வனேடியம் சுழற்சி
வனேடியம் சுழற்சி (Vanadium cycle) என்பது உலகளவில் வனேடியத்தின் இரண்டு முக்கிய தேக்கங்களுக்கு இடையில் நடைபெறும் பரிமாற்றத்தைக் குறிக்கின்றது. இது இயற் மற்றும் வேதிச் செயல்முறைகளால் நிகழ்கின்றது. வனேடியத்தின் முக்கியத் தேக்கங்களாகக் கண்ட மேலோடு மற்றும் கடல் உள்ளது.[1] நிலக்கரி மற்றும் பெட்ரோலியம் உற்பத்தி போன்ற மானுடவியல் செயல்முறைகளாலும் வளிமண்டலத்தில் வனேடியம் வெளியிடப்படுகின்றது.
மூலங்கள்
தொகுஇயற்கை மூலங்கள்
தொகுவனேடியம் என்பது பூமியில் ஒப்பீட்டளவில் ஏராளமாகக் கண்ட சுவட்டில் காணப்படும் உலோகமாகும் (மேலோட்டில் மில்லியனுக்கு 100 பாகம்).[1] வனேடியம் வானிலையாலழிதல் மூலம் கனிமங்களிலிருந்து திரட்டப்பட்டு கடலுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. வனேடியம் காற்று அரிப்பு மற்றும் எரிமலை உமிழ்வுகள் மூலம் வளிமண்டலத்தில் நுழைகின்றது.[1] மேலும் இது மழைப்பொழிவு மூலம் பூமியினை அடையும் வரை வளிமண்டலத்திலேயே இருக்கும்.[1]
மானுடவியல் ஆதாரங்கள்
தொகுமனித செயல்பாடு வளிமண்டலத்தில் வனேடியம் வெளியேற்றத்தின் அளவை அதிகரித்துள்ளது.[2] வனேடியம் புதை படிவ எரிபொருட்களில் ஏராளமாக உள்ளது. ஏனெனில் இது கரிமப் பொருள் சிதைவின் போது பார்பிரின்களில் சேர்க்கப்படுகிறது.[3] நிலக்கரி மற்றும் பெட்ரோலிய தொழிற்சாலை மாசுபாடு வளிமண்டலத்தில் குறிப்பிடத்தக்க வனேடியத்தை வெளியிடுகிறது.[1] எஃகு வலுவூட்டல், மின்னணுவியல் மற்றும் மின்கலன் உட்பட தொழில்துறை நோக்கங்களுக்காக வனேடியம் பயன்படுத்தப்படுகிறது.[1]
ஏற்பி
தொகுகடல் வண்டல்களைப் புதைப்பதன் மூலமும், நீர் வெப்ப ஊற்றுகளில் இரும்பு ஆக்சைடுகளில் சேர்ப்பதன் மூலமும் வனேடியம் கடலிலிருந்து அகற்றப்படுகிறது.[1][4]
உயிரியல் செயல்கள்
தொகுஉலகளாவிய வனேடியம் சுழற்சியில் உயிரியல் செயல்முறைகள் ஒப்பீட்டளவில் சிறிய பங்கினை வகிக்கின்றன. வனேடியம் புரோமோபெராக்சிடேசு சில கடல் பாக்டீரியா மற்றும் அல்காக்களில் உள்ளது.[5] நைட்ரஜனேசுகளில் மாலிப்டினத்தின் இடத்தில் வனேடியம் இருக்கலாம்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 Schlesinger, William H.; Klein, Emily M.; Vengosh, Avner (2017). "Global biogeochemical cycle of vanadium" (in en). Proceedings of the National Academy of Sciences 114 (52): E11092–E11100. doi:10.1073/pnas.1715500114. பன்னாட்டுத் தர தொடர் எண்:0027-8424. பப்மெட்:29229856.Schlesinger, William H.; Klein, Emily M.; Vengosh, Avner (2017). "Global biogeochemical cycle of vanadium". Proceedings of the National Academy of Sciences. 114 (52): E11092–E11100. doi:10.1073/pnas.1715500114. ISSN 0027-8424. PMC 5748214. PMID 29229856.
- ↑ Hope, Bruce K. (1997). "An assessment of the global impact of anthropogenic vanadium" (in en). Biogeochemistry 37 (1): 1–13. doi:10.1023/A:1005761904149. பன்னாட்டுத் தர தொடர் எண்:1573-515X. https://doi.org/10.1023/A:1005761904149.
- ↑ Zhao, Xu; Xu, Chunming; Shi, Quan (2016), Xu, Chunming; Shi, Quan (eds.), "Porphyrins in Heavy Petroleums: A Review", Structure and Modeling of Complex Petroleum Mixtures, Structure and Bonding (in ஆங்கிலம்), Cham: Springer International Publishing, pp. 39–70, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/430_2015_189, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-319-32321-3
- ↑ Trefry, John H.; Metz, Simone (1989). "Role of hydrothermal precipitates in the geochemical cycling of vanadium" (in en). Nature 342 (6249): 531–533. doi:10.1038/342531a0. பன்னாட்டுத் தர தொடர் எண்:1476-4687. https://www.nature.com/articles/342531a0.
- ↑ Butler, Alison (1998). "Vanadium haloperoxidases" (in en). Current Opinion in Chemical Biology 2 (2): 279–285. doi:10.1016/S1367-5931(98)80070-7. பன்னாட்டுத் தர தொடர் எண்:1367-5931. பப்மெட்:9667930. https://www.sciencedirect.com/science/article/pii/S1367593198800707.
- ↑ Eady, Robert R. (1996). "Structure−Function Relationships of Alternative Nitrogenases". Chemical Reviews 96 (7): 3013–3030. doi:10.1021/cr950057h. பன்னாட்டுத் தர தொடர் எண்:0009-2665. பப்மெட்:11848850. https://doi.org/10.1021/cr950057h.