வங்காளதேச- இந்திய எல்லை

இந்திய - வங்கதேச சர்வதேச எல்லை

உள்நாட்டில் சர்வதேச எல்லை ( ஐபி ) என்று அழைக்கப்படும் வங்காளதேச-இந்திய எல்லை, வங்களாதேசத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே இயங்கும் ஒரு சர்வதேச எல்லையாகும் , இது வங்களாதேசத்தின் எட்டு பிரிவுகளையும் இந்திய மாநிலங்களின் பிரிவுகளையும் குறிக்கிறது .

பங்களாதேஷும் இந்தியாவும் 4,156-கிலோமீட்டர் நீளத்தைப் (2,582 mi) பகிர்ந்து கொள்கின்றன. இந்த சர்வதேச எல்லை, அசாமில் 262 (163 மைல்) கி. மீ. , திரிபுராவில் 856கி. மீ(532 மைல்), மிசோரத்தில் 180 கி. மீ (110 மைல்) மேகாலயாவில் 443 km (275 mi), மேற்கு வங்கத்தில் 2,217 km (1,378 mi) உட்பட உலகின் ஐந்தாவது மிக நீளமான எல்லை ஆகும் மைமென்சிங், குல்னா, ராஜ்ஷாஹி, ரங்க்பூர், சில்ஹெட் மற்றும் சிட்டகாங் ஆகியவற்றின் வங்காளதேசப் பிரிவுகள் இந்த எல்லையில் அமைந்துள்ளன. பல தூண்கள் இரு மாநிலங்களுக்கிடையிலான எல்லையைக் குறிக்கின்றன. சிறிய வரையறுக்கப்பட்ட பகுதிகளில் எல்லையின் இருபுறமும் வேலி அமைக்கப்பட்டுள்ளன. எல்லையை எளிதாக்குவதற்கான நில எல்லை ஒப்பந்தம் 2015, மே மாதம் 7 ஆம் தேதி அன்று இந்தியா மற்றும்வங்காளதேசத்தால் அங்கீகரிக்கப்பட்டது. [1]

வரலாறுதொகு

Post number 1273 of Bangladesh–India border

இந்தியா பிரிக்கப்பட்ட பின்னர் ஆகஸ்ட் 17, 1947 அன்று இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நிர்ணயம் செய்த எல்லைக் கோடாக ராட்க்ளிஃப் கோடு வெளியிடப்பட்டது.. எல்லைக் கமிஷன்களின் தலைவரான கட்டிடக் கலைஞர் சர் சிரில் ராட்கிளிப் என்பவரின் பெயர் இந்த எல்லைக்குச் சூட்டப்பட்ட்து, இவரே 88 மில்லியன் மக்களுடன் 450,000 சதுர கிலோமீட்டர்கள் (175,000 sq mi) பிரதேசத்தை சமமாகப் பிரித்தவர் ஆவார்.

சிக்கல்கள்தொகு

படிமம்:BGB Commander checking the dead Bangladeshi soldiers at the Border.jpg
பி.டி.ஆர் (இப்போது பிஜிபி) தளபதி எல்லையில் இறந்த பங்களாதேஷ் வீரர்களை சோதனை செய்கிறார்

இந்தியாவிலிருந்து வங்காளதேசத்துக்கு கால்நடைகள், உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கான பாதையாக இந்த எல்லை பயன்படுத்தப்படுகிறது. மேலும், வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேற இந்தியாவுக்கு எல்லை கடக்கின்றனர்.அதிக எண்ணிக்கையில் சட்டவிரோதமாகப் புலம்பெயர்ந்தோர் வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைவதால், இந்திய எல்லை ரோந்துகளால் சர்ச்சைக்குரிய “கண்டவுடன் துப்பாக்கியால் சுடும் கொள்கை” செயல்படுத்தப்பட்டுள்ளது.[2] சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையிலான வன்முறை அறிக்கைகளுடன் இந்த கொள்கை முன்னெடுக்கப்பட்டது. [3] இந்திய எல்லை பாதுகாப்பு படையினருக்கும் (பி.எஸ்.எஃப்) வங்காளதேச எல்லைக் காவலர்கள் இடையே குறிப்பாக 2001 ல் அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டன, .

