லக்னாவரம் ஏரி
இலக்னாவரம் ஏரி (தெலுங்கு: లక్నవరం సరస్సు, Laknavaram Lake) தெலுங்கானா மாநிலம் கோவிந்தராவ்பேட்டை மண்டலத்தில் வாரங்கல் நகரிலிருந்து சுமார் 80 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஒரு ஏரி.[1] 10,000 ஏக்கர் பரப்பளவில் பரவி, சுமார் 2.135 டி.எம்.சி. தண்ணீரைக் கொண்டுள்ள இந்த ஏரி 3,500 ஏக்கர் நிலத்தைப் பாசனம் செய்கின்றது.[2]
இலக்னாவரம் ஏரி | |
---|---|
அமைவிடம் | கோவிந்தராவ்பேட்டை, வாரங்கல் மாவட்டம், தெலுங்கானா, இந்தியா |
ஆள்கூறுகள் | 18°09′02″N 80°04′11″E / 18.15044°N 80.06960°E |
வகை | செயற்கை ஏரி |
வடிநில நாடுகள் | இந்தியா |
மேற்பரப்பளவு | 40.4 சதுர கிமீ (15.6 சதுர மைல்) |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 1,759 அடி (536 மீ) |
Islands | 13 |
குடியேற்றங்கள் | வாரங்கல் |
சுற்றுலா ஈர்ப்பு
தொகுகாக்கத்திய அரசர் ராஜூ பிரதாபருத்திரரால் 1312 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஏரியில் 13 தீவுகள் உள்ளன. மேலும் மூன்று தீவுகளை இணைக்கும் 160 மீட்டர் நீளமுள்ள ஒரு பாலமும் உள்ளது. அடர்த்தியான இலையுதிர் காடுகளால் சூழப்பட்டுள்ளது இந்த ஏரி புகழ்பெற்ற ஒரு சுற்றுலாத்தலமாகும். இயற்கையை விரும்பும் சுற்றுலாப்பயணிகளுக்கேற்ப இங்கு குடிசைகள், பார்வைக் கோபுரம், உணவுக்கூடம், முக்கிய கரைகளிலிருந்து தீவுக்கு வரும்வகையில் படகுப்போக்குவரத்து போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.[3]
சான்றுகள்
தொகு- ↑ "Of sun-kissed waters". The Hindu.
- ↑ "Laknavaram lake – a perfect place to unwind". The Hindu. Archived from the original on 2014-12-05. பார்க்கப்பட்ட நாள் 2017-10-13.
- ↑ "New facilities opened at Laknavaram". The Hindu.