லியுதேத்தியம் வனேடேட்டு
வேதிச் சேர்மம்
லியுதேத்தியம் வனேடேட்டு (Lutetium vanadate) Lu2V2O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும்.[1] பெர்ரோகாந்தவியல் பண்பையும் குறைக்கடத்திப் பண்புகளையும் இச்சேர்மம் வெளிப்படுத்துகிறது. பைரோகுளோர் எனப்படும் நையோபியம் கனிமக் குழுவின் கட்டமைப்பை ஒத்த கட்டமைப்பைப் பெற்றுள்ளது.[2]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
லியுதேத்தியம் வனேடேட்டு(IV)
லியுதேத்தியம் டைவனேடேட்டு லியுதேத்தியம் பைரோவனேடேட்டு | |
இனங்காட்டிகள் | |
60571-03-1 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
Lu2V2O7 | |
வாய்ப்பாட்டு எடை | 563.818 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
லியுதேத்தியம்(III) ஆக்சைடுடன் வனேடியம் மூவாக்சைடு மற்றும் இருவனேடியம் ஐயொட்சைட்டு ஆகியவற்றைச் சேர்த்து உயர் வெப்பநிலையில் (1400 °செல்சியசு) வினைபுரியச் செய்து லியுதேத்தியம் வனேடேட்டை தயாரிக்கலாம். ஆர்கான் வாயுச் சூழலும் 2.0×10−5 பார் ஆக்சிசன் வாயு அழுத்தமும் இவ்வினைக்கான நிபந்தனைகளாகும்.[3]
- 2 Lu2O3 + V2O3 + V2O5 → 2 Lu2V2O7
மேற்கோள்கள்
தொகு- ↑ Ichikawa, Hirohiko; Kano, Luna; Saitoh, Masahiro; Miyahara, Shin; Furukawa, Nobuo; Akimitsu, Jun; Yokoo, Tetsuya; Matsumura, Takeshi et al. (March 2005). "Orbital Ordering in Ferromagnetic Lu2V2O7". Journal of the Physical Society of Japan 74 (3): 1020–1025. doi:10.1143/JPSJ.74.1020. Bibcode: 2005JPSJ...74.1020I. https://www.researchgate.net/publication/1878039.
- ↑ Kitayama, Kenzo; Katsura, Takashi (5 August 1976). "A New Compound, Lu2V2O7". Chemistry Letters 5 (8): 815–816. doi:10.1246/cl.1976.815.
- ↑ Haghighirad, A.A.; Gross, C.; Assmus, W. (April 2008). "Powder synthesis and crystal growth of Y2V2O7 under high pressure and its physical properties". Journal of Crystal Growth 310 (7–9): 2277–2283. doi:10.1016/j.jcrysgro.2007.10.069. Bibcode: 2008JCrGr.310.2277H.