தொல்பழங்காலம்

பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய காலம்
(வரலாற்றுக்கு முந்திய காலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தொல்பழங்காலம் என்பது கற்காலம் தொடங்கிய காலத்துக்கும், மனிதர்களுக்கு எழுதும் பழக்கம் தோன்றியதற்கும் இடைப்பட்ட காலம் எனக் கருதப்படுகிறது. இது ~3.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் கல் கருவிகள் பயன்படுத்தத் தொடங்கியது முதல் ~5300 ஆண்டுகளுக்கு முன்பு எழுதும் முறைமைகள் கண்டுபிடிக்கப்பட்டது வரையிலான காலம் என்று வரையறுக்கப்படுகிறது.

தென்கிழக்கு துருக்கியில், கோபெக்லி டெபெ (Göbekli Tepe) என்ற இடத்தில், 11,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆரம்ப கற்கால மக்கள் சடங்குகள் செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட பெரிய கல் தூண்கள் மற்றும் பலகைகள்.

மெசபடோமியாவில்  உள்ள சுமேரிய நாகரிகம், சிந்து சமவெளி நாகரிகம்பண்டைய எகிப்து நாகரிகம் ஆகியவை முதன்மை நாகரிகங்கள் ஆகும். இவை தங்களுக்கு சொந்த எழுத்துக்களைக் கொண்டிருந்தன. வரலாற்று பதிவுகளை உருவாக்கின. இது வெண்கலக் காலத்திலேயே தொடங்கி விட்டது. அண்டை நாகரிகங்கள் இவற்றைப் பின்பற்றின. மற்ற பெரும்பாலான நாகரிகங்கள் இரும்புக் காலத்தின் போது தொல்பழங்காலத்தின் இறுதியை அடைந்துவிட்டன. தொல்பழங்காலத்தில் மூன்று கால அமைப்புகள் உள்ளன. அவை கற்காலம் வெண்கலக் காலம், மற்றும் இரும்புக் காலம் ஆகியவை. ஐரோவாசியா மற்றும் வட ஆப்ரிக்கா ஆகியவற்றில் உலோகப் பயன்பாடு மிகுந்து இருந்தது அமெரிக்காஓசியானியாஆஸ்திரேலியா மற்றும் சப்-சஹாரா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இதன் தாக்கம் குறைந்திருந்தது. ஆனால், இங்கு புதிய கலாச்சாரங்களுடன் அதிக அளவு கடின உலோகப் பயன்பாடு கொண்ட வேலைகள் நடைபெற்று வந்தன. அமெரிக்காவில்  முன் கொலம்பிய நாகரிகங்கள் ஏற்படும் முன்னும், ஐரோவாசியகள் கலாச்சாரத்திற்கு முன்னும், சிக்கலான எழுத்து முறைமைகள் அறியப்படவில்லை. மிகச் சமீப காலங்களில் இவை முன் வரலாற்றுக் காலத்தை எட்டின.

யூரேசியாவுக்கு வெளியே உள்ள பல கலாச்சாரங்களில் எழுது பொருட்கள் வெவ்வேறு காலங்களில் அறிமுகமாகின. எழுது பொருட்களின் புழக்க காலமே உள்ளூர் வரலாற்றுக் காலமாகும். அதன்பின் எழுத்துமுறை என்பது வெற்றிக் கலாச்சாரமாக அறியப்பட்டது. முன் கலாச்சாரங்கள் எழுதப்பட்டன. தொல்பழங்காலத்தைப் பற்றி எழுதப்பட்ட பதிவுகள் ஏதும் இல்லை. எனவே வரலாற்றுக்கு முந்தைய காலப் பொருட்களின் வயதைக் கணிப்பது கடினமாக உள்ளது. 19 ஆம் நூற்றாண்டு வரை காலத்தை கணிப்பதற்கான தெளிவான நுட்பங்கள் அறியப்படவில்லை.[1]

வரையறை

தொகு
 
வரலாற்றுக்கு முந்தைய ஒரு மனிதன் மற்றும் சிறுவன்.
 
