வலைவாசல்:அறிவியல்/சிறப்புப் படம்

பயன்பாடு‎ தொகு

சிறப்புப் பட துனைப் பக்கத்தின் வடிவமைப்பு - வலைவாசல்:அறிவியல்/சிறப்புப் படம்/வடிவமைப்பு.

சிறப்புப் படம் தொகு

வலைவாசல்:அறிவியல்/சிறப்புப் படம்/1

 
படிம உதவி: நாசா

புவியின் வளிமண்டலம் என்பது பூமியின் ஈர்ப்புச் சக்தியினால் அதனைச் சூழ்ந்து இருக்கும்படி அமைந்துள்ள பல்வேறு வாயுக்களின் படலமாகும். படத்திலுள்ளது விண்வெளியிலுள்ள நாசாவின் புவி ஆய்வு மையத்திலிருந்து எடுக்கப்பட்ட தென்சீனக் கடலின் மேலுள்ள வளிமண்டலத்தின் தோற்றம் ஆகும்.


வலைவாசல்:அறிவியல்/சிறப்புப் படம்/2

 
படிம உதவி: Tatoute & Phrood

படத்தில் இயற்கையில் எங்கும் காணப்படும் மின்காந்த நிறமாலை காட்டப்பட்டுள்ளது. இதில் முறையே இடமிருந்து வலமாக அனைத்தும் அலைநீளத்தினை அடிப்படையாகக் கொண்டு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அவை, காமா கதிர்வீச்சு, எக்ஸ் கதிர்கள், புறவூதாக்கதிர்கள், கட்புலனாகும் ஒளி, அகச்சிவப்புக் கதிர்கள், ரேடியோ அலைகள் ஆகும். இவை இவற்றின் அலைநீளத்தைப் பொறுத்துப் பல்வேறு பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.


வலைவாசல்:அறிவியல்/சிறப்புப் படம்/3

 
படிம உதவி: Jurii & Alchemist-hp

உயரிய வாயுக்களை ஒரு கண்ணாடிக் குழாயில் அடைத்து அதில் 5 kV மின்னழுத்தத்தில் 20 mA மின்னோட்டத்தை 25 kHz அதிர்வெண்ணில் தரும்போது இதுபோன்ற ஒளிர்தல் நிகழும். இந்நிகழ்வே இந்த வாயுக்கள் பொதுவான குமிழ் விளக்குகளில் பயன்படுத்தப்படக் காரணம் ஆகும். படத்தில் இடமிருந்து வலமாக ஹீலியம், நியான், ஆர்கான், கிரிப்டான், செனான் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


வலைவாசல்:அறிவியல்/சிறப்புப் படம்/4

 
படிம உதவி: நாசா

நாசாவின் விண்ணோடம் என்பது ஐக்கிய அமெரிக்க அரசினால் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பப் பயன்படுத்தப்படும் விண்கலம். இது அதிகாரபூர்வமாக ”விண்வெளி போக்குவரத்து முறை” என அழைக்கப்படுகிறது. கொலம்பியா, சேலஞ்சர், டிஸ்கவரி, அட்லாண்டிஸ் மற்றும் எண்டெவர் என கட்டப்பட்ட ஐந்து விண்ணோடங்களில் சேலஞ்சர் மற்றும் கொலம்பியா விண்வெளி பயணத்தின் போது விபத்துக்குள்ளாகி அழிந்து விட்டன. பன்னாட்டு விண்வெளி நிலையத்திலிருந்து அட்லாண்டிஸ் விலகிச் செல்கையில் எடுக்கப்பட்ட படம் இடப்புறம் உள்ளது.


வலைவாசல்:அறிவியல்/சிறப்புப் படம்/5

 
படிம உதவி: நாசா

டிஸ்கவரி விண்ணோடம் என்பது ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் ஓய்வு பெற்ற மூன்று விண்ணோடங்களில் ஒன்றாகும். 1984இல் டிஸ்கவரி விண்ணோடம் முதன் முதலில் செலுத்தப்பட்டது. இது விண்ணில் பல ஆய்வுகளையும் அனைத்துலக விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. ஹபிள் தொலைநோக்குக் கருவி முதன் முதலில் டிஸ்கவரி மூலமே விண்ணுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.


