வசிட் மாகாணம்

ஈராக்கின் மாகாணம்

வசிட் கவர்னரேட் அல்லது வசிட் மாகாணம் (Wasit Governorate அரபு மொழி: واسط‎ ) என்பது கிழக்கு ஈராக்கில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இது பாக்தாத்தின் தென் கிழக்கே ஈரானின் எல்லையை ஒட்டி உள்ளது. 1976 க்கு முன்பு இது குட் மாகாணம் என்று அழைக்கப்பட்டது. மாகாணத்தின் தலைநகராக அல் குட் நகர் உள்ளது. பிற முக்கிய நகங்களாக அல்-ஹை மற்றும் அல்-சுவைரா ஆகியவை உள்ளன. மாகாணத்தின் ஷுவேஜா, அல்-அட்டாரியா மற்றும் ஹோர் ஆல்டெல்ம்ஜ் ஆகிய பகுதிகளில் மெசொப்பொத்தேமியாவின் சதுப்பு நிலங்கள் உள்ளன. பாக்தாத் மற்றும் பாஸ்ரா இடையேயான நடுப்பகுதியில் டைக்ரிசை ஒட்டி முந்தைய நகரமான வசிட் அமைந்திருந்தது. அதன் பெயரானது "மைய்ய" என்ற பொருள் கொண்ட அரபுச் சொல்லிலிருந்து தோன்றியது. டைக்ரிஸ் ஆற்று தன் போக்கை மாற்றிக்கொண்ட பின்னர் வசிட் நகரம் கைவிடப்பட்டது.

வசிட் மாகாணம்
محافظة واسط
Location of வசிட் மாகாணம்
ஆள்கூறுகள்: 32°40′N 45°45′E / 32.667°N 45.750°E / 32.667; 45.750
நாடு ஈராக்
தலைநகரம்குட்
பரப்பளவு
 • மொத்தம்17,153 km2 (6,623 sq mi)
மக்கள்தொகை
 (2015)[1]
 • மொத்தம்11,49,059
ம.மே.சு. (2017)0.656[2]
medium

வரலாறு

தொகு

பண்டைய சுமேரிய நகர மாநிலமான டெர் நகரானது பத்ரா நகருக்கு அருகில் அமைந்துள்ளது.

ஈரான்-ஈராக் போரில், குறிப்பாக மார்ஷஸ் போரில் மாகாணமானது கடும் போரை சந்தித்தது.

2004 ஈராக் வசந்தகால சண்டையின் போது, மஹ்தி இராணுவம் தோற்கடிக்கப்படுவதற்கு முன்பாக ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 16 வரை தலைநகர் குட் நகரை மஹ்தி இராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொஞ்சகாலம் வைத்திருந்தது.

மக்கள் வகைப்பாடு

தொகு

மாகாண மக்கள் தொகை சுமார் 1,450,000 ஆகும். இதில் பெரும்பான்மையானவர்கள் சியா அரேபியர்கள் ஆவர். சதுப்பு நிலப்பகுதியானது பாரம்பரியமாக சதுப்புநில அரேபியர்களின் தாயகமாக உள்ளது. கிழக்கு நகரங்களான பத்ரா மற்றும் ஜாசனிலும் ஃபெய்லி குர்துகள் உள்ளனர். குட்டிற்கு கிழக்கே சிறிய அளவில் லூரிஷ் சமூகத்தினர் உள்ளனர்.

2007 ஆண்டு நிலவரப்படி, வேலையின்மை விகிதம் 10% மற்றும் வறுமை விகிதம் 35% என்று உள்ளது.

மாகாண அரசு

தொகு
  • ஆளுநர்: மாலிக் கலஃப் [3]
  • துணை ஆளுநர்: அகமது அப்து சலாம் [4]

மாவட்டங்கள்

தொகு
  • அல்-அஜீசியா
  • பத்ரா
  • அல்-ஹை
  • குட்
  • நுமனியா
  • சுவைரா

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 "Wassit Governorate Profile" (PDF). NGO Coordination Committee for Iraq (NCCI). December 2015. Archived from the original (PDF) on 27 ஜனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 30 April 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-13.
  3. Mohammed, Layla (1 February 2015). "New governor of Wasit assumes responsibility". Iraqi News. பார்க்கப்பட்ட நாள் 30 April 2017.
  4. Bullinger, James (November 2006). "Al-Aziziyah Primary Healthcare Clinic Opening Holds Hope for Iraqi People" (PDF). Archived from the original (PDF) on 8 October 2007. பார்க்கப்பட்ட நாள் 23 August 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வசிட்_மாகாணம்&oldid=3712762" இலிருந்து மீள்விக்கப்பட்டது