர். ரஹ்­மான், சிவ­கு­மா­ருக்கு விஜய் விரு­து­கள்!". தினமலர். 6-06-2018. http://www.dinamalarnellai.com/web/news/50482. [தொடர்பிழந்த இணைப்பு]