லெட்சுமி கிருஷ்ணமூர்த்தி
லெட்சுமி கிருஷ்ணமூர்த்தி (1927/28 - 10 நவம்பர் 2018) இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த குணச்சித்திர நடிகையாவார். மலையாளத் திரைப்படத்துறையில் குணசித்திர நடிப்புக்காக பெரிதும் அறியப்பட்ட இவர், ஹரிஹரனின் பஞ்சாக்னி, ஜி அரவிந்தனின் வஸ்துஹாரா, கமலின் ஈ புழையும் கடன்னு, ஷாஜி என் கருணின் பிறவி மற்றும் சத்யன் அந்திகாட்டின் தூவல் கொட்டாரம் போன்ற திரைப்படங்களின் கதாபாத்திரங்களுக்காக லெட்சுமி பரவலாக அறியப்பட்டுள்ளார்.1996 ஆம் ஆண்டு மஞ்சு வாரியர் நடித்த ஈ புழையும் கடன்னு என்ற பிரபல திரைப்படத்திலும் நடித்துள்ளார்,
வாழ்க்கை
தொகு1986 ஆம் ஆண்டு வெளியான ஹரிஹரனின் பஞ்சாக்னி என்ற திரைப்படம் லெட்சுமியின் மலையாளத் திரைப்படத்துறையில் முதல் அறிமுகப்படமாகும். இதில் இவர் சுதந்திரப்போராட்ட வீரராக நடித்துள்ளார். அதற்க்கு முன்னதாக 1970 ஆம் ஆண்டில், சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்ற கன்னட திரைப்படமான குலிசுரா, லட்சுமியின் முதல் படமாகும். தொடர்ந்து ஆனந்த பத்ரம், களியூஞ்சல், பொந்தன் மட, பட்டாபிஷேகம், விஸ்மயா தும்பது, பிறவி, தூவல் கொட்டாரம், வஸ்துஹாரா, விஸ்மயம் மற்றும் மல்லு சிங் போன்ற மலையாளப் படங்களில் நடித்தார். அவர் கன்னட திரைப்படமான சன்ஸ்காரா, மணிரத்னத்தின் தமிழ் திரைப்படமான கன்னத்தில் முத்தமிட்டால் மற்றும் சந்தோஷ் சிவனின் மழைக்கு முன் என்ற இந்தி திரைப்படத்திலும் பாட்டி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.[1]
1928 ஆம் ஆண்டு கோழிக்கோடு சாலப்புரத்தில் முல்லசேரி கோவிந்தமேனனுக்கும் செமலத் தேவகியம்மாவுக்கும் மகளாகப் பிறந்தவர் லட்சுமி கிருஷ்ண மூர்த்தி. நாடகம், கதகளி மற்றும் நடனம் போன்ற கலைப் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்த லட்சுமி, சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளார். 1950 ஆம் ஆண்டு கோழிக்கோடு ஆகாஷ்வானியில் நாடகக்கலைஞர் மற்றும் அறிவிப்பாளராக சேர்ந்து, அனைத்திந்திய வானொலியில் அதிகாரியாக பணியாற்றி வந்த கிருஷ்ணமூர்த்தியை மணந்துள்ளார், திருமணத்திற்கு பிறகு,சில காலம் டெல்லி அனைத்திந்திய வானொலி நிலையத்தில் செய்தி தொகுப்பாளராகவும், முதல் மலையாள செய்தி வாசிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார். பின்னர், சில காலம் சென்னையிலும் அமெரிக்காவிலும் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்..[2]
இவரது தொண்ணூற்றோராவது வயதில், 10 நவம்பர் 2018 அன்று வயது காரணமாக மரணமடைந்துள்ளார்.[3] [4] [5]
திரைப்படவியல்
தொகு- பஞ்சாக்னி (1986) - மலையாளத்தில் அறிமுகமான படம்
- தனியாவர்த்தனம் (1987)
- பிறவி (1989)
- அக்ஷரம் (1990) - குறும்படம்
- வஸ்துஹாரா (1991)
- பொந்தன்மட (1994)
- சாகரம் சாக்ஷி (1994)
- விஷ்ணு (1994)
- சாக்ஷ்யம் (1995)
- ஈ புழையும் கடன்னு (1996)
- உத்யானபாலகன் (1996)
- தூவல்கொட்டாரம் (1996)
- கலியூஞ்சல் (1997)
- விஸ்மயம் (1998)
- இளமுற தம்புரான் (1998)
- ஆரம் ஜாலகம் (2001)
- காக்கே காக்கே கூடாதே (2002)
- கன்னத்தில் முத்தமிட்டல் (2002) - (தமிழ்)
- சித்திரகூடம் (2003)
- கதவசேஷன் (2004)
- விஸ்மயத்தும்பது (2004)
- மாணிக்யன் (2005)
- அனந்தபத்ரம் (2005)
- மழைக்கு முன் (2007) - (ஆங்கிலம்)
- மழைக்கு முன் (2008) - (மலையாளம்)
- அந்திபொன்வெட்டம் (2008)
- கேசு (2009)
- மல்லு சிங் (2012)
ஒலிச் சேர்க்கை
தொகு- பி.எஸ்.சரோஜாவுக்கு அம்மா (1952).
தொலைக்காட்சி தொடர்கள்
தொகு- நாலுகெட்டு
- மானசி
- ஆலிப்பழம்
- பெண்ணுரிமை
மேற்கோள்கள்
தொகு- ↑ "ലക്ഷ്മി കൃഷ്ണമൂർത്തി". M3DB (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-19.
- ↑ Daily, Keralakaumudi. "Malayalam actress Lakshmi Krishnamoorthy passes away". Keralakaumudi Daily (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-19.
- ↑ "Malayalam actor Lakshmi Krishnamoorthy passes away". 10 November 2018.
- ↑ "Malayalam actress Lakshmi Krishnamoorthy dies at 90". MSN.
- ↑ "Malayalam actress Lakshmi Krishnamoorthy dies at 90".