லிஸ்டு நகரம்

லிஸ்டு அல்லது எல் லிஸ்டு (Lisht or el-Lisht) (அரபு மொழி: اللشت‎, romanized: Al-Lišt), எகிப்து நாட்டின் தெற்கில் உள்ள கீசா மாநிலத்தில் உள்ள பண்டைய கிராமம் மற்றும் தொல்லியல் களம் ஆகும்.[1] இது எகிப்தின் தலைநகரான கெய்ரோ நகரத்திற்கு தெற்கே 91 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதனருகில் பண்டைய இட்ஜ்தாவி நகரம் உள்ளது.

லிஸ்டு
லிஸ்டு is located in Egypt
லிஸ்டு
லிஸ்டு
எகிப்தில் லிஷ்டு நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 29°34′13″N 31°13′52″E / 29.57028°N 31.23111°E / 29.57028; 31.23111
நாடு எகிப்து
மாநிலம்கீசா
நேர வலயம்எகிப்திய சீர் நேரம் (ஒசநே+2)
 • கோடை (பசேநே)+3 (ஒசநே)
லிஸ்டு நகரத்தின் முதலாம் அமெனம்ஹத்தின் சிதைந்த பிரமிடு
லிஸ்டு நகரத்தின் முதலாம் செனுஸ்ரெத்தின் பிரமிடு

பண்டைய எகிப்தை ஆண்ட மத்தியகால இராச்சியத்தை ஆண்ட் 12-ஆம் வம்சத்தின் (கிமு 1991 – கிமு 1802) மன்னர்களான முதலாம் அமெனம்ஹத் மற்றும் முதலாம் செனுஸ்ரெத் ஆகியோரின் பிரமிடுகள் லிஸ்டு நகரத்தில் உள்ளது. இம்மன்னர்களின் பிரமிடு வளாகங்களைச் சுற்றி அரச குடும்பத்தினரின் சிறிய பிரமிடுகள் மற்றும் அரச அலுவலர்களின் மஸ்தபா எனும் நினைவுக்கட்டிடங்கள் உள்ளது.

அகழாய்வுகள் தொகு

லிஸ்டு தொல்லியல் களத்தை பிரான்சு நாட்டு எகிப்தியவியல் அறிஞர் கஸ்டோன் மாபிரே என்பவர் 1882 முதல் 1885 வரை அகழாய்வு செய்தார். பின்னர் நியூயார்க் நகர பெருநகரக் கலை அருங்காட்சியகத்தினர் 1906 முதல் 1934 முடிய அகழாய்வு செய்தனர்.[2]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Peust, Carsten (2010). Die Toponyme vorarabischen Ursprungs im modernen Ägypte. Göttingen. பக். 57. 
  2. "Middle Kingdom Tomb Architecture at Lisht: The Metropolitan Museum of Art Egyptian Expedition | MetPublications | The Metropolitan Museum of Art". www.metmuseum.org. பார்க்கப்பட்ட நாள் 2018-02-26.

உசாத்துணை தொகு

  • William C. Hayes (1953). The Scepter of Egypt- A Background for the Study of the Egyptian Antiquities in the Metropolitan Museum of Art. 1. 
  • Mace, Arthur Cruttenden; Winlock, Herbert Eustis; Smith, Grafton Elliot (1916). The Tomb of Senebtisi at Lisht. New York: The Gilliss. 
  • Arthur Cruttenden Mace (1921). "Excavations at Lisht". Bulletin of the Metropolitan Museum of Art (New York: The Gilliss) (Egyptian Expedition for MCMXX–MCMXXI): 5–19. doi:10.2307/3254484. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லிஸ்டு_நகரம்&oldid=3613006" இலிருந்து மீள்விக்கப்பட்டது