லீசெ பான்சே தெ பாண்டிச்சேரி
லீசெ பான்சே தெ பாண்டிச்சேரி (Lycée français de Pondichéry, தமிழாக்கம்:பாண்டிச்சேரி பிரான்சிய மேனிலைப்பள்ளி) இந்திய ஒன்றியப் பகுதி புதுச்சேரியின் தலைநகர் புதுச்சேரியில் அமைந்துள்ள பிரான்சிய பன்னாட்டு பள்ளிக்கூடம் ஆகும்.[1]
லீசெ பான்சே தெ பாண்டிச்சேரி Lycée français de Pondicherry | |
---|---|
அமைவிடம் | |
12 ரூ விக்டர் சிமோனெல், புதுச்சேரி, புதுச்சேரி இந்தியா | |
தகவல் | |
வகை | தனியார் |
குறிக்கோள் | குறிக்கோள் |
தொடக்கம் | 1826 |
தரங்கள் | வகுப்பு 1 – 12 |
மாணவர்கள் | 1,400 |
Campus size | 5 ஏக்கர்கள் (20,000 m2) |
இணைப்பு | ரெண் பல்கலைக்கழகம் |
இணையம் | லீசெ பான்சே டெ பாண்டிசேரி |
இது ஆசியக் கண்டத்திலேயே மிகவும் தொன்மையான பன்னாட்டு பிரான்சிய பன்னாட்டுப் பள்ளிக்கூடம் ஆகும்.[2] பிரான்சிற்கு வெளியே அமைந்துள்ள மிகவும் முதன்மையான பிரான்சிய மேனிலைப்பள்ளிகளில் (lycée français) ஒன்றாகும். இங்கு தொடக்கநிலைக்கு முந்தைய வகுப்புகளிலிருந்து லீசெ (மேனிலைப்பள்ளி) வகுப்புகள் வரையிலான கல்வித்திட்டம் வழங்கப்படுகின்றது.[3]
இந்த மேனிலைப்பள்ளி 1826ஆம் ஆண்டில் அக்டோபர் 26 அன்று அன்றைய பிரெஞ்சு இந்தியாவின் புதுச்சேரி தலைமை ஆளுநர் யூழேன் பனோனால் காலேஜ் ரோயல் (இடைநிலைப் பள்ளி) என நிறுவப்பட்டது. 1972இல் மேனிலைப்பள்ளியாக (லீசெ) தரமுயர்த்தப்பட்டது.
இந்த மேனிலைப்பள்ளி ரேன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[4] இதில் ஏறத்தாழ 1,400 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவனம் இந்த மேனிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சு வகுப்புக்களை நடத்தி வருகின்றது.[5]
2014இல் பியூட்சர் பவுண்டேசன் பள்ளியுடன் இந்த மேனிலைப்பள்ளி மாணவர் பரிமாற்றத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.[6]
மேற்சான்றுகள்
தொகு- ↑ "Registration Form பரணிடப்பட்டது 2015-02-14 at the வந்தவழி இயந்திரம்." Lycée français de Pondichéry. Retrieved on 22 January 2015. "12, rue Victor Simonel 605001-Pondichéry"
- ↑ "Introduction பரணிடப்பட்டது 2015-02-17 at the வந்தவழி இயந்திரம்." Lycée Français of Pondicherry. Retrieved on 22 January 2015.
- ↑ "The “LYCEE” ( 10th 11th and 12th standard) பரணிடப்பட்டது 2015-01-22 at the வந்தவழி இயந்திரம்." Lycée Français of Pondicherry. Retrieved on 22 January 2015.
- ↑ Department of Industries and Commerce staff. "French connections, Lycee français". industrypondicherry.com. Archived from the original on 2007-09-28. பார்க்கப்பட்ட நாள் 2015-01-23.
This institute is affiliated to the University of Rennes in France.
- ↑ Institut français de Pondichéry (IFP) Staff. "Training sessions for the teachers of the French Lycée of Pondicherry". ifpindia.org. Archived from the original on 2010-06-16. பார்க்கப்பட்ட நாள் 2015-01-23.
- ↑ "School pact opens window to French education" (). தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. November 8, 2014. Retrieved on January 22, 2015.
வெளி இணைப்புகள்
தொகு- Lycée Français of Pondicherry பரணிடப்பட்டது 2015-01-22 at the வந்தவழி இயந்திரம்
- Lycée Français of Pondicherry பரணிடப்பட்டது 2015-03-09 at the வந்தவழி இயந்திரம் (பிரெஞ்சு)
- Pondichéry Online - Information on the French Lycée and life in Puducherry பரணிடப்பட்டது 2013-09-07 at the வந்தவழி இயந்திரம் (in French)