லா பா சாட் (Lau Pa Sat, "பழைய கடைத்தொகுதி") அல்லது தெலோக் ஆயர் கடைத்தொகுதி (Telok Ayer Market) என்பது சிங்கப்பூரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. சிங்கப்பூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்களில் இதுவும் ஒன்று. 1825 முதல் இக்கடைத் தொகுதி இயங்கிவருகிறது. இது பல்வேறு சிறு உணவுக்கடைகள், 24 மணி நேரம் இயங்கும் கடைகள், செருப்பு தைக்கும் கடை, தையல் கடை போன்றவற்றைக் கொண்டுள்ளது. இதில் பெரும்பாலும் உணவுக் கடைகளே அதிகம். பல்வேறு நாட்டு உணவுகள் கிடைக்கும் இடம் இது. புனரமைப்பிற்கு முன்னர் வார இறுதி நாட்களில் சிறு இசைக்குழுவின் இசைக் கச்சேரி நடந்து வந்தது.

"லா பா சாட் " ( தெலோக் ஆயர் கடைத்தொகுதி)

வரலாறு தொகு

19 ஆம் நூற்றாண்டில் இக்கடைத் தொகுதியானது மிகச்சிறிய மரக்கட்டிடத்தில் இருந்து வந்தது. தெலோக் ஆயர் என்ற மலாய் மொழிச் சொல்லுக்கு தண்ணீர் வளைகுடா என்று பெயர். இக்கடைத் தொகுதியானது அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய வார்ப்பு இரும்பினால் கட்டப்பட்டுள்ளது.

முதலில் பல்வேறு வகையான கடைகள் இங்கு இருந்தாலும் 1973 ற்கு பின்னர் இதில் பெரும்பாலும் உணவுக்கடைகளே இயங்கிவருகின்றன. ஃராபல்ஸ் ப்ளேஸ் இரயில் நிலையம் அருகில் இதன் அமைந்துள்ளது.

மறுசீரமைப்பு தொகு

பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக செப்டம்பர் 01 ,2013 முதல் இரண்டு மாதங்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. நான்கு மில்லியன் செலவில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுப் பணிகள் 9 மாதங்கள் நடைபெற்றன. பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்குப் பின்னர் 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் தியதி மீண்டும் செயல்படத் தொடங்கியது. பல புதிய கடைகளும் செயல்படுகின்றன. [1] மறுசீரமைப்பிற்கு முன்னர் 90 கடைகளுடன் இயங்கி வந்தது. இப்போது 54 உணவுக் கடைகளும் (stalls) 14 சிறு உணவுச் சாலைகளுடனும் (mini restaurants) இயங்கிவருகிறது.

புகைப்படங்கள் தொகு

மேம்படுத்தப்பட்ட "லா பா சாட்"டின் (தெலோக் ஆயர் கடைத்தொகுதி)யின் புகைப்படங்கள்.

மேற்கோள்கள் தொகு

இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லா_பா_சாட்&oldid=3227347" இலிருந்து மீள்விக்கப்பட்டது