லூயிஸ் லாம்பியர்
லூயிஸ் லாம்பியர் (Louise Lamphere) (பிறப்பு 1940 ) ஒரு அமெரிக்க மானுடவியலாளர் ஆவார். இவர் 2001 முதல் நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பேராசிரியராக உள்ளார். அவர் 1976-1979 வரை ஆசிரிய உறுப்பினராகவும் பின்னர் 1986-2009 வரை பேராசிரியராக பணியாற்றினார்.
லூயிஸ் லாம்பியர் | |
---|---|
கல்விப் பின்னணி | |
கல்வி | |
கல்விப் பணி | |
கல்வி நிலையங்கள் |
|
Notable works | பெண், கலாச்சாரம் மற்றும் சமூகம் |
லாம்பியர் 1999 முதல் 2001 வரை அமெரிக்க மானுடவியல் சங்கத்தின் தலைவராகப். பணியாற்றினார்[1]
தொழில்
தொகுலாம்பியர் 1962 மற்றும் 1966 ஆம் ஆண்டுகளில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பையும், 1968 இல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்தையும் பெற்றார். நவாஜோ மக்கள் மற்றும் அவர்களின் மருத்துவ நடைமுறைகள், தொழில்மயமாக்கல், நகர்ப்புற மானுடவியல் போன்ற பல்வேறு தலைப்புகளில் இவர் தனது கருத்துகளை விரிவாக வெளியிட்டார்; ஆயினும்கூட, இவர் பெண்ணிய மானுடவியல் மற்றும் பாலினப் பிரச்சினைகள் குறித்த பணிக்காக மிகவும் பிரபலமானவராக அறியப்படுகிறார். ]
1977 ஆம் ஆண்டில், லாம்பியர் பத்திரிகை சுதந்திரத்திற்கான மகளிர் நிறுவனத்தின் கூட்டாளியானார்.
பெண், கலாச்சாரம் மற்றும் சமூகம் பத்திரிகையின் ஆசிரியர் மைக்கேல் ஜிம்பாலிஸ்ட் ரோசல்டோவுடன் இணை ஆசிரியராக லாம்பியர் இருந்தார், இது பாலினம் மற்றும் பெண்களின் நிலை பற்றிய மானுடவியல் ஆய்வு குறித்து வெளியான முதல் இதழாகும்.
1970 களில், பிரவுன் பல்கலைக்கழகத்தில் பணிக்கால நிர்ணயம் மறுக்கப்பட்ட பிறகு, பாலின பாகுபாட்டிற்காக அப் பல்கலைக்கழகத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்தார்.[2] அவ்வழக்கில், இவர் நீதிமன்றத்திற்கு வெளியே நடந்த உடன்பாட்டில் வென்றார். இவரது வெற்றி மற்றவர்களின் எதிர்கால வழக்குகளுக்கு ஒரு மாதிரியாக அமைந்தது. 2015 ஆம் ஆண்டில், பிரவுன் வழக்கு மற்றும் அதன் தீர்வின் முக்கியமான தாக்கத்தை ஆராயும் தொடர் நிகழ்வுகளை (ஒரு சிம்போசியம் உட்பட) அறிவித்தார்.
2005 ஆம் ஆண்டில், நியூ மெக்சிகோவில் மருத்துவ உதவி மேலாண்மையின் தாக்கத்தை ஆய்வு செய்த ஒரு இனவரைவியல் குழுவை லாம்பியர் மேற்பார்வையிட்டார். இந்தக் குழு அவர்களின் கட்டுரைகளை மருத்துவ மானுடவியல் காலாண்டு இதழின் சிறப்பு இதழில் வெளியிட்டது. இதழில் வெளியான இவரது அறிமுக உரையில், சுகாதாரப் பாதுகாப்பு மையங்கள், அவசர அறைகள் மற்றும் சிறு மருத்துவர்களின் அலுவலகங்களில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் மீது அதிகாரத்துவமயமாக்கலின் தாக்கத்தை இவர் வலியுறுத்தினார்.
லாம்பியர் ஆகஸ்ட் 5, 2017 அன்று மேம்பட்ட ஆராய்ச்சிக்கான பள்ளியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
விருதுகள்
தொகு2013 ஆம் ஆண்டில், அமெரிக்க மானுடவியல் சங்கத்திலிருந்து மானுடவியலுக்கான முன்மாதிரியான சேவைக்கான ஃபிரான்ஸ் போவாஸ் விருது அவருக்கு வழங்கப்பட்டது.
மே 24, 2015 அன்று, பிரவுன் பல்கலைக்கழகம் லாம்பியருக்கு, "அனைத்து ஆசிரியர்களுக்கும் சமத்துவம் மற்றும் நேர்மைக்காக நிற்பதில் தைரியம் மற்றும் நகர்ப்புற மானுடவியல், சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் பாலினப் பிரச்சினைகளின் முன்மாதிரியான தேர்வுகள்" போன்றவற்றில் இவரது சேவையை பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் )வழங்கியது,
2017 ஆம் ஆண்டில், சொசைட்டி ஆஃப் அப்ளைடு ஆந்த்ரோபாலஜியால் அவருக்கு ப்ரோனிஸ்லாவ் மாலினோவ்ஸ்கி விருது வழங்கப்பட்டது.
சான்றுகள்
தொகு- ↑ "Louise Lamphere Presented the Franz Boas Award in Anthropology". Women In Academia Report. 2013-11-20. பார்க்கப்பட்ட நாள் 2021-03-26.
- ↑ "Three Who Sued Brown University Over Hiring Are Granted Tenure" (in en-US). The New York Times. 1977-09-18. பன்னாட்டுத் தர தொடர் எண்:0362-4331. https://www.nytimes.com/1977/09/18/archives/three-who-sued-brown-university-over-hiring-are-granted-tenure.html.