லோட்டஸ் நோட்ஸ்

லோட்டஸ் நோட்ஸ் வாங்கி - வழங்கி (கிளையண்ட் சேவர் : Client Server) மற்றும் மின்னஞ்சல் கூட்டு முறையில் அமைந்த ஓர் மென்பொருளாகும். இதன் விருத்தியாளர்களான ஐபிஎம் லோட்டஸ் நோட்ஸை டெக்ஸ்டாபுடன் இணைக்கப்பட்ட வணிகரீதியிலான மின்னஞ்சல், நாட்காட்டி (காலண்டர்), மற்றும் லோட்டஸ் டொமினோவில் (formerly Lotus Domino[1]) உள்ள தகவல்களை ஓர் மென்பொருளாக வரையறுக்கின்றனர்.

லோட்டஸ் நோட்ஸ்

ஐபிஎம் லோட்டஸ் நோட்ஸ் 8 இன் வழமையான வரவேற்புப் பக்கம்.
பராமரிப்பாளர்: ஐபிஎம்
மென்பொருள் வெளியீடு: 8.0  (ஆகஸ்ட் 17, 2007) [+/-]
மேலோட்ட வெளியீடு: 8.0 Beta 3 (பொது)  (மார்ச் 15, 2007) [+/-]
இயங்குதளம்: பல் இயங்குதளம்
பயன்: கூட்ட இணைந்து வேலைசெய்ய உதவும் மென்பொருள்
உரிமம்: மூடியநிரல்
இணையத்தளம்: ஐபிஎம் லோட்டஸ் நோட்ஸ்

வசதிகள் தொகு

லோட்டஸ் நோட்ஸ் சம்பிரதாய பூர்வமான மின்னஞ்சல் மென்பொருட்களைத் தாண்டி நிகழ்நிலைத் தூதுவன் வசதி (லோட்ஸ் சேம்ரைம் - lotus sametime), உலாவி, குறிப்புப் புத்தகம், நாட்காட்டி மற்றும் வழங்களை ஒதுக்கும் கிளையண்ட் மற்றும் கூட்டிணைந்த மென்பொருட்களிற்கு ஓர் தளமாகவும் அமைகின்றது. லினக்ஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களில் இயங்கும் இம்மென்பொருளானது வர்தக அமைப்புக்களில் விரும்பப் படுகின்றது. இலங்கையில் ஐக்கிய நாடுகள் அமைப்பான உலக உணவுத் திட்டம், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் போன்றவை பாவித்து வருகின்றன. இதன் ஆரம்பகாலத்தில் பொதுவான பிரயோகங்களாக குழுவிவாதங்கள், மற்றும் எளிமையான தொடர்புத் தகவற் தளம் ஆகியவையே இருந்தன. ஆனால் இன்று லோட்டஸ் நோட்ஸ் பிளாக் (வலைப்பதிவு), விக்கி, RSS திரட்டிகள், முழுமையான வாடிக்களையாளர் சேவை, உதவி வழங்கும் சேவைகள் மாத்திரம் இன்றி லோட்ட்ஸ் நோட்ஸ்ஸில் டொமினோ டிசைனர் மூலமாக பொருத்தமான பிரயோக மென்பொருட்களையும் ஆக்கிக்கொள்ளலாம்.

நோட்ஸ் டொமினோ சேவர் அல்லாது மைக்ரோசாப்டின் IMAP மற்றும் POP முறையிலான சேவருடனும் இயங்கவல்லது. மின்னஞ்சலைப் பெறுபவரின் மின்னஞ்சல் முகவரியை LDAP முறையில் பெற்றுக் கொள்ளும் இது மைக்ரோசாப்டின் அக்ரிக் டைக்ரைக்றி உட்பட. லோட்டஸ் நோட்ஸ் இணையத்தில் உலாவும் வசதிகள் இருப்பினும் பெரும்பாலானவர்கள் தமக்கு பிடித்த உலாவியினையே பயன்படுத்தி வருகின்றனர்.

மின்னஞ்சல் மென்பொருளாக தொகு

பெரிய அமைப்புக்களில் இது பிரதான மென்பொருளாகப் பயன் படுகின்றது. IBM இன் தற்போதைய கணக்குப் படி 120 மில்லியன் பாவனையாளர்கள் இம் மென்பொருளைப் பாவித்து வருக்கின்றனர்.

பொதுவாக நிறுவனங்கள் லோட்டஸ் நோட்ஸ் சேவரை (அதாவது லோட்ட்ஸ் டொமினோ சேவர்) நிறுவும் போது பொதுவாக கிளையண்ட்களாக லோட்டஸ் நோட்ஸ் இருக்கும். எனினும் இதற்கு மேலதிகமாக டொமைனோ சேவர் POP3 மற்றும் மைக்ரோசாப்ட்டின் IMAP முறையிலமைந்த நீட்சிகள் ஊடாக ஆதரிக்கின்றது. உதாரணமாக DAMO - (Domino Access for Microsoft Outlook) என்ற நீட்சி மைக்ரோசாப்ட் அவுட்லுக் மின்னஞ்சல் மென்பொருளை லோட்ஸ் டொமினோ சேவருடன் இணைக்க உதவுகின்றது. இத்துடன் இணையமூடாக மின்னஞ்சல் நாட்காட்டிவசதிகளை பயர்பாக்ஸ், இண்டநெட் எக்ஸ்புளோறர் உலாவிகளூடாக வழங்கி வருகின்றது.

எரிதங்களை வடிகட்டும் மென்பொருட்கள் பல இருக்கின்றன. இவை லோட்டஸ் டொமினோ சேவரிலேயே தொழிற்படும். அவை பொதுவாக மின்னஞ்சலின் விடயத்தில் (subject) இல் [SPAM] என்பதைச் சேர்த்துவிடும் பின்னர் லோட்ஸ் நோட்ஸ் கிளையண்டில் மின்னஞ்சல் விதிகளைப் பாவித்து எரிதங்களை வடிகட்டலாம்.


மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லோட்டஸ்_நோட்ஸ்&oldid=3602695" இலிருந்து மீள்விக்கப்பட்டது