வலிய கூனம்பைக்குளம் கோயில்
வலிய கூனம்பைக்குளம் கோயில் இந்தியாவில் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் வடக்கேவிளை அருகே உள்ள கூனம்பைக்குளத்தில் அமைந்துள்ள ஒரு இந்து கோயில் ஆகும். வலிய கூனம்பைக்குளம் கோயில் என்றும் அழைக்கப்படுகின்ற இக்கோயில் கேரளாவின் மிகப் பழமையான கோயில்களில் ஒன்றாகும். இதன் மூலவர் பத்ரகாளி ஆவார். அவரை கூனம்பைகுளத்தின் தாய் என்று குறிப்பிடும் வகையில் 'கூனம்பைகுளத்தம்மா' என்று கூறுகின்றனர். இக்கோயில் வலிய கூனம்பைக்குளம் பத்ரகாளி க்ஷேத்ரா அறக்கட்டளையின் கட்டுப்பாட்டில் இக்கோயில் உள்ளது. இந்த அறக்கட்டளையின் நிர்வாகத்தில் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பாரிப்பள்ளியில் வலியா கூனம்பைகுலதம்மா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (VKCET) என்ற பொறியியல் கல்லூரி இயங்கிவருகிறது.[1]
விழாக்கள்
தொகுஇக்கோயிலில் தினசரி வழிபாடு உள்ளூர் நேரப்படி காலை 04:00 மணிக்கு தொடங்கி 21:00 மணிக்கு நிறைவடைகிறது. இக்கோயிலின் முக்கியமான ஆண்டு விழாவானது, கொல்லம் காலத்தில் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்துடன் தொடர்புடைய கும்பத்தின் பரணி நட்சத்திரத்தில் நடைபெறுகிறது. அதனை 'கும்ப பரணி மகோல்சவம்' என அழைக்கின்றனர். ஆண்டுதோறும் நடைபெறுகின்ற சந்திரப் பொங்கல் விழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொள்கின்றனர்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Management". VKCET. Archived from the original on 30 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 29 May 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Chandra pongal at Koonambaikulam". தி இந்து. 6 March 2016. பார்க்கப்பட்ட நாள் 28 March 2016.