லிண்டா பக்

லிண்டா பக் (Linda Buck, பி: ஜனவரி 29, 1947 ) ஒரு அமெரிக்க உயிரியலாளர்[2]. இவர் தனது சக ஆய்வாளர் ரிச்சார்ட் ஆக்செலுடன் இணைந்து 2004 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு பெற்றார்[3]. பக் வாஷிங்டன் அருகில் உள்ள சியாட்டில் நகரில் பிறந்தார். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் 1975 ல் உளவியல் மற்றும் நுண்ணுயிரியல் பிரிவில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். இவர் டாலசில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் 1980 ல் நோயெதிர்ப்பியல் துறையில் பிஎச்டி பட்டம் பெற்றார்.

லிண்டா பிரவுன் பக்
LindaBuck cropped 1.jpg
பிறப்புசனவரி 29, 1947 (1947-01-29) (அகவை 76)
சியாட்டில், வாஷிங்டன்
தேசியம்அமெரிக்கர்
துறைஉயிரியல்
பணியிடங்கள்ஃபிரெட் ஹட்சின்சன் புற்றுநோய் ஆய்வு மையம்
வாசிங்டன் பல்கலைக்கழகம், சியாட்டில்
ஹோவர்ட் ஹக்ஸ் மருத்துவம் நிறுவனம்
கொலம்பியா பல்கலைக்கழகம்
ஹார்வர்ட் பல்கலைக்கழகம்[1]
கல்வி கற்ற இடங்கள்வாஷிங்டன் பல்கலைக்கழகம், சியாட்டில்
அறியப்படுவதுமுகர்ச்சி ஏற்பிகள்
விருதுகள்மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (2004)

மேற்கோள்கள்தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2012-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-06-29 அன்று பார்க்கப்பட்டது.
  2. ""Linda B. Buck - Biographical"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. 19 சூலை 2015 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
  3. ""Linda B. Buck - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. 19 சூலை 2015 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிண்டா_பக்&oldid=3570230" இருந்து மீள்விக்கப்பட்டது