வடலி சகோதரர்கள்

வடலி சகோதரர்கள் - புரஞ்சந்த் வடலி மற்றும் பியாரேலால் வடலி - இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள அமிர்தசரஸ் மாவட்டத்தின் குரு கி வடலியைச் சேர்ந்த சூஃபி பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் ஆவர். [1] இருவரில் இளையவரான பியாரேலால் வடலி 4 மார்ச் 2018 அன்று தனது 75வது வயதில் அமிர்தசரஸ் ஃபோர்டிஸ் எஸ்கார்ட்ஸ் இருதய நிலையத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

வடலி சகோதரர்கள்
ராஜா ராணி இசைவிழாவில் வடலி சகோதரர்கள் பாடியபோது. புரஞ்சந்த் வடலி(இடது) மற்றும் பியாரேலால் வடலி(வலது)
பின்னணித் தகவல்கள்
பிறப்பிடம்அம்ரிஸ்தர், பஞ்சாப், இந்தியா
இசை வடிவங்கள்சூஃபி இசை, பஞ்சாப் நாட்டுப்புற இசை
இசைத்துறையில்1975 - நிகழ்காலம்

சூஃபி துறவிகளின் செய்திகளைப் பாடுவதற்காக பெயர்பெற்ற இசைக்கலைஞர்களின் ஐந்தாம் தலைமுறையில் பிறந்த வடலி சகோதரர்கள், சூஃபி பாடகர்களாக மாறுவதற்கு முன்பு மிகவும் எதிர்பாராத தொழில்களில் ஈடுபட்டிருந்தனர். மூத்த சகோதரரான புரஞ்சந்த் வடலி, 25 ஆண்டுகளாக அகாராவில் (மல்யுத்த வளையம்) இருந்தார். இளயவரான ப்யாரேலால் கிராமத்தில் ராஸ் லீலாவில் கிருஷ்ணனாக நடித்ததன் மூலம், பியாரேலால் குடும்பத்திற்கு வருமானத்திற்காகப் பங்களித்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

அவர்களின் தந்தையான தாக்கூர் தாஸ் வடலி, புரஞ்சந்தை இசையைக் கற்க வற்புறுத்தினார். பாட்டியாலா கரானாவின் உஸ்தாத் படே குலாம் அலி கான் போன்ற புகழ்பெற்ற இசையாசிரியர்களிடம் புரஞ்சந்த் இசை பயின்றார். பியாரேலால் தனது மூத்த சகோதரிடம் பயிற்சி பெற்றார். அவரை இறக்கும் வரையிலும் தனது குருவாகவும் வழிகாட்டியாகவும் கருதினார்.

தொழில் தொகு

அவர்களின் முதல் இசை நிகழ்ச்சி,அவர்களின் கிராமத்திற்கு வெளியே ஜலந்தரில் உள்ள ஹர்பல்லப் கோயிலில் நடைபெற்றது. 1975 ஆம் ஆண்டில், இருவரும் ஹர்பல்லப் சங்கீத் சம்மேளனத்தில்ல் நிகழ்ச்சி நடத்த ஜலந்தருக்குச் சென்றனர். ஆனால் அவர்களின் தோற்றம் காரணமாக பாட அனுமதிக்கப்படவில்லை. ஏமாற்றமடைந்த அவர்கள், ஹர்பல்லப் கோவிலில் ஒரு இசை சமர்ப்பனம் செய்ய முடிவு செய்தனர். அங்கு அகில இந்திய வானொலியின் நிர்வாகி, ஜலந்தர், அவர்களைக் கண்டு அவர்களின் முதல் பாடலைப் பதிவு செய்தார்.

வடலி சகோதரர்கள் குர்பானி, காஃபி, கஜல் மற்றும் பஜன் இசைவகைகளில் பாடியுள்ளனர். அவர்கள் குரு கி வடலியில் உள்ள தங்கள் மூதாதையர்கள் வீட்டில் வசிக்கின்றனர். மேலும் அதைப் பாதுகாப்பதாக உறுதியளிப்பவர்களுக்கே இசை கற்பிக்கிறார்கள். அவர்கள் தங்கள் சீடர்களிடம் கட்டணம் வசூலிக்க மாட்டார்கள்.மேலும் தெய்வீகத்திற்கு அர்ப்பணித்து மிகவும் எளிமையான வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

அவர்கள் சூஃபி பாரம்பரியத்தை ஆழமாக நம்புகிறார்கள். அவர்கள் தங்களை, பெரிய மகான்களின் பிரசங்கமானது மற்றவர்களுக்குக் கடத்தப்படும் ஒரு ஊடகமாகக் கருதுகிறார்கள். அவர்கள் வணிக ரீதியாக ஒருபோதும் ஈடுபடவில்லை. அவர்கள் பெயரில் ஒரு சில இசைப்பதிவுகள் மட்டுமே உள்ளன (பெரும்பாலும் நேரடி கச்சேரிகளில் இருந்து). அவர்கள் சுதந்திரமாகப் பாடுவதை தெய்வீகமானதாக நம்புகிறார்கள். அவர்கள் தங்கள் இசையில் மின்னனு சாதனங்களின் இசையைச் சேர்ப்பதில் ஏடுபாடு கொள்ளவில்லை. மேலும் ஆலாப் மற்றும் டான்ஸ் கருவிகளப் பயன்படுத்துவதிலேயே ஆர்வம் காண்பிக்கின்றனர். சுதந்திரமான சூழலில் தடையின்றி பாடினால் மட்டுமே ஆன்மீக உச்சத்தை அடைய முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

பாலிவுட் தொகு

2003 இல், அவர்கள் பாலிவுட்டில் இணந்தனர். இசை அமைப்பாளரும் எழுத்தாளருமான குல்ஜாரின் ஆத்மார்த்தமான பாடல் வரிகளை அவர்களின் தனித்துவமான பாணியில் பிஞ்சர் திரைப்படத்தில் வழங்கினர். தூப் திரைப்படத்திலும் ஒரு பாடல் பாடியுள்லனர். டிஸ்கவரி சேனல் அவர்களப்பற்றிய ஆவணப்படம் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.

இசைத்தொகுப்புத்தரவு தொகு

  • ஆ மில் யார்
  • பைகாம்-இ-இஷ்க்
  • இஷ்க் முஸாஃபிர்
  • பஞ்சாபின் நாட்டுப்புற இசை
  • யாத் பியா கி

திரைப்படவியல் தொகு

  • பிஞ்சர் (2003)
  • தூப் (2003)
  • சிக்கு புக்கு (2010, தமிழ்) பாடல்: "தூறல் நின்றாலும்" பாடியவர்கள்: ஹரிஹரன், வடலி பிரதர்ஸ்
  • தனு வெட்ஸ் மனு (2011)
  • மௌசம் (2011)

விருதுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Wadali Brothers wow audience in Singapore, get standing ovation". Times of India. 9 April 2017. https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/music/news/wadali-brothers-wow-audience-in-singaporeget-standing-ovation/articleshow/58091495.cms. 
  2. Puranchand Wadali & Pyarelal Wadali (Joint Award) (Folk Music, Punjab) 1991 Sangeet Natak Akademi Official listings.
  3. "Partners in MELODY". Indian Express. 4 February 2005.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Home - YesPunjab.com".

வெளி இணைப்புகள் தொகு

வார்ப்புரு:Padma Shri Award Recipients in Art

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடலி_சகோதரர்கள்&oldid=3702709" இலிருந்து மீள்விக்கப்பட்டது