லங்காகிளியர்
லங்காகிளியர் என்பது இலங்கையின் மிகப்பெரிய பணக்கொடுக்கல் வாங்கலுக்கான உட்கட்டமைப்பு வசதியாகும். இது 2002 ஆம் ஆண்டு மாசி மாதம் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இது இலங்கை மத்திய வங்கிக்கும்(CBSL), இலங்கை மத்திய வங்கியால் உரிமம் அளிக்கப்பட்ட அனைத்து வணிகவங்கிகளுக்கும் உரியதாகும். லங்காகிளியர் ஆனது இலங்கையின் மிகப்பெரும் வங்கிகளுக்கு இடையேயான பணப்பரிமாற்ற வலையமைப்பான 'லங்கா பே' இனுடைய செயற்படுத்துனர் ஆகும்.[1]
2016 ஆம் ஆண்டு மாசி மாதத்திற்கு அமைவாக லங்காகிளியரினுடைய பங்குதாரர்களாக பின்வரும் நிறுவனங்கள் விளங்குகின்றன. அமானா வங்கி, ஆக்சிஸ் வங்கி, இலங்கை வங்கி, கார்கில்ஸ் வங்கி, இலங்கை மத்திய வங்கி, சிற்றி வங்கி, சிலோன் வணிக வங்கி, சிலோன் வளர்ச்சி நிதிநிறுவன வங்கி, கபிப் வங்கி, ஹற்றன் தேசிய வங்கி, எச்எஸ்பீசீ இலங்கை, ஐசிஐசிஐ வங்கி, இந்தியன் வங்கி, எம்சீபீ வங்கி, தேசிய அபிவிருத்தி வங்கி, நாட்டு அறக்கட்டளை வங்கி, பான் ஆசிய வங்கி, மக்கள் வங்கி, சம்பத் வங்கி, செலான் வங்கி மற்றும் யூனியன் வங்கி.
வங்கிகளிடைப் பணவழங்கீட்டு முறைமை
தொகுஇலங்கை வங்கிகளுக்கிடையிலான பணவழங்கீட்டு முறைமை (Sri Lanka Interbank Payment System - SLIPS) என்பது லங்காகிளியரினால் உருவாக்கப்பட்ட இலங்கையிலுள்ள வணிகவங்கிக் கணக்குகளுக்கு இடையேயான பணப்பரிமாற்ற வலையமைப்பாகும்.[2] இதன் உறுப்பு வங்கிகளுக்கிடையில் ஒரேநாளில் ஐந்து மில்லியன் ரூபாய் வரை பெறுமதியான பணப்பரிமாற்றங்களை பாதுகாப்பானதாகவும் தாள்களற்ற முறையிலும் மேற்கொள்ள இம்முறைமை வழியமைக்கிறது.[3][4]
பொது அட்டை மற்றும் பணவழங்கீட்டு மாற்று
தொகுபொது அட்டையும் பணவழங்கீட்டு மாற்றும் (Common Card and Payment Switch - CCAPS) எனப்படும் இச்சேவையானது லங்கா பே என்ற வணிகப்பெயரில் ஆடி மாதம் 2013 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதுவே இலங்கையின் வலுவான மிகவும் மேம்பட்ட செயல்திறன்மிக்க கொடுக்கல் வாங்கலுக்கான உட்கட்டமைப்பாகும். இலங்கை மத்திய வங்கியானது CCAPS இனை இலங்கை நாட்டின் பணவழங்கீட்டு மாற்றாக ஒப்புதல் அளித்துள்ளது.[5]
CCAPS ஆனது பின்வரும் பிரிவுகளாக மேலும் பிரிக்கப்படுகின்றது
- லங்கா பே பொது தன்னியக்க வங்கி இயந்திர (ATM) மாற்றி (CAS)
- லங்கா பே பகிரப்பட்ட தன்னியக்க வங்கி இயந்திர மாற்றி (SAS)
- லங்கா பே தேசிய அட்டை திட்டம் (NCS)
- லங்கா பே பொது இலத்திரனியல் பணப்பரிமாற்ற மாற்றி (CEFTS)
- லங்கா பே பொது விற்பனை முனை (POS) மாற்றி (CPS)
- பொது செல்லிடத் தொலைபேசி மாற்றி (CMobS)
இலங்கை மத்திய வங்கியால் கார்த்திகை 30 ஆம் திகதி 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கொடுக்கல் வாங்கல் மற்றும் உடன்படிக்கை தொடர்பான ஏழாம் இலக்க சுற்றுநிரூபத்தின்படி இலங்கையில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளும் கட்டாயமாக CAS, CEFTS, CPS, மற்றும் CMobS போன்ற வலையமைப்புக்களில் மார்ச் 31 2016, புரட்டாதி 30 2016, மார்கழி 31 2016, புரட்டாதி 30 2017 திகதிகளுக்குள் இணைந்திருத்தல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.[6]
சான்றுகள்
தொகு- ↑ "LankaClear: Corporate Profile". LankaClear.com. Archived from the original on 4 பிப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 9 February 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "SL Interbank Payments: Statistics". LankaClear.com. Archived from the original on 5 பிப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 9 February 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "SL Interbank Payments". LankaClear.com. Archived from the original on 5 பிப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 9 February 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "LankaClear enhances service to banks". Daily FT. 17 March 2011 இம் மூலத்தில் இருந்து 28 மார்ச் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170328204740/http://www.ft.lk/2011/03/17/lankaclear-enhances-service-to-banks/. பார்த்த நாள்: 9 February 2016.
- ↑ "Common Card and Payment Switch". LankaClear.com. Archived from the original on 5 பிப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 9 February 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Payments and Settlements Systems Circular No. 7 of 2015: Timelines for Joining Common Card and Payments Switch - LankaPay" (PDF). CBSL.gov.lk. இலங்கை மத்திய வங்கி. 30 November 2015. Archived from the original (PDF) on 29 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 9 February 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
வெளியிணைப்புகள்
தொகு- "LankaClear: 5 years since launch of CIT System". The Island. 17 March 2011 இம் மூலத்தில் இருந்து 28 மார்ச் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170328203415/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=26825. பார்த்த நாள்: 9 February 2016.
- "Nine banks connect to LankaPay network". Sunday Observer. 18 January 2015 இம் மூலத்தில் இருந்து 24 ஜனவரி 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150124031257/http://www.sundayobserver.lk/2015/01/18/fin17.asp. பார்த்த நாள்: 9 February 2016.