லலிதா வகில்
லலிதா வகில் (Lalita Vakil), ஒரு இந்திய சித்திரத்தையல் கலைஞர் ஆவார், அவர் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சம்பா மாவட்டத்தைச் சேர்ந்த பாரம்பரிய கைக்குட்டை சித்திரக் கலை வடிவமான சம்பா ரூமலைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவதில் இவர் செய்த பங்களிப்புகளுக்காக அறியப்படுகிறார்.
பத்மசிறீ லலிதா வகில் | |
---|---|
லலிதா வகில் -2022 இல். | |
பிறப்பு | சம்பா, இமாச்சலப் பிரதேசம் |
அறியப்படுவது | சம்பா ரூமல் சித்திரக்கலை (எம்பிராய்டரி) |
விருதுகள் | பத்மசிறீ (2022) நாரி சக்தி விருது (2018) |
கலைத் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 2022 ஆம் ஆண்டில் இந்திய அரசால் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. [1] 2018 இல் நாரி சக்தி விருது விருதையும் பெற்றார் [2]
வாழ்க்கை
தொகுலலிதா வகிலுக்கு பதினைந்து வயதில் திருமணம் நடந்தது. இவரது மாமனார் சம்பா ரூமலுக்கான வடிவமைப்புகளை உருவாக்குவதில் இவரது திறமையை அங்கீகரித்தார். உள்ளூர் பெண்கள் மற்றும் மாவட்ட அளவிற்கு மேலாகவும் உள்ள பெண்களுக்கு இந்தக் கலையை கற்றுக்கொள்வதில் பயிற்சி அளிக்க இவரை மேலும் ஊக்கப்படுத்தினார். [3]
தொழில்
தொகுகடந்த ஐம்பது ஆண்டுகளாக, லலிதா வகில், சித்திரக்கலையான சம்பா ரூமலின் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பிற்காக உழைத்து வருகிறார். [4] இவர் தனது படைப்புகளை காட்சிப்படுத்தவும், பாரம்பரிய சித்திரக்கலைக்கான பட்டறைகளை நடத்தவும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் விரிவாகப் பயணம் செய்துள்ளார். [5]
வகில் அடிக்கடி சம்பா ரூமலின் வடிவமைப்புகளை பரிசோதித்து மாற்றி அமைத்துள்ளார். கைக்குட்டையின் பெரிய துண்டுகளை உருவாக்க சித்திரக்கலையில் பட்டுத்துணியை அறிமுகப்படுத்திய முதல் பெண்மணி இவர்தான் என்று குறிப்பிடப்படுகிறார். [6] மேலும், புடவைகள், சால்வைகள், துப்பட்டாக்கள் மற்றும் ஸ்டோல்களுக்கான மாதிரிகளையும் பல பேனல் செட்களையும் உருவாக்கியுள்ளார். [7]
விருதுகள்
தொகுசான்றுகள்
தொகு- ↑ "Padma Awardees 2022" (PDF). Padma Awards.
- ↑ "Nari Shakti Puraskar 2018" (PDF). Ministry of Women and Child Development, Government of India.
- ↑ Sharma, Ashwani (2022-01-26). "Padma Shri Recipient Lalita Vakil Devoted Her Life To 'Chamba Rumal'". Outlook India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-06.
- ↑ Service, Tribune News. "Chamba artist Lalita Vakil honoured with Padma Shri". Tribuneindia News Service (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-06.
- ↑ "Nari Shakti Puraskar 2018" (PDF). Ministry of Women and Child Development, Government of India."Nari Shakti Puraskar 2018" (PDF). Ministry of Women and Child Development, Government of India.
- ↑ Sharma, Ashwani (2022-01-26). "Padma Shri Recipient Lalita Vakil Devoted Her Life To 'Chamba Rumal'". Outlook India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-06.Sharma, Ashwani (2022-01-26). "Padma Shri Recipient Lalita Vakil Devoted Her Life To 'Chamba Rumal'". Outlook India. Retrieved 2022-04-06.
- ↑ News9 Staff (2022-02-03). "How Lalita Vakil's championing of the dying art of Chamba Rumal earned her the Padma Shri". NEWS9LIVE (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-06.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ "Shilp Guru Awards (Handicrafts) Year 2009" (PDF). President Awards. Archived from the original (PDF) on 21 September 2013. பார்க்கப்பட்ட நாள் 2022-04-06.
- ↑ "Nari Shakti Puraskar 2018" (PDF). Ministry of Women and Child Development, Government of India."Nari Shakti Puraskar 2018" (PDF). Ministry of Women and Child Development, Government of India.
- ↑ "Padma Awardees 2022" (PDF). Padma Awards."Padma Awardees 2022" (PDF). Padma Awards.