வன உயிர்களிடையே மனிதன்

தொடக்கம்

தொகு

அண்டம் அல்லது பூமி தோன்றியதிலிருந்து உள்ள இடைவெளிக் காலம் அல்லது அதிகளவில் குறிப்பிடப்படுவதுபோல் பூமியில் உயிர்கள் தோன்றியதிலிருந்து உள்ள காலம் அல்லது மிகக் குறிப்பாக கூறுவோமானால் மனிதன்-போன்ற உயிரினங்கள் தோன்றியது முதல் உள்ள காலம் "முன் வரலாற்றுக் காலம்" அல்லது தொல்பழங்காலம் என்பதன் தொடக்கம் என்று வரையறுக்கப்படுகிறது.[2][3]

இறுதி

தொகு

ஒரு மதத்திலோ அல்லது பிராந்தியத்திலோ, முன் வரலாற்றுக் காலம் அல்லது தொல்பழங்காலத்தின் இறுதி என்பது, அந்த மதத்தில் அல்லது பிராந்தியத்தில், அவை தொடர்பாக எழுதப்பட்ட வரலாற்றுப் பதிவுகள், ஒரு அறிவுசார் வளமாக பயன்பாட்டுக்கு வந்த காலமாகும். எழுத்தில் வரலாற்றுப் பதிவுகள் வரத் தொடங்கிய காலத்துடன், அந்த மதம் அல்லது பிராந்தியத்திற்கான தொல்பழங்காலம் முடிவுக்கு வருகிறது.

உதாரணமாக:

இந்நிலையில், வரலாற்றாசிரியர்கள் உரிய ஆதாரங்களுடன் பாரபட்சமற்ற முறையில் வரலாற்றுக்கு முந்தைய கால இறுதியைக் கணக்கிட வேண்டும். இது ரோமன் மற்றும் கிரேக்க கலாச்சாரங்களுக்கு மிகவும் பொருந்தும்.

கால அளவுகள்

தொகு

வரலாற்றுக்கு முந்தைய காலத்தை பிரிக்கும் முறைகள்:

  • வரலாற்றாசிரியர்கள் பொதுவாக மூன்று வயது அமைப்புகளைப் பயன்படுத்துகின்றனர்
  • அறிஞர்கள் வரலாற்றுக்கு முந்தைய காலத்தைக் கணக்கிட நன்கு வரையறுக்கப்பட்ட புவியியல் பதிவுகள் மற்றும் அதன் சர்வதேச அளவில் வரையறுக்கப்பட்ட அடுக்கு மண்டல புவியியல் நேர அளவைகளைப் பயன்படுத்துகின்றனர்

வரலாற்றின் முற்பகுப்பானது, மூன்று தொடர்ச்சியான காலங்களில், பகுக்கப்பட்டது. அவற்றின் அடிப்படையில் முக்கிய கால அளவிடல் கருவி தொழில்நுட்பங்கள் திட்டமிடப்பட்டன.

காலத்தின் வரலாறு

தொகு

தொல்பொருள் வல்லுநர்கள், எழுதப்படாத பதிவுகளற்ற பழங்கால மக்களைக் குறிக்கும் போது, முதனிலை இன மனிதன் என்று குறிப்பிட்டனர்.[5] இந்நிலையில், "வரலாற்றுக்கு முந்தைய காலம்" சார்ந்த விளக்கத் தெளிவு பெறுதல் அவசியமானது. எனவே இச்சொற்றொடர் உருவானது. 1836 இல் ஆங்கிலத்தில் வெளியுறவு காலாண்டு ஆய்வுப் பதிப்பில் இருப்பினும், வரலாற்றுக்கு முந்தைய காலம் என்ற சொற்றொடரின் முதல் பயன்பாடு வெளியானது.[6]

ஆய்வின் முக்கியத்துவம்

தொகு

வரலாற்றுக்கு முந்தைய காலம் பற்றி அறிய உதவும் முக்கிய மூலம் தொல்பொருளியல் ஆகும். ஆனால், சில அறிஞர்கள் இயற்கை மற்றும் சமூக அறிவியல் சான்றுகளைப் பயன்படுத்தத் தொடங்குகி உள்ளனர்.[7][8][9] ஆழ்ந்த வரலாற்றறிஞர்களால் இந்த கருத்து முன்வைத்து ஆதரிக்கப்படுகிறது.

கற்காலம்

தொகு

பழைய கற்காலம்

தொகு
 
மைட்டோகான்ட்ரியல் (mitochondrial) மக்கள்தொகை மரபியல் படி ஆரம்பகால மனித குடியேற்றங்களின் வரைபடம். எண்கள் பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பு இருந்தவை (துல்லியம் சர்ச்சைக்குரியது).

