இலூனி ஆறு
வடமேற்கு இந்தியாவின் தார் பாலைவனத்தில் பாயும் ஆறுகளில் பெரியது இலூனி (Luni River) ஆகும்.[1] இது அஜ்மீர் அருகில் ஆரவல்லி மலைத் தொடரிலிலுள்ள புஷ்கர் பள்ளத்தாக்கில் உருவாகிறது. தார் பாலைவனத்தின் தென்கிழக்கு பகுதி வழியாகப் பாய்ந்து குஜராத்தில் உள்ள ரான் கட்ச் சதுப்புநிலங்களில் முடிவடைகிறது. இது சுமார் 495 கிலோமீட்டர்கள் (308 mi) தூரத்திற்குப் பயணிக்கின்றது. இது முதலில் சாகர்மதி என்று அழைக்கப்படுகிறது. பின்னர் கோவிந்த்கரைக் கடந்தபின், புஷ்கர் ஏரியிலிருந்து உருவாகும் துணை நதியான சரசுவதியைச் சந்திக்கிறது. பின்னர் இது இலூனி என்று அழைக்கப்படுகிறது.[2]
இலூனி ஆறு சாகர்மதி | |
---|---|
இலூனி ஆற்றின் பாதை அல்லது இலாவனராவி ஆறு தீர்மானிக்கப்பட்ட புராண சரசுவதி ஆற்றின் பாதை | |
பெயர் | Error {{native name}}: an IETF language tag as parameter {{{1}}} is required (help) |
அமைவு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ராஜஸ்தான் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | புஷ்கர் பள்ளத்தாக்கு அஜ்மீர் அருகே |
⁃ ஏற்றம் | 550 m (1,800 அடி) |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | குசராத்து |
⁃ ஆள்கூறுகள் | 24°39′N 71°11′E / 24.650°N 71.183°E |
நீளம் | 495 km (308 mi) |
வடிநில அளவு | 37,363 km2 (14,426 sq mi) |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
துணை ஆறுகள் | |
⁃ இடது | ஜவாய் நதி, சுக்ரி ஆறு, குகியா ஆறு, பேண்டி ஆறு |
⁃ வலது | ஜோஜ்ரி ஆறு |
1892 ஆம் ஆண்டில் ஜோத்பூர் பேரரசர் ஜஸ்வந்த் சிங் ஜோத்பூர் மாவட்டத்தில் பில்லாரா மற்றும் பாவி இடையே பிச்சியாக் கிராமத்தில் ஜஸ்வந்த் சாகர் ஏரியினை அமைத்தார். இது இந்தியாவின் மிகப்பெரிய செயற்கை ஏரிகளில் ஒன்றாகும். இதன் மூலம் 12,000 ஏக்கர்கள் (49 km2) நிலங்கள் நீர்ப்பாசன வசதி பெறுகின்றன.[2]
சொற்பிறப்பியல்
தொகுலூனி, இலாவனாவரி அல்லது இலாவனாவதி என்றும் அழைக்கப்படுகிறது. இதன் பொருள் சமஸ்கிருதத்தில் "உப்பு நதி" என்பதாகும். இந்த ஆற்றின் நீர் யர் உப்புத்தன்மை கொண்டது.[2]
கண்ணோட்டம்
தொகுலூனி நதி படுகை சுமார் 37,363 சதுர கிலோ மீட்டர் பரப்புடையது. இதில் அஜ்மீர், பார்மேர், ஜலோர், ஜோத்பூர், நாகவுர், பாலி மற்றும் ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டங்கள் மற்றும் வடக்கு குஜராத்தின் பனாஸ்காண்டா மற்றும் பதான் மாவட்டங்கள் அனைத்தும் அடங்கும். இதன் மிகப் பெரும் கிளை நதியாக சுக்ரி, மித்ரி, பந்தி, காரி, ஜவாய் ஆறு குகியா இடமிருந்தும் சாகி வலமிருந்தும் பாய்கின்றன.[1]
மேற்கு ஆரவல்லி மலைத்தொடரின் புஷ்கர் பள்ளத்தாக்கிலுள்ள அஜ்மீர் அருகே லூனி நதி சுமார் 550 மீ உயரத்தில் தொடங்குகிறது. இந்த கட்டத்தில், இந்த நதி, சாகர்மதி என்று அழைக்கப்படுகிறது. இந்த நதி பின்னர் ராஜஸ்தானில் உள்ள மார்வார் பிராந்தியத்தின் மலைகள் மற்றும் சமவெளிகள் வழியாக தென்மேற்கு திசையில் பாய்கிறது. இது தென்மேற்கில் பாய்ந்து தார் பாலைவனத்திற்குள் நுழைகிறது. இது கட்ச் பாலைவனத்தில் சிதறிப் பாய்கிறது. மொத்தம் 495 கி.மீ நீளமுள்ள இந்த ஆறு அதிக உப்புத்தன்மையுடன் இருந்தபோதிலும், இது இப்பகுதியில் ஓடக்கூடிய பெரிய நதியாகும். இது பாசனத்தின் முதன்மை ஆதாரமாகவும் உள்ளது. பாலோத்ராவை அடையும் வரை லூனி உப்புத் தன்மையுடையதாக இல்லை, இதன் பின்னரே மண்ணின் உப்புத் தன்மைகாரணமாக நீர் உப்புத்தன்மை பெறுகிறது.[1]
