உண்டாங் (மலாய்; ஆங்கிலம்: Undang) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பயன்படுத்தப்படும் தலைமை ஆளுநர்களின் பதவிப் பெயர் ஆகும். பொதுவாக உண்டாங் என்பவர்கள் ஆளும் தலைவர்கள் அல்லது வ்ட்டாரத் தலைவர்கள் ஆவர். "சட்டம்" என்று பொருள்படும் மலாய் சொல்லில் இருந்து உண்டாங் எனும் பெயர் பெறப்பட்டதாக நம்பப்படுகிறது.

1897-இல் நெகிரி செம்பிலான் உண்டாங் மாநாடு
(Chiefs of Negeri Sembilan, 1897 - British National Archives)

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் யாம் துவான் பெசார் அல்லது யாங் டி பெர்துவான் பெசார் எனும் பதவி; மற்றும் துங்கு பெசார் தம்பின் பதவி; ஆகிய இரு பதவிகளும் நெகிரி செம்பிலானின் ராஜா பதவிகள் என மலேசியாவின் கூட்டாட்சி அரசியலமைப்பு மற்றும் 1959 நெகிரி செம்பிலான் அரசாங்கத்தின் அரசியலமைப்பு வரையறுக்கின்றன.[1]

பொது

தொகு

இந்தோனேசியாவில் இருந்து 18-ஆம் நூற்றாண்டுகளில் இந்தோனேசிய மினாங்கபாவ் இனத்தவர்கள் மலேசியாவிற்குப் புலம் பெயர்ந்தனர். அவர்கள் நெகிரி செம்பிலானில் புதுக் குடியேற்றங்களை உருவாக்கினார்கள். பின்னர் புது மன்னராட்சியையும் தோற்றுவித்தார்கள்.[2]

இவர்களின் மன்னராட்சி முறை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மாறுபட்டு அமைகிறது. ஒரு மன்னரின் மகன் வாரிசாக அமையாமல்; ஒரு மாவட்டத்தின் தலைவர் மன்னராகப் பிரகடனம் செய்யப் படுகிறார். அதுவே இந்த மாநிலத்தில் காணப்படும் சிறப்புத் தன்மை ஆகும்.

வரலாறு

தொகு

17-ஆம் நூற்றாண்டின் இறுதியில், அன்றைய மலாயாவில் இருந்த நெகிரி செம்பிலான் மாநிலத்தில் குடியேறிய மினாங்கபாவு மக்களின் பிதுவாண்டா வம்சாவளியைச் சேர்ந்த சக்காய் மற்றும் ஜக்குன் இனக் குடும்பங்களில் இருந்து ஒரு பெங்குலு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்த பெங்குலுக்கள், குறிப்பாக சுங்கை ஊஜோங், செலுபு, ஜொகூல் மற்றும் ரெம்பாவ் போன்ற பகுதிகளின் பெங்குலுக்கள் மற்ற பெங்குலுக்களை விட தங்களின் தரத்தை உயர்த்திக் கொள்ளும் அளவுக்கு மிகுந்த ஆற்றல் பெற்றனர்.

இறையாண்மைத் தலைவர்கள்

தொகு

பின்னர் பழைய ஜொகூர் சுல்தானகத்தின் சுல்தான்களால், அந்த மினாங்கபாவு பெங்குலுக்கள் அவர்களின் சொந்த மாவட்டங்களில் இறையாண்மைத் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டனர். 18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், சுங்கை ஊஜோங், செலுபு, ஜொகூல் மற்றும் ரெம்பாவ் பகுதிகளின் தலைவர்கள்; மற்ற பெங்குலுக்களில் இருந்து தங்களை வேறுபடுத்திக் கொள்ள "உண்டாங்" என்ற அதிகாரப் பெயரைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

மலேசியாவின் நவீன கால அரசியலமைப்பின் 71, 160, 18-ஆம் விதிகள் அந்த உண்டாங்குகளின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகிறது. நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நான்கு உண்டாங்குகள் இருக்கின்றனர். இந்த நால்வரில் ஓர் உண்டாங்தான், நெகிரி செம்பிலான் மாநிலத்தின் சுல்தானாக தேர்வு செய்யப்பட்டு ஆட்சி செய்வார்.

