லுவாக்
லுவாக் (மலாய்: Luak) என்பது இந்தோனேசியா, சுமத்திரா, மினாங்கபாவ் மக்களின் அடாட் பெர்பாத்தே (Adat Perpatih) எனும் கலாசார மரபு வழக்கத்தில் ஒரு நிர்வாகப் பிரிவாகும்.
இந்த வழக்கம் மலேசியாவின் நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா மாநிலங்களில் இன்றும் பயன்பாட்டில் உள்ளது. மலேசியாவில் இந்த வழக்க முறை பயன்பாட்டில் இருந்தாலும, மாவட்டம் எனும் சொல் பயன்பாடே பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
லுவாக் பிரிவு ஓர் உண்டாங் அல்லது ஒரு பெங்குலு எனும் தலைவரால் நிர்வகிக்கப்படுகிறது. அவருக்கு அவரின் லுவாக் பகுதியில் முழு அதிகாரம் உள்ளது.[1].
பொது
தொகுநெகிரி செம்பிலான் மாநிலத்தில் தற்போது இரண்டு வகையான லுவாக் பிரிவுகள் உள்ளன. ஒரு பிரிவு லுவாக் பெருண்டாங் (Luak Berundang); மற்றொரு பிரிவு லுவாக் தானா மெங்கண்டுங் (Luak Tanah Mengandung). தம்பின் என்பது ஒரு வகையில் லுவாக் நிர்வாகப் பிரிவுதான். இருப்பினும் துங்கு பெசார் தம்பின் என்பவரால் ஆளப்படுகிறது.
பிரித்தானியர்களால் நெகிரி செம்பிலான் மாநிலம் காலனித்துவப்படுத்தப் படுவதற்கு முன்பு, ஒரு லுவாக் ஒரு மாநிலமாகக் கருதப்பட்டது. அந்த லுவாக் நிர்வாகப் பிரிவிற்கு ஓர் உண்டாங் அல்லது ஒரு பெங்குலு தலைவராக இருந்தார். அந்த உண்டாங் அல்லது பெங்குலு அந்த லுவாக் நிர்வாகப் பிரிவில் முழுமையான அதிகாரத்தையும் கொண்டிருந்தார்.[2]