வலைவாசல்:அறிவியல்/சிறப்புப் படம்/6

 
படிம உதவி: US Air Force

ஒளியணு (ஃபோட்டான்) என்பது ஓர் அடிப்படைத் துகளாகும். இது மின்காந்த இடைவினை, ஒளி மற்றும் அனைத்து பிற மின்காந்த கதிர்வீச்சுகளின் அடிப்படையான அலகளவாகக் கொள்ளப்படுகிறது. இதன் அடிப்படைக் கருத்துருவாக்கம் ஐன்ஸ்டீனால் உருவாக்கப்பட்டது. இது நிறையற்றது, மின்சுமையற்றது; மேலும் வெளியில் தானாகச் சிதைவுறாது. இது வெற்றிடத்தில் ஒளியின் வேகத்தில் செல்லக்கூடியது. படத்தில் இராணுவ வீரர் ஒருவர் சீரான லேசர் கற்றையிலிருந்து வெளிவரும் ஒளியணுக்களைப் பார்வையிடுகிறார்.


வலைவாசல்:அறிவியல்/சிறப்புப் படம்/7

 
படிம உதவி:

இயற்கையில் பெரிதாக வளரக்கூடிய மரங்களைக் குறிப்பிட்ட முறைப்படியான கத்தரிப்பு மூலமும், அவற்றின் தண்டுகளில் கம்பிகளைச் சுற்றிக் கட்டுப்படுத்துவதன் மூலமும், உரிய அளவுக்கு வளரவிடாது, முதிர்ந்த மரங்களின் தோற்றத்தில் குள்ளமாகவும், மாறுபட்ட தோற்றத்துடனும் இருக்கும்படி சட்டிகளில் வளர்க்கும் முறை பொன்சாய் எனப்படும். நிப்பானிய மொழியில் இது "தட்டத் தோட்டம்" (盆栽) எனப் பொருள்படும். சீனக் கலையான "பென்ஜிங்" என்பதும் இது போன்றதே. இதிலிருந்தே பொன்சாய்க் கலை வளர்ந்ததாகக் கூறப்படுகின்றது.எந்த வகையான தாவரத்தையும் இவ்வாறு வளர்க்க முடியுமெனினும், குள்ளமாக வளர்ந்து முதிர்ந்த மரங்களின் தோற்றத்தைக் கொடுப்பதற்குச் சிறிய இலைகளைக் கொண்ட தாவரங்களே பொருத்தமானவை.


வலைவாசல்:அறிவியல்/சிறப்புப் படம்/8

 
படிம உதவி: Alchemist-hp

பிளாட்டினம் ஒரு வேதியியல் தனிமம். இதனைத் தகடாகவும் கம்பியாகவும் மாற்றலாம். பளபளப்பேறும் வெண் சாம்பல் நிறமுடைய எடைமிகுந்த உலோகம். தங்கம் போலவே விலை உயர்ந்த நகை அணிகள் செய்யவும் மின் கருவிகளில் உறுதியான மின்னிணைப்புதரும் மின் முனைகளாகவும் தானுந்துகளில் இருந்து வெளியேறும் வாயுக்களிலுள்ள சூழலுக்குக் கேடு தரும் கார்பன் மோனாக்சைடு போன்ற வாயுக்களின் நச்சுத்தன்மையைக் குறைக்கவும் இது பயன்படுகின்றது. படத்தில் உருக்கித் திண்மமாக்கப்பட்ட பிளாட்டினம் காட்டப்பட்டுள்ளது.


முன்மொழிதல் தொகு

இந்த பக்கத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் படிமங்களை இங்கு முன்மொழியவும்.

  1. தற்போது எதுவும் இல்லை.