வர்க்கம் (சமூகவியல்)

(வகுப்பு (சமூகவியல்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சமூகவியலில் (குமுகாயவியலில்), வர்க்கம் அல்லது வகுப்பு என்பது, ஒரே சமூக பொருளாதார நிலையில் உள்ள மக்களின் குழுவைக் குறிக்கும். பழைய காலத்தில் இருந்தே, சமூகத்தில் நிலவும் வகுப்பு (வர்க்க) வேறுபாடுகளைப் பற்றிப் பலரும் பலவிதமான கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார்கள். தத்துவஞானியான அரிஸ்டாட்டில், செல்வர், வறியவர், இடைநிலையினர் என மூன்று வகுப்பினரைப் (வர்க்கத்தினரைப்) பற்றிக் குறிப்பிட்டுள்ளார். மார்க்சியக் கோட்பாட்டை நிறுவியவரான கார்ல் மார்க்ஸ், முதலாளி வர்க்கம், தொழிலாளி வர்க்கம் என இரண்டு வகுப்பினர் (வர்க்கத்தினர்) பற்றியே பேசுகிறார். ஆடம் சிமித் என்னும் பொருளியல் அறிஞர் தொழிலாளர், நில உடமையாளர், வணிகர் என்னும் மூன்று வகுப்பினர் பற்றிக் குறிப்பிட்டார் . இவர்கள் தவிர வேறு பலரும் சமுதாயத்தை வகுப்புகளாகப் பிரித்துள்ளார்கள். இவற்றுள் பொதுவாகக் காணப்படும் தன்மை என்னவெனில், இவர்கள் எல்லாருமே வர்க்கப் பிரிவுகளுக்கான அடிப்படையாகச் செல்வத்தை ஏற்றுக் கொண்டதேயாகும்.

வர்க்கமும் வாழ்முறைத் தெரிவும்

தொகு

வர்க்கம் சமூகப் கட்டமைப்புகளினால் நிர்பந்திக்கப்பட்ட ஒரு நிலை என்ற கருத்துருவே பல இடங்களிலும் இருந்தாலும், பலருக்கு இது ஒரு வாழ்முறை தெரிவாகவும் அமைவதுண்டு. எடுத்துக்காட்டாக நிலைத்து நிற்கும் சொத்துக்களைச் சேர்ப்பதில் (long term capital accumulation) சிலர் அக்கறை காட்டுவதில்லை. மாற்றாக தமது அன்றாட வாழ்வை சிறப்பாக அமைப்பதில் தமது வருமானத்தை செலவு செய்கின்றனர். மொத்த நிலையைக் கணக்கிட்டால் அவர்களுக்கு கடனும் இருக்கலாம். அதற்காக அவர்களை அடிமட்ட மக்கள் என்று வகைப்படுத்துவது தவறு.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "There are thousands of high-income Canadians with hardly any capital-no house, no mutual funds, no shares in a business - whose levels of consumption approach those of the super rich." Hymie Rubenstein. June 2003. "Marxist Class Warefare Lives On". Fraser Forum.
வர்க்கம் தொகு
வர்க்கம் | வர்க்க படிநிலை அடுக்கமைவு | சமூக அசைவியக்கம் | அடித்தட்டு வர்க்கம் | நடுத்தர வர்க்கம் | உயர் வர்க்கம் | en:Creative class | சாதி | பொருளாதார ஏற்றத்தாழ்வு | சமத்துவம்
சாதி தொகு
சாதி | சாதிப் பிரிவுகள் | இட ஒதுக்கீடு | வர்க்கம் | சமத்துவம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வர்க்கம்_(சமூகவியல்)&oldid=2740787" இலிருந்து மீள்விக்கப்பட்டது