வகுரம்பட்டி
வகுரம்பட்டி (Vagurampatty) தமிழ்நாடு, நாமக்கல் நகராட்சியைச் சேர்ந்த ஒரு கிராமம். இந்தக் கிராமம் நாமக்கல் நகரில் இருந்து ஐந்து கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வூர் நாமக்கல் மக்களவைத் தொகுதியில் இருக்கும் நாமக்கல் சட்டமன்றத் தொகுதிக்குள் அடங்குகிறது.
வகுரம்பட்டி | |
— கிராமம் — | |
ஆள்கூறு | 11°10′57″N 78°10′43″E / 11.182380°N 78.178668°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | நாமக்கல் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | எஸ். உமா, இ. ஆ. ப |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மக்கள் தொகை
தொகு2001 ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணிப்பீட்டின்படி, வகுரம்பட்டியின் மொத்த மக்கள் தொகை 4747. இதில் 2414 ஆண்களும் 2333 பெண்களும் அடங்குவர். மொத்த மக்கள்தொகையில் ஏறத்தாழ 29.8% பட்டியலிடப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 705 ஆண்கள், 711 பெண்கள். இந்தக் கணிப்பின்போது பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மூவரே இப்பகுதியில் இருந்துள்ளனர்.[3]
வரலாறு
தொகுசோழர் காலத்தில் வகுரம்பட்டி கொங்கு மண்டலம் என அழைக்கப்பட்ட மண்டலப் பிரிவுக்குள் அடங்கியிருந்தது. பிற்காலச் சோழர் காலத்தில் நாடு ஏழு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டபோது இவ்வூர் அதிராச மண்டலம் என்னும் பிரிவுக்குள் வந்தது. 13 ஆம் நூற்றாண்டில், விசயநகரப் பேரரசு கொங்கு நாட்டை 24 நாடுகளாகப் பிரித்த போது, வகுரம்பட்டி அரைய நாடு என்னும் பகுதிக்குள் கொண்டுவரப்பட்டது.[4]
16 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் விசயநகரப் பேரரசுக்குள் அடங்கியிருந்த இவ்வூர், பின்னர் மதுரை நாயக்கர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. 1533 ஆம் ஆண்டில் மதுரை நாகக்க மன்னர் விசுவநாத நாயக்கர் பாளையப்பட்டு முறையை உருவாக்கியபோது[5] வகுரம்பட்டி, சேந்தமங்கலம் பாளையப்பட்டுக்குள் அடங்கியது. 17 ஆம் நூற்றாண்டில் இராமச்சந்திர நாயக்கர் இப்பகுதியை ஆண்டு வந்தார்.[6] இவர் ஆங்கிலேயருக்கு எதிராகத் திப்பு சுல்தானை ஆதரித்ததால், இப்பாளையத்தை ஆங்கிலேயர் அழித்துவிட்டு இப்பகுதி முழுவதையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
பள்ளிகளும் கல்லூரிகளும்
தொகு- அரசு ஆரம்பப் பள்ளி, வகுரம்பட்டி
- டிரினிட்டி அக்காதெமி மெட்ரிக்குலேசன் உயர் இடைநிலைப் பள்ளி
- டிரினிட்டி பெண்கள் கல்லூரி, நாமக்கல்
- ஆஞ்சனேயா மெட்ரிக்குலேசன் உயர் இடைநிலைப் பள்ளி
குறிப்புக்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ Census of India - Final Population Totals - 2001
- ↑ கொங்கு வரலாறு
- ↑ மதுரை நாயக்கர்கள், தமிழ் இணையக் கல்விக் கழகப் பாடநெறிக்கான பாடம்.
- ↑ இராமச்சந்திர நாயக்கர்[தொடர்பிழந்த இணைப்பு], நாயக்கர் வரலாற்றுத்தளம்.