லிதா

அமெரிக்க தொழில்முறை மல்யுத்த வீரர், விலங்கு நல ஆர்வலர், பாடகி

ஆமி கிறிஸ்டின் டுமாஸ் (/dʊˈmɑː/; / பிறப்பு ஏப்ரல் 14, 1975), ஓர் அமெரிக்க முன்னாள் தொழில்முறை மல்யுத்த வீரர், விலங்கு நல ஆர்வலர் மற்றும் பாடகி ஆவார். இவர் 2000 முதல் 2006 வரை உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து அங்கு மல்யுத்தப் போட்டிகளில் ஈடுபட்டு வந்தார். பின்னர் நிறுவனத்துடன் பகுதிநேர தோற்றங்களை வெளிப்படுத்தினார். இவர் 2014 ஆம் ஆண்டில் உலக மற்போர் மகிழ்கலை நிறுவன ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டார் . தனது மேடைப் பெயரான லிதா என்பதால் பரவலாக அறியப்படுகிரார்.

லிதா
Amy Dumas 2017.jpg
2017 மே இல் லிதா
இயற்பெயர்எமி கிறிஸ்டைன் டுமாஸ்
Professional wrestling career
மற்போர் பெயர்லிதா
Billed height5 அடி 5 அங்குலம்

ஆரம்பத்தில் ஏஞ்சலிகா என்ற பெயரைப் பயன்படுத்தி, டுமாஸ் மெக்ஸிகோவில் தனது மல்யுத்த வாழ்க்கையை 1998 இல் கான்செஜோ முண்டியல் டி லுச்சா லிப்ரே (சி.எம்.எல்.எல்) உடன் தொடங்கினார், அதன்பிறகு 1999 ஆம் ஆண்டின் துவக்கத்தில் அமெரிக்க சுயாதீன மல்யுத்த போட்டிகளில் கலந்து கொண்டார்.பின்னர் 6 மாதங்கள் எக்ஸ்ட்ரீம் சாம்பியன்ஷிப் மல்யுத்தத்தில் . டுமாஸ் நவம்பர் 1999 இல் உலக மல்யுத்த சம்மேளனத்துடன் (WWF, பின்னர் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம்) கையெழுத்திட்டார், பிப்ரவரி 2000 இல் லிதா எனும் மேடைப்பெயரில் அறிமுகமானார். முதலில், இவர் எஸ்ஸா ரியோஸுடன் இணைந்து விளையாடினார். ஆனால் இவர் மாட் மற்றும் ஜெஃப் ஹார்டியுடன் இணைந்து விளையாடியதன் மூலம் பரவலாக கவனம் பெறத் துவங்கினார். மேலும் 2005-2006 ஆம் ஆண்டில் முக்கியமான மல்யுத்த வீரர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். இந்தக் கால கட்டத்தில் தான் எட்ஜ் எனும் மற்போர் வீரருக்கு மேலாளராக இருந்தார். உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தில் ஒட்டுமொத்தமாக நான்கு முறை உலக பெண்கள் வாகையாளர் பட்டத்தினை வென்றார்.

2006 இல் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, இவர்தி லுகாகோர்ஸ் என்ற பங்க் ராக் இசைக்குழுவை உருவாக்கினார். இசைக்குழு செப்டம்பர் 11, 2007 அன்று அவர்களின் அறிமுகப் பாடலை வெளியிட்டது.

ஆரம்ப கால வாழ்க்கைதொகு

ஆமி டுமாஸ் புளோரிடாவின் ஃபோர்ட் லாடர்டேலில் கிறிஸ்டி மற்றும் மைக்கேல் டுமாஸுக்கு ஏப்ரல் 14, 1975 இல் பிறந்தார்.[1] இவர் தனது குழந்தைப் பருவத்திலும் இளமைப் பருவத்திலும் புளோரிடாவைச் சுற்றியுள்ள பல பள்ளிகளில் பயின்றார் மற்றும் பட்டப்படிப்புக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு அட்லாண்டாவுக்கு அருகிலுள்ள லாசிட்டர் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைப் பள்ளியைக் கல்வியினை நிறைவு செய்தார். இவர் ஜார்ஜியா ஸ்டேட் யுனிவர்சிட்டியில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றார்,[2] ஆனால் 1993 ஆம் ஆண்டில் அது உயர்நிலைப் பள்ளி போன்றது என்று உணர்ந்ததால் விலகினார்.[3] பின்னர், வாஷிங்டன் டி.சி.யில், டுமாஸ் பல இசைக்குழுக்களில் கிதார் வாசித்தார்,[3][4] மற்றும் ஒரு இசைக்குழுவில் பணியாற்றினார்.

தொழில்முறை மல்யுத்த வாழ்க்கைதொகு

எக்ஸ்ட்ரீம் சாம்பியன்ஷிப் மல்யுத்தம் (1999)தொகு

ஏப்ரல் 1999 இல், டுமாஸை எக்ஸ்ட்ரீம் சாம்பியன்ஷிப் மல்யுத்தத்தின் (ஈ.சி.டபிள்யூ) உரிமையாளரும் புக்கருமான பால் ஹேமான் அணுகினார்.[1][4] டுமாஸ் ஈ.சி.டபிள்யூவில் மிஸ் கான்ஜெனியலிட்டி, டேனி டோரிங்கின் திரைக் காதலி என்பதாக அறிமுகமானார்.[5] டுமாஸ் பின்னர் மீண்டும் ஏஞ்சலிகா என்ற பெயரைப் பயன்படுத்தி மல்யுத்தப்போட்டிகளில் விளையாடத் தொடங்கினார்.

சான்றுகள்தொகு

  1. 1.0 1.1 Stephen Laroche (February 14, 2001). "Lita riding wave of popularity". Slam! Sports. Canadian Online Explorer. ஏப்ரல் 19, 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. October 18, 2007 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. Amy Dumas. Lita: A Less Traveled R.O.A.D – The Reality of Amy Dumas, 41.
  3. 3.0 3.1 Jeff Clark (September 7, 2007). "The Luchagors Drop a Powerbomb". Stomp and Stammer. October 14, 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. October 2, 2007 அன்று பார்க்கப்பட்டது.
  4. 4.0 4.1 "Lita's Bio". Slam! Sports. Canadian Online Explorer. March 3, 2005. October 18, 2007 அன்று பார்க்கப்பட்டது.
  5. Thomas Chamberlin (April 2001). "Lita's More Than Lovely". Wrestling Digest. 19 November 2004 அன்று மூலம் பரணிடப்பட்டது. June 6, 2007 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிதா&oldid=3362021" இருந்து மீள்விக்கப்பட்டது