ஜூலை 2009 இல், சேனல் 4 நியூஸ் இந்தோ-வங்காளதேசத் தடையில் பி.எஸ்.எஃப் ஆல் நூற்றுக்கணக்கான வங்காளதேச மக்கள் கொல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டது. சட்டவிரோத குடியேற்றத்தை சரிபார்ப்பதும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தடுப்பதுமே தடையின் முக்கிய நோக்கம் என்று இந்திய அரசின் எல்லை பாதுகாப்பு படை கூறுகிறது. 2010 ஆம் ஆண்டில், மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) 81 பக்க அறிக்கையை வெளியிட்டது, இது எல்லை பாதுகாப்பு படையின் கணக்கிட முடியாத முறைகேடுகளைக் கவனத்தில் கொண்டு வந்தது. எல்லை பாதுகாப்பு படையால் சித்திரவதைக்கு ஆளானவர்கள், சாட்சிகள், எல்லை பாதுகாப்பு படைஉறுப்பினர்கள் மற்றும் அதன் வங்காளதேச பிரதிநிதிகளிடமிருந்து எடுக்கப்பட்ட நேர்காணல்களிலிருந்து இந்த அறிக்கை தொகுக்கப்பட்டது. 21 ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் 1000 க்கும் மேற்பட்ட வங்காளதேச குடிமக்கள் கொல்லப்பட்டதாக அந்த அறிக்கை கூறியுள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பக அறிக்கையின் படி, எல்லை பாதுகாப்பு படை சட்டவிரோதமாக குடியேறியவர்களை அல்லது கடத்தல்காரர்களை மட்டுமல்ல, அருகில் காணப்பட்ட அப்பாவிகளையும், சில சமயங்களில் எல்லைக்கு அருகிலுள்ள வயல்களில் (விவசாய நிலங்களில்) வேலை செய்பவர்களையும் கூட சுட்டுக் கொன்றுள்ளனர். [4]

 
வங்காளதேச கடைசி வீடு, வங்காளதேச-இந்தியா எல்லையில் உள்ள தமபில், சில்ஹெட்டில் உள்ள ஜாய்ண்டா ஹில் ரிசார்ட்டில்

எல்லை பாதுகாப்பு படை அடிக்கடி வங்காளதேச எல்லைக்குள் ஊடுருவியதாகவும், இந்தியா-வங்காளதேச எல்லைகளில் பொதுமக்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றதாகவும் வங்காளதேச அரசாங்கத்தால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு பாரிய சட்டவிரோதக் குடியேற்றத்திற்கு பதிலடியாக இருந்தது, இதற்காக இந்தியா-வங்காளதேசத் தடை நடந்து வருகிறது. ஆகஸ்ட் 2008 இல் ஒரு செய்தி மாநாட்டில், இந்திய எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் முந்தைய ஆறு மாதங்களில் சட்டவிரோதமாக எல்லையை கடக்க முயன்ற 59 பேர் (34 வங்காளதேசியர்கள், 21 இந்தியர்கள், மீதி அடையாளம் தெரியாதவர்கள்) கொல்லப்பட்டதாக ஒப்புக்கொண்டனர். [5] 2010 ல் வங்காளதேசத்தின் தாகுர்காவ்ன் மாவட்டத்தில் உள்ள ஹரிபூர் உபசிலாவைச் சேர்ந்த 8 முதல் 15 வயது வரையிலான 5 வங்காளதேசக் குழந்தைகளை இந்திய எல்லை பாதுகாப்பு படைகடத்தியதாக வங்காளதேச ஊடகங்கள் குற்றம் சாட்டின. குழந்தைகள் எல்லைக்கு அருகே மீன்பிடி வலைகளை அமைத்துக் கொண்டிருந்தனர். இத்தகைய கண்மூடித்தனமான கொலைகளுக்கு எல்லை பாதுகாப்பு படையினர் மீது 2010 இல் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது. எல்லை பாதுகாப்பு படை கொன்று இறந்த உடலை வேலியின் மீது தூக்கிலிட்டன - திருமதி. ஃபெலானி (15 வயது வங்காளதேசப் பெண்) - 7 ஜனவரி 2011 அன்று. [6]

கடத்தல் மற்றும் அத்துமீறல், கால்நடைகளைத் தூக்குதல், போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் போன்ற பிரச்சினைகள் குறித்து விவாதிக்க இந்தியாவிற்கும் வங்காளதேசத்துக்கும் இடையில் பல மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. வங்காளதேச எல்லைக் காவலர்கள் படையைச் சேர்ந்த கர்னல் முஹம்மது ஷாஹித் சர்வார் இந்தியாவில் நடந்த குற்றங்களின் பட்டியலை எல்லை பாதுகாப்பு படைக்கு வழங்கினார், மேலும் எல்லை பாதுகாப்பு படை தரப்பும் இதேபோன்ற பட்டியலை வங்காளதேச எல்லைக் காவலர்கள்</a> படையிடம் ஒப்படைத்தது.

குறிப்புகள்தொகு

  1. "Parliament passes historic land accord bill to redraw border with Bangladesh". Times of India. 17 November 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. "India: New Killings, Torture at Bangladeshi Border". Human Rights Watch. 24 July 2011. 17 November 2016 அன்று பார்க்கப்பட்டது.
  3. "BSF jawan killed in ambush near Bangladesh border". DNA. 6 August 2010. 17 November 2016 அன்று பார்க்கப்பட்டது.
  4. "India/Bangladesh: Indiscriminate Killings, Abuse by Border Officers". Human Rights Watch. 9 December 2010. 23 January 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 January 2011 அன்று பார்க்கப்பட்டது.
  5. India says 59 killed over last six months on Bangladesh border, Reuters, 24 August 2008.
  6. "15 Years Innocent Bangladeshi Girl Felani Killed by Aggressive Indian Border Security Force (BSF)". 8 January 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 November 2016 அன்று பார்க்கப்பட்டது.