லீப் எரிக்சன்

தேடலாய்வோர்

லீஃப் எரிக்சன் (Leif Ericson, /ˈlf/ LAYF-' or /ˈlf/ LEEF-'; இசுலேன்சுக: Leifur Eiríksson; நோர்வே மொழி: Leiv Eiriksson c. 970 – c. 1020) ஓர் வைக்கிங்[2]நாடுகாண் பயணி ஆவார். கிறீன்லாந்து நீங்கலான வட அமெரிக்காவில் கொலம்பசிற்கு 500 ஆண்டுகளுக்கு முன்னதாக கால்பதித்த முதல் ஐரோப்பியராக இவர் கருதப்படுகிறார்.[3] ஐசுலாந்திய வரலாற்றின்படி இவர் வின்லாந்து என்றவிடத்தில் நோர்சு குடியிருப்பு ஒன்றை நிறுவினார்; இது தற்போதைய கனடாவில் நியூபவுண்ட்லாந்தின் வடமுனையில் உள்ள லான்சு ஆக்சு மெடோசு நோர்சு குடியிருப்பாக அடையாளம் காணபட்டுள்ளது.

லீப் எரிக்சன்
செயின்ட் பாலில் மின்னசோட்டா மாநில சட்டமன்றத்திற்கு அடுத்து உள்ள லீபின் சிலை
பிறப்புc.970
ஐசுலாந்தாக இருக்கலாம்
இறப்புc.1020
கிறீன்லாந்தாக இருக்கலாம்
தேசியம்வைக்கிங்/ஐசுலாந்திய (நோர்வே இனத்தவர்)[1]
பணிநாடுகாண் பயணி
அறியப்படுவதுவின்லாந்தைக் கண்டறிந்தவர். (வட அமெரிக்காவின் ஓர் பகுதி; நியூபவுண்ட்லாந்தாக இருக்கலாம்)
சமயம்வைக்கிங் சமயம்; கிறித்தவத்திற்கு மாறியது ஏறத்தாழ 999
துணைவர்தோர்குன்னா (c. 999)
பிள்ளைகள்தோர்கில்சு, தோர்கெல்
உறவினர்கள்எரிக் தி ரெட் (தந்தை), தோர்வால்டு, தோர்சுடைன் மற்றும் பிரெடிசு (உடன்பிறப்புகள்)

மேற்கு நோர்வேயிலிருந்து நாடுகடத்தப்பட்டவரும் நாடுகாண் பயணியுமாகிய எரிக் ரெட்[4] மற்றும் தியோதில்டிற்கு 970களில் ஐசுலாந்தில் பிறந்ததாக[4][5][6] நம்பப்படுகிறது. எரிக் கிறீன்லாந்தில் முதல் நோர்விய குடியிருப்புக்களை நிறுவினார்; கிழக்கு குடியிருப்பு எனப்பட்ட பகுதியில் குடும்ப நிலவளாகமான பிரட்டாலியோவில் வாழ்ந்து வந்தார்; அங்குதான் லீப் எரிக்சன் தனது இளமைக்காலத்தைக் கழித்தார். லீபிற்கு இரு மகன்கள் இருந்தனர்; தோர்குனா என்ற குலமகளுக்குப் பிறந்த தோர்கில்சு; மற்றொருவரான தோர்கெல் கிறீன்லாந்து குடியிருப்பின் லீப்பிற்கு அடுத்த தலைவராக பொறுப்பேற்றார்.

இளமை

தொகு

லீப் எரிக் த ரெட் மற்றும் தியோதில்டின் மகனும் போர்வால்தர் அசுவால்த்சன்னின் பெயரனும் ஆவார். இவரது பிறப்பாண்டு பெரும்பான்மையாக 970 என்று அல்லது 980 என்று கொடுக்கப்படுகிறது.[7] இவரது பிறப்பிடம் குறித்து ஐசுலாந்து வரலாற்றுகளில் கூறப்படாவிடினும் [8] இவரது பெற்றோர்கள் சந்தித்த [7]ஐசுலாந்தில் இவர் பிறந்திருக்கலாம்[2][2] லீபிற்கு இரு சகோதரர்களும் ஒரு சகோதரியும் இருந்தனர்.[9]

கொலைக்குற்றத்திற்காக நோர்வேயிலிருந்து நாடுகடத்தப்பட்ட போர்வால்தர் அசுவால்த்சன் தனது மகனான இளம் எரிக்குடன் ஐசுலாந்து சென்றார். ஐசுலாந்திலிருந்து எரிக் வெளியேற்றப்பட்டபோது மேலும் தொலைவிலிருந்த பகுதியை அடைந்து அதற்கு கிறீன்லாந்துஎனப் பெயரிட்டார்; அங்கு நோர்விய முதல் குடியிருப்பை 986இல் நிறுவினார்.[8][10] தன்னிடம் அடிமையாக இருந்த டைர்கர் என்பவரிடம் எரிக் தனது மக்களை வளர்க்கும் பொறுப்பை ஒப்படைத்தார். பின்னாட்களில் லீப் இவரைத் தமது வளர்ப்புத் தந்தை எனக் குறிப்பிடுகிறார்.[11]

வின்லாந்தைக் கண்டறிதல்

தொகு
 
லீவ் எரிக்சன் அமெரிக்காவைக் கண்டறிதல்- கிறிஸ்டியன் குரோகின் ஓவியம் (1893).

