வடசேரி தழுவிய மகாதேவர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

வடசேரி தமுவிய மகாதேவர் கோயில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம், வடசேரி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு தமுவிய மகாதேவர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கன்னியாகுமரி
அமைவிடம்:நாகர்கோவில், வடசேரி, அகஸ்தீஸ்வரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:நாகர்கோவில்
மக்களவைத் தொகுதி:கன்னியாகுமரி
கோயில் தகவல்
மூலவர்:தழுவியமகாதேவர்
தாயார்:ஆவுடையம்பாள்
சிறப்புத் திருவிழாக்கள்:மார்கழி திருவிழா, திருக்கல்யாணம்
வரலாறு
கட்டிய நாள்:மூன்றாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் தழுவியமகாதேவர், ஆவுடையம்பாள் சன்னதிகளும், ஜீரதேவர், தட்ஷிணாமூர்த்தி, முருகர், சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர், ஸ்ரீசாஸ்தா, பிள்ளையார் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் உப கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் சிவாகம முறைப்படி நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. மார்கழி மாதம் மார்கழி திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஐப்பசி மாதம் திருக்கல்யாணம் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)