வரலாற்றுச் சிறப்புமிக்க காகர்-ஹக்ரா நதி வாய்க்காலின் தெற்குப் பகுதியாக லூனி இருந்திருக்கலாம்.[1]
துணை நதிகள்
தொகுஜவாய், சுக்ரி, குஹியா, பேண்டி மற்றும் ஜோஜாரி நதிகள் லூனி ஆற்றின் முக்கிய துணை நதிகள் ஆகும். ஆற்றின் வலது கரையில் ஒன்றிணைந்த ஒரே துணை நதி ஜோஜாரி, மற்ற 10 துணை நதிகள் அதன் இடது கரையை அடைகின்றன. ஜோஜாரி தவிர அனைத்து துணை நதிகளும் ஆரவல்லி மலையிலிருந்து தோன்றியவை.[3][4][5]
அணைகள் மற்றும் நீர்ப்பாசனம்
தொகுலூனி ஆற்றில் உள்ள அணைகள்:[3]
- தாண்டிவாதா அணை
- சிபு அணை
- ஜஸ்வந்த் சாகர் அணை - 1892 இல் மகாராஜா ஜஸ்வந்த் சிங் அவர்களால் கட்டப்பட்டது. இது இந்தியாவின் மிகப்பெரிய செயற்கை ஏரிகளில் ஒன்றாகும்.
லூனி ஆற்றின் இரண்டு பெரிய நீர்ப்பாசன திட்டங்கள் சர்தார் சமந்த் மற்றும் ஜவாய் அணை ஆகும்.[3]
திடீர் வெள்ளம்
தொகுஆழமற்ற படுக்கையில் நதி பாயுவதாலும், மழை நீரால் ஆற்றங்கரை எளிதில் உடைந்துவிடுவதால் லூனி ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்படுகிறது.[3]
2006ல் பாலைவனப் பகுதியில் பலத்த மழை பெய்தபோது மிக மோசமான வெள்ளம் ஏற்பட்டது. சுற்றியுள்ள பகுதி நீரில் மூழ்கி நீர்மட்டம் 15-25 அடியாக உயர்ந்தது. 2006ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, பார்மர் மாவட்டத்தில் ஆற்றின் குறுக்கே பல பகுதிகளை மூழ்கடித்து. இந்த வெள்ளத்தில் ஏராளமான மக்களும் விலங்குகளும் இறந்தன.[3]
2010ஆம் ஆண்டில், மற்றொரு வெள்ளம் ஏற்பட்டது, ஆனால் குறைவான உயிரிழப்புகள் இருந்தன.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Carling, Paul A.; Leclair, Suzanne F. (2018-07-16). "Alluvial stratification styles in a large, flash-flood influenced dryland river: The Luni River, Thar Desert, north-west India". Sedimentology 66 (1): 102–128. doi:10.1111/sed.12487. பன்னாட்டுத் தர தொடர் எண்:0037-0746.
- ↑ 2.0 2.1 2.2 Luni River, The Imperial Gazetteer of India. Vol. 16. 1909. pp. 211–212., see also The Imperial Gazetteer of India
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "Luni, the Indian river with saline water that doesn't drain into any sea or ocean: Facts you need to know". India Today. https://www.indiatoday.in/education-today/gk-current-affairs/story/luni-mysterious-indian-river-in-west-rajasthan-facts-html-1380307-2018-11-01.
- ↑ Luni Basin (Department of Irrigation, Government of Rajasthan)
- ↑ Luni tributaries (Department of Irrigation, Government of Rajasthan)