லெஸ்லி ஆரோன்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

லெஸ்லி ஆரோன் (Leslie Aaron) இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார்.[1] வலதுகை மட்டையாளரான இவர் வலதுகை மித பந்துவீச்சாளருமான இவர் கேரள அணிக்காக விளையாடினார். இவர் கேரள மாநிலம், கண்ணூரில் பிறந்தார்.

ஆரோன் ஒரு முதல் தரத் துடுப்பாட்டத்தில் விளையாடியுள்ளார். 1958 - 1959 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பைத் தொடரில், சென்னைஅணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். இதன் முதல் ஆட்டப்பகுதியில் 4 ஓட்டங்களும், இரண்டாவது ஆட்டப் பகுதியில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் 33 ஓவர்கள் வீசி வமன் குமார் உள்ளிட்ட 5 இலக்குகளைக் கைப்பற்றினார்.

சான்றுகள்

தொகு
  1. "leslie aronan indian cricketer".

வெளியிணைப்புகள்

தொகு

லெஸ்லி ஆரோன் -கிரிக்கெட் அர்சிவ்

"https://ta.wikipedia.org/w/index.php?title=லெஸ்லி_ஆரோன்&oldid=2582862" இலிருந்து மீள்விக்கப்பட்டது