லீஸ் மெயிட்னர்

லீஸ் மெயிட்னர் ( Lise meitner இடாய்ச்சு: [ˈmaɪtnɐ]  ; 7 நவம்பர் 1878 - 27 அக்டோபர் 1968) ஒரு ஆஸ்திரிய-சுவீடிய இயற்பியலாளர் ஆவார். கதிரியக்கம் மற்றும் அணு இயற்பியலில் ஆய்வுகள் செய்தவர். மெயிட்னர், ஓட்டோ ஹான் மற்றும் ஓட்டோ ராபர்ட் ஃப்ரிச் ஆகிய விஞ்ஞானிகள் தலைமையிலான சிறிய குழு, யுரேனியம் அணுக்கருவைப் பிளக்கும் போது அது கூடுதலாக நியூட்ரான்களை உறிஞ்சிக்கொள்கிறது என்ற ஆய்வு முடிவை 1939 ஆம் ஆண்டின் முற்பகுதியில் வெளியிட்டனர்.[4][5] யுரேனியம் அணுவை இரண்டு சிறிய அணுக்கருவாக பிளக்கும் பொழுது கூடவே, நிறைந்த ஆற்றலையும் வெளிப்படுத்த வேண்டும் என்ற செயல்முறைகளை மெயிட்னர், ஓட்டோ ஹான் மற்றும் ஓட்டோ ராபர்ட் ஃப்ரிச் ஆகிய விஞ்ஞானிகள் புரிந்து கொண்டனர். அணு உமிழ்வு மூலம் அணு உலைகளால் வெப்பம் மற்றும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.[6] இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு, 1945 ல் ஜப்பானுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட அணு ஆயுதங்களின் அடிப்படைகளில் இதுவும் ஒன்று.

லீஸ் மெயிட்னர்
1946 இல் லீஸ் மெயிட்னர்
பிறப்பு7 நவம்பர் 1878 [1][2]
வியன்னா, ஆத்திரியா-அங்கேரி
இறப்பு27 அக்டோபர் 1968(1968-10-27) (அகவை 89)
கேம்பிரிட்ச், இங்கிலாந்து
வாழிடம்ஆஸ்திரியா, ஜெர்மனி, சுவீடன், ஐக்கிய ராச்சியம்
குடியுரிமைஆஸ்திரியா (1949 க்கு முன்னர் ), சுவீடன் (1949 க்குப் பின்னர்)
துறைஇயற்பியல்
பணியிடங்கள்கெய்சர் வில்லெம் நிறுவனம்
பெர்லின் பல்கலைக்கழகம்,
svenska (sv)
இஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்வியன்னா பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்பிரான்ஸ் எஸ். எக்சனர்
Other academic advisorsலுட்விக் போல்ட்ஸ்மான்
மேக்ஸ் பிளாங்க்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
அர்னால்ட் பிளேமர்ஸ்ஃபெல்ட்
கான் சாங்க் வாங்
நிக்கோலாஸ் ரியேல்
ஏனைய குறிப்பிடத்தக்க மாணவர்கள்மேக்ஸ் டல்பர்க்
ஹான்ஸ் ஹெல்மன்
அறியப்படுவதுஅணுக்கருப் பிளவு
பின்பற்றுவோர்ஓட்டோ ஹான்
விருதுகள்
 • லீபன் பரிசு (1925)
 • மேக்ஸ் பிளாங்க் பதக்கம் (1949)
 • ஓட்டோ ஹான் பரிசு (1955)
 • ராயல் கழக உறுப்பினர் (1955)[3]
 • வில்லெம் எக்சனர் பதக்கம் (1960)
 • என்ரிக்கோ பர்மி விருது (1966)
கையொப்பம்

மெயிட்னர் பெரும்பாலான நேரங்களை ஜெர்மனியின் பெர்லினில் தனது அறிவியல் அனுபவத்தைப் பெறுவதற்காகச் செலவழித்தார், அங்கு அவர் இயற்பியல் பேராசிரியராகவும், கைசர் வில்ஹெல்ம் இன்ஸ்டிடியூட்டில் இயற்பியல் துறைத் தலைவராகவும் இருந்தார்; ஜெர்மனியில் இயற்பியல் முழுநேரப் பேராசிரியராகப் பணியாற்றிய முதல் பெண்மணி மெயிட்னர் ஆவார். நாஜி ஜேர்மனியின் யூத-எதிர்ப்பு நியூரம்பெர்க் சட்டங்கள் காரணமாக 1930 களில் இந்த பதவிகளை அவர் இழந்தார். 1938 இல் அவர் சுவீடன் சென்று அங்கு அவர் பல ஆண்டுகளாக வாழ்ந்து, இறுதியில் ஸ்வீடிஷ் குடியுரிமையைப் பெற்றார்.

