லியாவோ ஆறு

சீனாவில் பாயும் ஆறு

லியாவோ ஆறு (Liao River, எளிய சீனம்: ; மரபுவழிச் சீனம்: பின்யின்: Liáo Hé) என்பது தென் வடகிழக்கு சீனாவின் முதன்மையான ஆறாகும், மேலும் இது சீன முதன்மை நிலப்பரப்பில் உள்ள ஏழு முக்கிய ஆற்று அமைப்புகளில் ஒன்றாகும். லியாவோனிங் மாகாணம் மற்றும் லியாடோங் தீபகற்பம் ஆகியவை இந்த ஆற்றின் பெயரிலிருந்து அவற்றின் பெயர்களைப் பெற்றன.[1] இந்த ஆறு வடகிழக்கு சீனாவில் "தாய் ஆறு" என்றும் பிரபலமாக அறியப்படுகிறது.[2] 1,345 கிலோமீட்டர்கள் (836 mi) நீளமான, லியாவோ ஆற்றின் அமைப்பானது 232,000 சதுர கிலோமீட்டர்கள் (90,000 sq mi) அதிகமான வடிநிலத்தைக் கொண்டுள்ளது. ஆனால் இதன் சராசரி நீர் வெளியேற்றமானது 500 cubic metres per second (18,000 cu ft/s) என்ற அளவில் குறைவானதே. இது, முத்து நதியிலிருந்து வெளியேறும் நீரில் இருபத்தில் ஒரு பங்கு மட்டுமே. லியாவோ ஆறு மிக அதிகமான வண்டல் படிவுகளைக் கொண்டுள்ளது. ஏனெனில் இந்த ஆறு பாயும் பல பகுதிகள் லோயஸ் என்னும் மண் துகள்கள் உள்ள பகுதிகள் வழியாக பாய்கின்றது.

லியாவோ ஆறு ஒரு முக்கியமான புவியியல் அடையாளமாக உள்ளது. ஏனெனில் இது லியோனிங் மாகாணத்தை இரண்டு பெரிய பகுதிகளாக பிரிக்கிறது. இப்பகுதிகள் லியாடோங் ("லியாவோ ஆற்றின் கிழக்கு") மற்றும் லியோக்சி ("லியாவோ ஆற்றின் மேற்கு") என வழங்கப்படுகின்றன.

போக்கு

தொகு

லியாவோ ஆறானது அதன் இரண்டு முக்கிய துணை ஆறுகளான மேற்கிலிருந்து பாயும் ஜிலியாவோ ஆறு மற்றும் கிழக்கிலிருந்து பாயும் டோங்லியாவோ ஆறு ஆகியவற்றின் சங்கமத்திலிருந்து உருவாகிறது. மேற்கு துணை ஆறின் முழுப்பகுதியும் உள் மங்கோலியாயாவில் உள்ளது. மேலும் இது ஸார் மோரோன் ஆறு மற்றும் லாவோஹா ஆற்றின் சங்கமத்தால் தோராயமாக 43 ° 25 'N, 120 ° 45' E இல் உருவாகிறது, இந்த துணை ஆறானது அதன் கீழ்பகுதியில் ஜின்காய் ஆறு என்று அழைக்கப்படுகிறது. கிழக்கு கிளை ஆறானது மேற்கு சிலின் மாகாணத்தில் தோன்றுகிறது, மேலும் லியோனிங், ஜிலின் மற்றும் உள் மங்கோலியா சந்தி பகுதிக்கு அருகே அது கலப்பதற்கு முன் எஸ் வடிவிலான ஒரு பாதை வழியாகச் செல்கிறது, தோராயமாக 42 ° 59 ' N, 123 ° 33' E.

இதன் விளைவாக, லியாவோ ஆறு உருவாகி பின்னர் லியோனிங் மாகாணத்திற்குள் நுழைந்து வடகிழக்கு சீன சமவெளி வழியாக தெற்கே பாய்கிறது, வழியில் ஏராளமான துணை ஆறுகளைப் பெறுகிறது. இது டைலிங் கவுண்டியின் பிண்டிங்பாவ் நகரத்துக்கு அருகில் மேற்கு நோக்கித் திரும்புகிறது, மேலும் பல துணை ஆறுகளை பெற்ற பிறகு, ஜூலியு ஆறு (巨流河, "மாபெரும் ஸ்ட்ரீம் நதி") என்ற செல்லப்பெயரால் அடிக்கடி அழைக்கப்படுகிறது. தியான் கவுண்டியில் உள்ள லியுஜியன்ஃபாங் நீர்நிலை நிலையத்திற்கு (六间房水文站) அருகில் அடையும் வரை லியாவோ நதி தென்மேற்கில் செல்லுகிறது. அதன் பிறகு இது இரண்டு கிளை ஆறுகளாக பிரிந்து லியாவோ ஆற்று வடிநிலம் (辽河 三角洲) உருவாகிறது. மேற்கு கிளை ஆறு, சற்று சிறியது, இது ஷுவாங்டைஸி ஆறு (双台子河, "மாபெரும் நீரோடை ஆறு") என்று அழைக்கப்படுகிறது. இது பன்ஜின், தாவா கவுண்டியின் மேற்கே லியாடோங் விரிகுடாவில் கலப்பதற்கு முன்னர், பன்ஷான் கவுண்டியில் உள்ள துணை ஆறான ராயாங் நதியைப் பெறுகிறது. கிழக்கு கிளையாறு சற்று பெரியது மற்றும் கீழ் லியாவோ ஆற்றின் முக்கிய பகுதியாகும். இது வைலியாவோ ஆறு (外 辽河, "வெளி லியாவோ நதி") என்று அழைக்கப்படுகிறது. "ட்ரைடென்ட் ரிவர் " (三 岔河) என்று உள்நாட்டில் குறிப்பிடப்படும் ஒரு ஆற்றுச்சந்தியில், ஹன் நதி மற்றும் தைஸி நதி ஆகிய இரண்டு பெரிய துணை ஆறுகளை தன்னோடு சேர்த்துக்கொள்ளும்விதமாக இது தெற்கு நோக்கி பயணித்தது, பின்னர் அது டாலியாவோ நதி (大 辽河, "கிரேட் லியாவோ நதி") என்ற புதிய பெயரை ஏற்றுக்கொண்டு யிங்கோவுக்கு மேற்கே போஹாய் வளைகுடாவில் கலக்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Liao River". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 1 January 2013.
  2. Cao, Jie. "Liao River in Deep Trouble" (PDF). Archived from the original (PDF) on 2 செப்டம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 1 January 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=லியாவோ_ஆறு&oldid=3570244" இலிருந்து மீள்விக்கப்பட்டது