வநாயுதேசம்
வநயுதேசம் பர்பரதேசத்திற்கு தெற்கிலும்,சிந்துதேசத்திற்கும்வடக்கிலும், சிந்துநதியின் மேற்குக் கரையில் சதுரமான சமமான பூமியாய் பரவி இருந்த தேசம்.[1]
இருப்பிடம்
தொகுஇந்த தேசத்தின் பூமி மட்டமானது, மேற்கு திசையில் இருக்கும் மலையின் அடிவாரத்தில் சற்று உயர்ந்தும், கிழக்குமுகமாய் கொஞ்சம் தாழ்ந்தும், இந்தத் தேசத்தின் எல்லையாக ஓடும் சிந்துநதியின் அருகில் சரிவாகவும், மண்பாக பூமியைவிட மணல்பாகமுள்ள பூமியே அதிகமாக இருக்கும்.[2]
மலை, காடு, விலங்குகள்
தொகுஇந்த தேசத்திற்கு வடக்கில் சகம், கக்ஷம், என்னும் இரு பெரியமலையும், இந்த இரு மலைகளும் மேற்கில் நீண்டு மகாமலை அடிவாரத்தோடு இணைந்து உள்ளது. இத்தேசத்தின் காடுகளில் பச்சைக்கிளி, பஞ்சவர்ணக்கிளி, குயில், மயில், சிறுகுருவி, ஊர்க்குருவி ஆகியவையும், உயர்சாதிக்குதிரையும் அதிகம் உண்டு.
நதிகள்
தொகுஇந்த வநயுதேசத்திற்கு சகம், கக்ஷம், என்னும் இரு பெரியமலையிலிருந்து உற்பத்தியாகும் கன்யகா என்ற நதி இந்த தேசத்தை செழிக்க வைத்து தேற்குமுகமாய் ஓடி, கிழக்குமுகமாய் திரும்பி சிந்துநதியுடன் இணைகிறது.
விளைபொருள்
தொகுஇந்த தேசத்தில் தேக்கு, பலா, பிரம்பு, திந்துகம், பூர்சரம் முதலியன அதிகமாய் விளைகிறது.
கருவி நூல்
தொகு- புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009