பழைய கற்காலம், கல் கருவிகள் பயன்பாட்டைக் முதலாகக் கொண்டு தொடங்குகிறது.

பழைய கற்காலம் என்பது ஆரம்ப காலக் கற்காலமாகும்.

பழைய கற்காலத்தின் ஆரம்பப் பகுதி கீழ்ப் பழைய கற்காலம் என அழைக்கப்படுகிறது. இது சுமார் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹோமோ ஹபிலிஸ்களையும் (Homo habilis), தொடர்புடைய இனங்களையும், அதிலிருந்து வந்த மனித சேப்பியன்களின் (Homo sapiens) வாழ்வையும், அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கல் கருவிகளையும் குறிக்கிறது.[10]

ஆரம்பகால மனித சேப்பியன்கள் சுமார் 200,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியிருந்தன. இது மத்திம பழைய கற்காலம் என்று அழைக்கப்படுகிறது. மத்திம பழைய கற்காலத்தின்போது நவீன மொழி திறனைக் குறிக்கும் உடற்கூறு மாற்றங்கள் எழுகின்றன.[11]

மத்திம பழைய கற்காலம் முழுவதும், மனிதர்கள் பொதுவாக நாடோடிகளாகவும், வேட்டைக்காரர்களாகவும், நாடோடி வேட்டைக்கார சமூகங்களாகவும் வசித்து வந்தனர். இச்சமூகங்கள், சிறியனவாகவும், மனித சமூக சமத்துவம் உடையதாகவும் இருந்தன.[12] இச்சமூகங்கள், ஏராளமான இயற்கை ஆதாரங்களைப் பெற்றிருந்தன. மேம்பட்ட உணவு-சேமிப்பு நுட்பங்களைக் கொண்டிருந்தன. சில சமயங்களில் சிக்கலான சமூக கட்டமைப்புகளுடன் கூடிய ஒழுக்கமான வாழ்க்கை முறையைப் பின்பற்றின.

இடைக் கற்காலம்

தொகு
 
அடிமரத்தாற் குடைந்த படகு ஆதாரம்

இடைக் கற்காலம் என்பது கிரேக்க மொழியில் "mesos=நடுத்தர", மற்றும் "lithos=கல்" என்பதைக் குறிக்கிறது.

பழைய கற்காலத்திற்கும், புதிய கற்காலத்திற்கும் இடையே உள்ள மனித தொழில்நுட்ப வளர்ச்சி, இடைக் கற்காலத்தின் தாக்கம் ஆகும். இந்த காலத்தில் காடழிப்புக்கான முதல் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டன. விவசாயம் செய்வதற்கு நிலங்கள் தேவைப்பட்டதால் அவர்கள் காடுகளை அழித்தனர். இது நவீன கற்காலத்திற்கான ஆரம்ப அறிகுறியாகும்.

புதிய கற்காலம்

தொகு
 
3900 கி.மு., ஹாகர் கிம் (Hagar Qim), மால்டாவின் (Malta) கான்டிஜா (Ġgantija) கற்கோவில் வளாகத்தின் நுழைவாயில்.[13]
 
வளையல்கள், கோடாரி தலைகள், உளிகள், மெருகூட்டல் கருவிகளும் உள்ளிட்ட புதிய கற்கால கை வண்ணப் பொருள்களின் வரிசை. புதிய கற்கால கல் கலைக்கூடங்கள் பளிச்சென வரையறுக்கப்பட்டவையாகும்.

புதிய கற்காலம் பழைய கற்காலத்தில், பல வகை மனிதர்கள் வாழ்ந்திருக்கலாம். எனினும், புதிய கற்காலத்தில் ஹோமோசெபியன்ன்ஸ் மட்டுமே இருந்தனர். புதிய கற்காலம் என்பது நடத்தைகள், கலாச்சார பண்புகள், நடத்தை மாற்றங்கள், கலாச்சார மாற்றங்கள் ஆகியவற்றின் முன்னேற்றமாகும், இது, காட்டுப் பயிர்கள், உள்நாட்டுப் பயிர்கள், காட்டு விலங்குகள், வீட்டு விலங்குகள் ஆகியவற்றின் பயன் தெரிந்த காலமாக இருந்தது.

