லாவோ புத்தாண்டு
சொங்க்ரன், (லாவோ: ສົງກຣານ) அல்லது லாவோப் புத்தாண்டு லாவோஸ் நாட்டில் ஆண்டுதோறும் ஏப்ரல் 13/14 இற்கும் ஏப்ரல் 15/16இற்குமிடையே கொண்டாடப்படும் விழாவாகும்.[1] லாவோ மொழியில் பொதுவாக பை மை என்றறியப்படும் இப்புத்தாண்டானது, அமெரிக்கா, கனடா, பிரான்சு, ஆத்திரேலியா நாடுகளிலும் வாழும் லாவோக்களாலும் கொண்டாடப்படுகிறது. கோடை காலம் மற்றும் பருவக்காற்றின் ஆரம்பத்தை லாவோப் புத்தாண்டு குறிக்கின்றது.
லாவோ புத்தாண்டு / சொங்க்ரன் / பை மை | |
---|---|
லாவோ புத்தாண்டில் நீராட்டப்படும் புத்தர் | |
அதிகாரப்பூர்வ பெயர் | சொங்க்ரன் (ສົງກຣານ) |
பிற பெயர்(கள்) | பை மை (ປີໃໝ່) |
கடைபிடிப்போர் | லாவோ |
முக்கியத்துவம் | லாவோ புத்தாண்டு |
தொடக்கம் | 13/14 ஏப்ரல் |
முடிவு | 15/16 ஏப்ரல் |
நாள் | 13 ஏப்ரல் |
நிகழ்வு | ஆண்டுதோறும் |
தொடர்புடையன | தமிழ்ப் புத்தாண்டு பர்மியப் புத்தாண்டு, கம்போடியப் புத்தாண்டு, நேபாளப் புத்தாண்டு, சிங்களப் புத்தாண்டு, தாய் புத்தாண்டு, ஒடியப் புத்தாண்டு, |
விழா
தொகுஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 16 வரை இப்புத்தாண்டு கொண்டாடப்படுவது வழக்கமாக இருகின்றது. சில நகரங்களில் கொண்டாட்டங்கள் ஒரு வாரத்துக்கும் நீள்வதுண்டு. பழைய ஆண்டின் முதல்நாள், இடைப்பட்ட நாள், புத்தாண்டு முதல்நாள், ஆகிய மூன்றும் முக்கியமான நாட்கள். நீர், மலர்கள், நறுமணங்கள் புத்தாண்டுக்காக தயாரிக்கப்படுகின்றன.
மரபுகள்
தொகுஇல்லங்கள், புத்தர் சிற்பங்கள், துறவிகள், நண்பர்கள், தம்மைக் கடந்துசெல்வோர் அனைவரும் நீராட்டப்படுவதுண்டு. மூத்தவர்களுக்கும் துறவிகளுக்கும் இளம்மாணவர்கள் மரியாதையும் நீரள்ளித் தெளிப்பதும் நிகழ்கிறது. இது நெடுவாழ்க்கைக்காகவும் சமாதானத்துக்காகவும் நிகழ்த்தப்படுகின்றது. நீரானது மணமூட்டப்பட்டு தெளிக்கப்படுவதுண்டு. அண்மைக்காலமாக சவரக்குளம்பி முதலான களிம்பு வகைகளையும் மாவையும் மற்றோர் மீது வீசு களித்தாடும் மரபும் பிரபலமடைந்து வருகிறது.
விகாரங்களுக்கு மண் கொணரப்பட்டு தாது கோபுரம் வடிவில் அமைக்கப்படும். கடற்கரைக்கு சென்றும் தாது கோபுரம் அமைப்பதுண்டு. இவை கொடி, மலர்கள், நீரால் அலங்கரிக்கப்படும். இந்நாட்களில் விலங்குகளை அவிழ்த்துவிடுவதும் லாவோசில் ஒரு மரபாகக் காணப்படுகின்றது. கௌதம புத்தர் உருவங்கள் மலர்சூட்டப்பட்டு வழிபடப்படுகின்றன. மூத்த துறவிகள் இளந்துறவிகளை மலர்வனங்களுக்கு அழைத்துச்சென்று மலர் பறித்து வருவர். மாலையில் புத்தகோயில்களுக்கு வந்து லாவோ மக்கள் மலர் சூட்டி வழிபடுவர்.
அழகுராணிப் போட்டிகள், லாவோக் கிராமிய இசையில் அமைந்த "மோளம்", "லம்வொங்" இசைக்கருவிகளோடான ஆடல். பாடல் என்பன புத்தாண்டு நிகழ்த்தப்படும். சோக் டி பி மை, சௌக்சன் வன் பி மை, சபைடி பிமை, போன்றன லாவோப் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லும் சொற்றொடர்களாகும்.
மேலும் காண்க
தொகு- தமிழ் புத்தாண்டு
- பர்மியப் புத்தாண்டு (திங்யான்)
- கம்போடியப் புத்தாண்டு (சௌல் ச்னம் த்மேய்)
- சிங்களப் புத்தாண்டு (அலுத் அவுறுது)
- தாய்லாந்தின் புத்தாண்டு (சொங்க்ரான்)
உசாத்துணைகள்
தொகு- ↑ Sysamouth, Vinya. "History of the Lao New Year". Archived from the original on 29 மார்ச் 2013. பார்க்கப்பட்ட நாள் 13 April 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)