வர்சா போசுலே

வர்சா போசுலே (Varsha Bhosle) என்பவர் ஓர் இந்தியப் பாடகராவார். மும்பையைச் சேர்ந்த இவர் ஒரு பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் பெயர் பெற்றவர் ஆவார். இந்திய பின்னணிப் பாடகி ஆசா போசுலேவின் மகளுமாவார்[1]

வர்சா போசுலே
Varsha Bhosle
பிறப்பு1956
நாக்பூர், இந்தியா
இறப்பு8 அக்டோபர் 2012(2012-10-08) (அகவை 55–56)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்எல்பின்சுடோன் கல்லூரி
பணிபாடகர், கட்டுரையாளர்
பெற்றோர்ஆசா போசுலே (தாயார்)
கண்பத்ராவ் போசுலே (தந்தை)
வாழ்க்கைத்
துணை
ஏமந்த் கெங்கிரே (–1998)

தொழில்

தொகு

இந்தி மற்றும் போசுபூரி மொழிகளில் வர்சா தொழில் முறையாகப் பின்னணி பாடல்கள் பாடியுள்ளார். பாடகியான அவரது தாயுடன் பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் சேர்ந்து பாடியுள்ளார். 1973 ஆம் ஆண்டில் மும்பையின் பெத்தெர் சாலையில் உள்ள இல் கிரெஞ்சு உயர்நிலைப் பள்ளியில் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் சபை சான்றிதழுடன் கல்வியை முடித்தார்[2]. மும்பையில் அமைந்துள்ள மும்பை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட எல்பின்சோன் கல்லூரியில் அரசறிவியல் துறையில் பட்டம் பெற்றார்.[2]

1997 - 2003 ஆண்டு காலப்பகுதியில் இந்திய இணையவழி ரெட்டிஃப்.காம் என்ற இணைய தளத்திற்காக சில கட்டுரைகள் எழுதினார். [3].1994 - 1998 ஆம் ஆண்டுகளில் ஞாயிறுதோறும் வெளிவந்த தி அப்சர்வர் என்ற நாளிதழில் கட்டுரைகள் எழுதினார். பிறகு 1993 ஆம் ஆண்டில் சென்டில்மேன் பத்திரிகையிலும் தடம் பதித்தார்.[1] டைம்சு ஆப் இந்தியா மற்றும் ராக்சாக் காவலர் பாதுகாப்பு இதழ் போன்றவற்றில் சில கட்டுரைகளை வர்சா எழுதியுள்ளார்.[1]

சொந்த வாழ்க்கை

தொகு

வர்சா தனது தாயுடன் மும்பையில் வசித்து வந்தார். ஏமந்த் கெங்ரே என்ற விளையாட்டுத் துறை எழுத்தாளர் மற்றும் மக்கள் தொடர்பு நிபுணரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் 1998 ஆம் ஆண்டில் விவாகரத்து செய்து கொண்டனர். பின்பு 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதியன்று மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்தை அதிகமாக உட்கொண்டு வர்சா தற்கொலைக்கு முயன்றார். மும்பையின் சாசுலோக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். [4][5] On 8 October 2012, Varsha committed suicide at her residence in Mumbai.[1]. பிறகு 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 ஆம் தேதியன்று மும்பையிலுள்ள அவரது வீட்டில் வர்சா தற்கொலை செய்து கொண்டார்.[1] வர்சா மும்பையில் பிரபு குஞ்ச் என்னும் அவரது இல்லத்தில் தலையில் தன்னைத்தானே தலையில் சுட்டுக் கொண்டு இறந்தார்.[1]. வீட்டின் சோபாவில் இரத்தக் வெள்ளத்தில் இருந்த காட்சியை அவரது தாயின் ஓட்டுநர் மற்றும் பணிப்பெண் ஆகியோர் கண்டனர். [1][2][5]பின்பு மும்பை காவலர்கள் வர்சா உரிமம் பெற்ற ஆயுதத்தால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் உறுதிபடுத்தினார்கள்.[5][6][7]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "Why did Asha Bhosles daughter Varsha commit suicide? Police clueless". இந்தியா டுடே. 8 October 2012. https://www.indiatoday.in/india/story/why-did-asha-bhosles-daughter-varshas-commit-suicide-police-clueless-118226-2012-10-08. பார்த்த நாள்: 2 August 2019. 
  2. 2.0 2.1 2.2 "Varsha Bhosle: Asha Bhosle's daughter had a troubled life - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா/Mumbai Mirror. 8 October 2012. https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/music/news/Varsha-Bhosle-Asha-Bhosles-daughter-had-a-troubled-life/articleshow/16734636.cms. பார்த்த நாள்: 2 August 2019. 
  3. Archive of Varsha Bhosle's articles on Rediff Retrieved 5 February 2012.
  4. "Asha's daughter in hospital after pill overdose News article adverse reaction"]. Mid Day. 10 September 2008 இம் மூலத்தில் இருந்து 5 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305165030/http://archive.mid-day.com/news/2008/sep/100908-Asha-Bhosle-Jaslok-Hospital-Varsha-Bhosle-suicide.htm. பார்த்த நாள்: 2 August 2019. 
  5. 5.0 5.1 5.2 "'Gautam's death depressed Asha Bhosle's daughter'". www.santabanta.com. 9 October 2012. Archived from the original on 22 ஜூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 2 August 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. Mateen Hafeez; Bharati Dubey (8 October 2012). "Varsha Bhosle, daughter of Asha Bhosle, commits suicide". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. TNN. https://timesofindia.indiatimes.com/city/mumbai/Asha-Bhosles-daughter-shoots-herself-in-head/articleshow/16722226.cms. பார்த்த நாள்: 2 August 2019. 
  7. Aditi Raja (8 October 2012). "Asha Bhosles daughter varsha bhosle commits suicide". India Today. https://www.indiatoday.in/india/story/asha-bhosles-daughter-varsha-commits-suicide-in-mumbai-118071-2012-10-08. பார்த்த நாள்: 2 August 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வர்சா_போசுலே&oldid=3592437" இலிருந்து மீள்விக்கப்பட்டது