லலிதா படித்துறை

வாரணாசியில் அமைந்துள்ள ஒரு படித்துறை

லலிதா காட் அல்லது லலிதா படித்துறை (Lalita Ghat) (இந்தி: ललिता घाट) வாரணாசி புனித நகரத்தில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே பாயும் கங்கை ஆற்றின் கரையில் அமைந்துள்ள பல படித்துறைகளில் ஒன்றாகும். இதனை 1800 - 1804 ஆண்டுகளில் நேபாள மன்னர் ராணா பகதூர் ஷா என்பவர் இப்படித்துறையை நிறுவி, தமது குல தெய்வமான லலிதாம்பிகைக்கு அர்பணித்தார்.[1]

லலிதா படித்துறை
உள்ளூர் பெயர்
இந்தி: ललिता घाट
லலிதா படித்துறையின் முன்பக்கக் காட்சி
அமைவிடம்வாரணாசி
ஆள்கூற்றுகள்25°18′36″N 83°00′48″E / 25.310013°N 83.013276°E / 25.310013; 83.013276
ஏற்றம்73.9 மீட்டர்
நிறுவப்பட்டது1800-1804
நிறுவனர்நேபாள மன்னர் ராணா பகதூர் ஷா
கட்டப்பட்டது19-ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கும் அமைப்புவாரணாசி மாநகராட்சி
உரிமையாளர்வாரணாசி மாநகராட்சி
லலிதா படித்துறை is located in Varanasi district
லலிதா படித்துறை
வாரணாசியில் லலிதா காட் படித்துறையின் அமைவிடம்
நேபாள மன்னர் ராணா பகதூர் ஷா

அமைவிடம் தொகு

லலிதா படித்துறை வாரணாசி நகரத்தில் கங்கை ஆற்றின் கரையில், மணிகர்ணிகா படித்துறைக்கு தென்மேற்கில் 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மேலும் வாராணசி தொடருந்து நிலையத்திலிருந்து 3.8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "History". Varanasi.org. http://www.varanasi.org.in/lalita-ghat. பார்த்த நாள்: 9 Aug 2015. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=லலிதா_படித்துறை&oldid=3322742" இலிருந்து மீள்விக்கப்பட்டது