12,200 ஆண்டுகளுக்கு முன்பு, புதிய கற்காலத் தொடக்கம் வரை, புளோரெஸ் மனிதன் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இது பழமையான தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் சமூக வளர்ச்சி ஆகியவற்றுக்கான ஒரு காலமாகும். இது கி.மு. 10,200ல் மத்திய கிழக்கில் சில பகுதிகளிலும், பின்னர், உலகின் பிற பகுதிகளிலும், பரவியது. கி.மு. 4,500ல் புதிய கற்காலம் தொடங்கி கி.மு. 2,000ல் முடிவுற்றது.

காலக் கோடு

தொகு

காலக் கோடு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் அனைத்து தேதிகளும் தோராயமானவை. மானுடவியல், தொல்லியல், மரபியல், புவியியல், அல்லது மொழியியல் துறைகளில் ஆராய்ச்சி மூலம் பெறப்பட்டவை மற்றும் உய்த்துணரப்பட்டவை.

புதிய கண்டுபிடிப்புகள் அல்லது மேம்படுத்தப்பட்ட கணக்கீடுகளால் இவை அனைத்தும் திருத்தியமைக்கப்படுகின்றன. இவற்றில் குறிக்கப்படும், பி.பி. (BP) என்பது, தற்போதைய காலத்திற்கு முன் (1950) என்பதையும், பி.சி.ஈ. (BCE) என்பது, பொது சகாப்தத்திற்கு முன் என்பதையும் குறிக்கின்றன.

கீழ்ப் பழைய கற்காலம்
தொகு
  • இ. 2.8 மில்லியன் ஆண்டுகள் பி.பி (BP) - ஹோமோ என்ற இனத்தோற்றம்.
  • இ. 2.5 மில்லியன் ஆண்டுகள் பி.பி - ஆரம்பகால மனித கருவிகளின் ஆதாரம்.
  • இ. 600,000 ஆண்டுகள் பி.பி - வேட்டையாடுவது - உணவு மற்றும் பொருள் சேகரிப்பது.
  • இ. 400,000 ஆண்டுகள் பி.பி - ஆரம்பகால மனிதர்கள் மூலம் தீ கட்டுப்பாடு குறித்து அறிந்திருத்தல்
  • மத்திம பழைய கற்காலம்
  • இ. 300,000-30,000 ஆண்டுகள் பி.பி - ஐரோப்பாவின் நியன்டர்தலில் (Neanderthal) முஸ்டெரியன் (Mousterian) கலாச்சாரம்.[14]
  • இ. 200,000 ஆண்டுகள் பி.பி - உடற்கூறியல் அடிப்படையில், ஆப்பிரிக்காவில் தோன்றிய நவீன மனிதர்கள். அவற்றில் மனிதக் குரங்கு வகை உயர் விலங்கினத்தின் ஒரு பிரிவு, பிற உயிரினங்களுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க உடல் முடிகளைப் பெற்றிருக்கவில்லை.
  • இ. 170,000? -83,000 ஆண்டுகள் பி.பி - உடைகள் கண்டுபிடிப்பு
  • இ. 75,000 ஆண்டுகள் பி.பி - டோபா எரிமலை வெடித்து, பாறைக் குழம்பை வெளியிட்டது.[15]
  • இ. 80,000-50,000 ஆண்டுகள் பி.பி - ஹோமோ சேபியர்கள் ஆப்பிரிக்காவை விட்டு ஒரே குழுவாக வெளியேற்றம்.[16][17]
  • அடுத்த நூற்றாண்டில், இந்த மக்கள், தெற்கு இந்தியா, மலாய் (Malay) தீவுகள், ஆஸ்திரேலியா, ஜப்பான், சீனா, சைபீரியா, அலாஸ்கா மற்றும் வட அமெரிக்காவின் வடமேற்கு கரையோரப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து சென்றனர்.
  • இ. 80,000-50,000? BP - நவீன நடத்தை, மொழி, அதிநவீன அறிவாற்றல், ஆகியவை பழைய கற்காலத்தில் மேலோங்கி இருந்தன.
  • இ. 45,000 BP / 43,000 பொது சகாப்தத்திற்கு முன் (பொ.ச.மு.-BCE) - பிரான்சில் சாட்டல்பெரோனியன் (Châtelperronian) கலாச்சாரத் தொடக்கம்.
  • இ. 40,000 BP / 38,000 (பொ.ச.மு.) - சிட்னி,[18][19] பெர்த்,[20] [34] மற்றும் மெல்போர்ன்[21] ஆகிய இடங்களில் முதல் ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் குடியேற்றம்.