மெயிட்னர் அவரது வாழ்வில் தாமதமாகத்தான் பல விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றார். 1944 இல் ஓட்டோ ஹான் வேதியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஆனால் மெயிட்னருடன் ஓட்டோ ஹான் இவ்விருதைப் பகிர்ந்து கொள்ளவில்லை . இது வேதியல் அணுகுமுறையில் மெயிட்னருடைய நீண்ட கால கூட்டுப் பணியாளர் ஓட்டோ ஹானுக்கு தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்டது. 1990 களில், ஓட்டோஹானுக்கு நோபல் பரிசைத் தீர்மானித்த அக்குழுவின் கோப்புகள் மீண்டும் பார்வையிடப்பட்டன. அந்தத் தகவல்களின் அடிப்படையில் பல அறிவியலாளர்களும் பத்திரிகையாளர்களும் நோபல் பரிசுக்கான மெயிட்னரின் விலக்கு "அநீதி" என்று குறிப்பிட்டனர். இறப்புக்குப் பின்னர் மெயிட்னருக்கு பல்வேறு விருதுகளும் கௌரவங்களும் வழங்கப்பட்டது. 1992 ஆம் ஆண்டில் ஒரு வேதியல் தனிமத்திற்கு 109 மெய்ட்னீரியம் என இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது .[7][8][9][10][11] நோபல் பரிசு வழங்கப்படாத போதிலும், 1962 ஆம் ஆண்டில் லிண்டாவ் நோபல் பரிசு பெற்றோர் கூட்டத்தில் கலந்துகொள்ள லீஸ் மீட்னர் அழைக்கப்பட்டார்.[12]

மேற்கோள்கள்

தொகு
 1. Sime, Ruth Lewin (1996). Lise Meitner: A Life in Physics. California studies in the history of science. Vol. 13. Berkeley, California: University of California Press. p. 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-08906-5.
 2. "Lise Meitner | Biography". atomicarchive.com. 27 அக்டோபர் 1968. பார்க்கப்பட்ட நாள் 9 ஏப்ரல் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 3. Otto Robert Frisch (1970). "Lise Meitner. 1878–1968". Biographical Memoirs of Fellows of the Royal Society 16: 405–426. doi:10.1098/rsbm.1970.0016. 
 4. Disintegration of Uranium by Neutrons: A New Type of Nuclear Reaction. . Meitner is identified as being at the Physical Institute, Academy of Sciences, Stockholm. Frisch is identified as being at the Institute of Theoretical Physics, University of Copenhagen.
 5. Physical Evidence for the Division of Heavy Nuclei under Neutron Bombardment.  [The experiment for this letter to the editor was conducted on 13 ஜனவரி 1939; see Richard Rhodes The Making of the Atomic Bomb 263 and 268 (Simon and Schuster, 1986).]
 6. "Lise Meitner Dies; Atomic Pioneer, 89. Lise Meitner, Physicist, Is Dead. Paved Way for Splitting of Atom.". த நியூயார்க் டைம்ஸ். 28 அக்டோபர் 1968. https://www.nytimes.com/1968/10/28/archives/lise-meitner-dies-atomic-pioneer-89-lise-meitner-physicist-is-dead.html. பார்த்த நாள்: 18 ஏப்ரல் 2008. "Dr. Lise Meitner, the Austrian born nuclear physicist who first calculated the enormous energy released by splitting the uranium atom, died today in a Cambridge nursing home. She was 89 years old." 
 7. https://www.northernhighlands.org/cms/lib5/nj01000179/centricity/domain/32/history_sheets.pdf
 8. I Wish I'd Made You Angry Earlier: Essays on Science, Scientists, and Humanity. Originally published as book review; see "A Passion for Science". http://www.nybooks.com/articles/1997/02/20/a-passion-for-science/. 
 9. "No Nobel Prize for Whining". https://query.nytimes.com/gst/fullpage.html?sec=health&res=9C02E4DE123EF933A15753C1A9659C8B63. பார்த்த நாள்: 3 ஆகஸ்ட் 2007. 
 10. "Otto Hahn, Lise Meitner and Fritz Strassmann". Science History Institute. பார்க்கப்பட்ட நாள் 20 மார்ச் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 11. "No Nobel for You: Top 10 Nobel Snubs". Scientific American.
 12. Wissenschaft aus erster Hand : 65 Jahre Lindauer Nobelpreisträgertagungen.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லீஸ்_மெயிட்னர்&oldid=3847440" இலிருந்து மீள்விக்கப்பட்டது