லீபும் அவரது குழுவினரும் 999ஆம் ஆண்டு கிறீன்லாந்திலிருந்து நோர்வேக்குப் பயணித்தனர். எப்ரீடிசிற்கு வழிமாறிச் சென்று அங்கு கோடைக்காலத்தைக் கழித்தார். பின்னர் நோர்வே எட்டிய லீப் நோர்வேயின் மன்னர் ஓலாஃப் டிரிக்வாசனுக்கு மெய்க்காவலராகப் பணியிலமர்ந்தார். கிறித்தவத்திற்கு மாறிய லீப் கிறீன்லாந்தில் அச்சமயத்தைப் பரப்பிட அனுப்பப்பட்டார்.[8][12] 1200களில் எழுதப்பட்டதாக கருதப்படும் எரிக் த ரெட்டின் வரலாற்றுக்கதைகளிலும் ஐசுலாந்தியர்களின் வரலாற்றுக் கதைகளிலும்[13] வின்லாந்து சென்ற பயணங்கள் வெவ்வேறாக உள்ளன.[14][15] வின்லாந்து என்றவிடத்தின் இரண்டு நன்கு அறியப்பட்ட வரலாற்றுச் சான்றுகளை 1075ஆம் ஆண்டின் பிரெமனின் ஆதாம் என்ற நூலிலும் 1122இல் அரி த வைசு என்பவரால் தொகுக்கப்பட்ட ஐசுலாந்தியர்களின் நூல் என்ற நூலிலும் காண்கிறோம்.[16] எரிக் த ரெட் வரலாற்றுக்கதைகளின்படி, கிறீன்லாந்துக்கு கிறித்தவ சமயத்தைப் பரப்ப சென்ற லீப் கடல்வழி மாறி முதன்முதலாக வின்லாந்தை கண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.[12]

இந்த வரலாற்றுக்கதைகளை மொழிபெயர்த்து எழுதப்பட்ட ஐனார் ஹௌகனின் வின்லாந்திற்கானப் பயணங்கள் என்ற நூற்கூற்றுப்படி லீப் எரிக்சன் அமெரிக்காவைக் கண்ட முதல் ஐரோப்பியருமல்லர்; அங்கு கால் பதித்த முதல் முதல் ஐரோப்பியருமல்லர். யார்னி ஹெர்யோல்சன் என்ற வணிகர் வழிதவறி கிறீன்லாந்திற்கு மேற்கே நிலப்பகுதிகள் இருப்பதை கண்டதாக லீப் எரிக்சன் கேள்விப்பட்டார். இருப்பினும் யார்னி ஹெர்யோல்சன் அங்கு இறங்கவில்லை. பின்னர் நோர்வேயிலிருந்து கிறீன்லாந்து செல்லும் வழியில் கடல்வழிமாறி லீபும் தாம் எதிர்நோக்காத நிலப்பகுதியில் "தானே-விளைந்த கோதுமை வயல்களையும் திராட்சைத் தோட்டங்களையும்" கண்டுள்ளார். மேலும் இங்கு கப்பல் உடைந்து சிக்கியிருந்த இருவரைக் காப்பாற்றி தமது கப்பலில் ஏற்றி க்கொண்டு கிறீன்லாந்து சென்றடைந்துள்ளார். (அங்கிருந்த மக்களை கிறித்தவத்திற்கு மதமாற்றமும் செய்தார்.) [17] இக்கூற்றுக்களின்படி, யார்னி ஹெர்யோல்சனே அமெரிக்காவைக் கண்ட முதல் ஐரோப்பியராகவும் கப்பல் உடைந்ததால் அங்கு சிக்கியிருந்த பெயரறியா இருவருமே முதலில் அமெரிக்காவில் தரையிறங்கிய ஐரோப்பியர்களாகவும் கொள்ளப்படவேண்டும்.