ஆட்சியாளர் தேர்வு முறை

தொகு

நெகிரி செம்பிலானில் அதன் சுல்தான் எனும் ஆட்சியாளர் தேர்ந்தெடுக்கப் படும் முறை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மாறுபட்டு உள்ளது. மாநிலத்தின் உண்டாங் எனும் மாவட்டத் தலைவர்கள் ஓர் ஆட்சியாளரைத் தேர்வு செய்கின்றனர்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள நான்கு லுவாக் உண்டாங்குகளுக்கு மட்டுமே ஆட்சியாளரைத் தேர்வு செய்யும் உரிமை உண்டு. அந்த நான்கு லுவாக் உண்டாங்குகள்:

  • சுங்கை ஊஜோங் உண்டாங்
  • ஜெலுபு உண்டாங்
  • ஜொகூல் உண்டாங்
  • ரெம்பாவ் உண்டாங்

யாம் துவான் பெசார்

தொகு

ஆட்சியாளர்த் தேர்வில் உண்டாங்குகள் வாக்கு அளிக்கலாம். ஆனால், அவர்கள் ஆட்சியாளர் தேர்தலில் வேட்பாளராக நிற்க முடியாது. நெகிரி செம்பிலானின் ஆட்சியாளர் தேர்தலில் நிற்க வேண்டுமானால் அவர் ஒரு மலாய்க்கார ஆணாக இருக்க வேண்டும். ராஜா ராடின் இப்னி ராஜா லெங்காங் பாரம்பரியத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

இந்த மாநிலத்தின் தலைவரைச் சுல்தான் என்று அழைப்பது இல்லை. அவரை யாம் துவான் பெசார் என்று அழைப்பார்கள். டத்தோ கிளானா பெட்ரா ஸ்ரீ ஜெயா எனும் ஆளுமைப் பெயர், 1769ஆம் ஆண்டு ஜொகூர் சுல்தானிடம் இருந்து கிடைக்கப் பெற்றதாகும். முன்பு, நெகிரி செம்பிலான் மாநிலத்தை சுங்கை ஊஜோங் என்று அழைத்தார்கள்.

லுவாக் (மாவட்டம்) பதவி உண்டாங் (ஆளுநர்)[3] ஆட்சி தொடக்கம்
சுங்கை ஊஜோங் டத்தோ கிளானா பெட்ரா டத்தோ முபாரக் தோஹாக் 1993
செலுபு டத்தோ மெண்டிகா மந்திரி அகிருல்சமான் டத்தோ மாரோப் மாட் ரசாட் 2019
ஜொகூல் டத்தோ ஜோகான் பகலவான் லேலா பெர்காசா சித்தியவான் டத்தோ முகம்மது அப்துல்லா 2016
ரெம்பாவ் டத்தோ லீலா மகாராஜா டத்தோ முகம்மது சரீப் ஓத்மான் 1999
டத்தோ செடியா டி-ராஜா பொருத்தமில்லை பொருத்தமில்லை

மேற்கோள்கள்

தொகு
  1. Faridzwan Abdul Ghafar (2019). Balai Undang di Negeri Sembilan: 1933-2004. Sungei Ujong Press Resources. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789671716502.
  2. Birch, E.W. (1906). Election and Installation of Tungku Muhammad, C.M.G. Bin Tungku Antah, as the Yang Di Per Tuan Bĕsár, Negri Sembilan, the (JRASSB v.46 ed.). Malaya: Royal Asiatic Society - Straits Branch. pp. 9–22.
  3. "Undang Institution". State Government of Negeri Sembilan. பார்க்கப்பட்ட நாள் 2018-08-27.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உண்டாங்&oldid=3881949" இலிருந்து மீள்விக்கப்பட்டது