மேற்கோள்கள்

தொகு
  1. Graslund, Bo. 1987. The birth of prehistoric chronology. Cambridge:Cambridge University Press.
  2. Fagan, Brian. 2007. World Prehistory: A brief introduction New York:Prentice-Hall, Seventh Edition, Chapter One
  3. Renfrew, Colin. 2008. Prehistory: The Making of the Human Mind. New York: Modern Library
  4. Matthew Daniel Eddy (Ed.) (2011). Prehistoric Minds: Human Origins as a Cultural Artefact. Royal Society of London.
  5. Eddy, Matthew Daniel (2011). "The Line of Reason: Hugh Blair, Spatiality and the Progressive Structure of Language". Notes and Records of the Royal Society 65: 9–24. doi:10.1098/rsnr.2010.0098. https://www.academia.edu/1112084/The_Line_of_Reason_Hugh_Blair_Spatiality_and_the_Progressive_Structure_of_Language_Notes_and_Records_of_the_Royal_Society_65_2011_9-24. 
  6. Eddy, Matthew Daniel (2011). "The Prehistoric Mind as a Historical Artefact". Notes and Records of the Royal Society 65: 1–8. doi:10.1098/rsnr.2010.0097. https://www.academia.edu/1130650/The_Prehistoric_Mind_as_a_Historical_Artefact_Notes_and_Records_of_the_Royal_Society_65_2011_1-8. 
  7. The Prehistory of Iberia: Debating Early Social Stratification and the State edited by María Cruz Berrocal, Leonardo García Sanjuán, Antonio Gilman. Pg 36.
  8. Historical Archaeology: Back from the Edge. Edited by Pedro Paulo A. Funari, Martin Hall, Sian Jones. Pg 8.
  9. Through the Ages in Palestinian Archaeology: An Introductory Handbook. By Walter E. Ras. Pg 49.
  10. The Essence of Anthropology 3rd ed. By William A. Haviland, Harald E. L. Prins, Dana Walrath, Bunny McBrid. Pg 83.
  11. Race and Human Evolution. By Milford H. Wolpoff. Pg 348.
  12. Vanishing Voices : The Extinction of the World's Languages. By Daniel Nettle, Suzanne Romaine Merton Professor of English Language University of Oxford. pp. 102–103.
  13. "Archived copy". Archived from the original on 2009-02-03. பார்க்கப்பட்ட நாள் 2009-02-20.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  14. Shea, J. J. 2003. Neanderthals, competition and the origin of modern human behaviour in the Levant. Evolutionary Anthropology 12: 173–187.
  15. "Mount Toba Eruption – Ancient Humans Unscathed, Study Claims" இம் மூலத்தில் இருந்து 2018-07-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180708135026/https://anthropology.net/2007/07/06/mount-toba-eruption-ancient-humans-unscathed-study-claims/. பார்த்த நாள்: 2008-04-20. 
  16. Zimmer, Carl (September 21, 2016). "How We Got Here: DNA Points to a Single Migration From Africa". New York Times. https://www.nytimes.com/2016/09/22/science/ancient-dna-human-history.html. பார்த்த நாள்: September 22, 2016. 
  17. This is indicated by the M130 marker in the Y chromosome. "Traces of a Distant Past", by Gary Stix, Scientific American, July 2008, pages 56–63.
  18. Macey, Richard (2007). "Settlers' history rewritten: go back 30,000 years". The Sydney Morning Herald. http://www.smh.com.au/news/national/settlers-history-rewritten/2007/09/14/1189276983698.html. பார்த்த நாள்: 5 July 2014. 
  19. "Aboriginal people and place". Sydney Barani. 2013. பார்க்கப்பட்ட நாள் 5 July 2014.
  20. Sandra Bowdler. "The Pleistocene Pacific". Published in 'Human settlement', in D. Denoon (ed) The Cambridge History of the Pacific Islanders. pp. 41–50. Cambridge University Press, Cambridge. University of Western Australia. Archived from the original on 16 February 2008. பார்க்கப்பட்ட நாள் 26 February 2008.
  21. Gary Presland, The First Residents of Melbourne's Western Region, (revised edition), Harriland Press, 1997. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-646-33150-7. Presland says on page 1: "There is some evidence to show that people were living in the Maribyrnong River valley, near present day Keilor, about 40,000 years ago."
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொல்பழங்காலம்&oldid=3924077" இலிருந்து மீள்விக்கப்பட்டது