லீஃப் யார்னியை அணுகி அவரது கப்பலை விலைக்கு வாங்கிக்கொண்டு முப்பதைந்து மனிதர்களுடன் யார்னி விவரித்த நிலப்பகுதிக்கு பயணம் மேற்கொண்டார்.[18] அவருடன் தந்தை எரிக்கும் கலந்து கொள்வதாக இருந்தது; ஆனால் கிளம்புவதற்கு முன்னால் குதிரையிலிருந்து கீழே விழுந்ததால் அதனை கெட்ட சகுனமாகக் கருதி அவர் கலந்து கொள்ளவில்லை.[19] லீப் யார்னி சென்ற வழிக்கு எதிர்சுற்றாகச் சென்று முதலில் கற்கள் நிறைந்த யாருமற்ற நிலப்பகுதியை அடைந்தார்; இப்பகுதிக்கு ஹெல்லுலாந்து (தட்டைக்கற்கள் நிலம், தற்போதைய பாஃபின் தீவாக இருக்கலாம்) எனப் பெயரிட்டார். மேலும் கடலில் பயணித்து இரண்டாவதாக மார்க்லாந்து (காட்டு நிலம், லாப்ரடாராக இருக்கலாம்) என அவர் பெயரிட்டப் பகுதியை அடைந்தார். இறுதியாக மேலும் இருநாட்கள் கடலில் பயணித்து வின்லாந்து (பெரும்பாலும் வைன்லாந்து என மொழிபெயர்க்கப்பட்டாலும் சரியான மொழிபெயர்ப்பு "பெரும் புல்வெளிகளையுடைய நிலப்பகுதி" ஆகும்) என அவர் பெயரிட்டப் பகுதியை அடைந்தார். அங்கு, லீபும் அவரது குழுவினரும் சிறு குடியிருப்பை ஏற்படுத்தினர். இவை பின்னாட்களில் கிறீன்லாந்திலிருந்து வந்தப் பயணிகளால் லீப்சுபுதிர் (லீஃபின் சவுக்கைகள்) என்றழைக்கப்பட்டன. குளிர்காலத்தை அங்கு கழித்த லீப் அங்கிருந்து திராட்சைகளுடனும் வெட்டுமரங்களுடனும் இளவேனிற் காலத்தில் கிறீன்லாந்து திரும்பினார்.[18][20]

மேற்சான்றுகள்

தொகு
  1. Leif Erikson Day in United States - timeanddate.com. Retrieved 11 April 2012.
  2. 2.0 2.1 2.2 "Vísindavefurinn: Var Leifur Eiríksson ekki Grænlendingur sem átti rætur að rekja til Íslands og Noregs?" (in Icelandic). Visindavefur.hi.is. July 14, 2001. Archived from the original on டிசம்பர் 26, 2018. பார்க்கப்பட்ட நாள் February 16, 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unrecognized language (link)
  3. "Leif Erikson (11th century)". BBC. பார்க்கப்பட்ட நாள் November 20, 2011.
  4. 4.0 4.1 Leif Eriksson - Encyclopædia Britannica, Inc., 2012. Retrieved 11 April 2012.
  5. Sverrir Jakobsson. "Was Leif Eiriksson not Greenlandic who had roots in Iceland and Norway?" July 14, 2001. Accessed March 23, 2013.
  6. http://books.google.is/books?id=A1lOzcKvAbIC&pg=PA30909&dq=leif+ericson&hl=is&sa=X&ei=EQ9PUb3pAYSMO7iXgcgO&redir_esc=y#v=onepage&q=leif%20ericson&f=false ஐக்கிய அமெரிக்க செனட்டின் பதிவேட்டிலிருந்து
  7. 7.0 7.1 Sanderson, Jeanette. (2002) Explorers, Teaching Resources/Scholastic. p. 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-439-25181-8.
  8. 8.0 8.1 8.2 "Leiv Eiriksson". Store norske leksikon (in Norwegian). பார்க்கப்பட்ட நாள் November 13, 2011.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  9. Ingstad, Helge; Ingstad, Anne Stine (2000). The Viking discovery of America: the excavation of a Norse settlement in L'Anse aux Meadows, Newfoundland. Breakwater Books. p. 74. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-55081-158-2.
  10. Dregni, Eric (2011). Vikings in the attic: in search of Nordic America. U of Minnesota Press. pp. 72–73. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8166-6744-4.
  11. Wiesner, Merry E.; Wiesner-Hanks, Merry E.; Wheeler, William Bruce; Doeringer, Franklin; Curtis, Kenneth R. (2011). Discovering the Global Past. Cengage Learning. p. 158. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-111-34142-8.
  12. 12.0 12.1 Somerville & McDonald, 2010, pp. 419–420.
  13. Lindkvist, Thomas (2003). "Early political organisation". In Helle, Knut (ed.). The Cambridge History of Scandinavia: Prehistory to 1520. Cambridge University Press. p. 212. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-47299-9.
  14. Somerville & McDonald, 2010, p. 350.
  15. Short, 2010, p. 203.
  16. "Vinland History". இயற்கை வரலாற்றுக்கான தேசிய அருங்காட்சியகம். Smithsonian Institution. Archived from the original on நவம்பர் 26, 2011. பார்க்கப்பட்ட நாள் November 23, 2011.
  17. http://www.archive.org/stream/voyagestovinland013593mbp/voyagestovinland013593mbp_djvu.txt
  18. 18.0 18.1 Short, 2010, pp. 203–204.
  19. Somerville & McDonald, 2010, p. 352.
  20. Somerville & McDonald, 2010, pp. 352–354.

உசாத்துணை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லீப்_எரிக்சன்&oldid=3656769" இலிருந்து மீள்விக்கப்பட்டது