வலைவாசல்:சமணம்/உங்களுக்குத் தெரியுமா/1
- சமணர்களின் கொல்லாமைக் கோட்பாட்டின் படி சைன ராமாயணத்தில் இராவணனை கொன்ற இலட்சுமணன் நரகத்திற்கும் இராமன் சொர்கத்திற்கும் செல்கின்றனர்.
- தமிழ் நாட்டில் பல இடங்களில் சமணர் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.
- தமிழ்நாட்டில் 20 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட 60 சமணர் கோயில்கள் உள்ளன.
- நாலடியார் எனப்படுவது சமண முனிவர்களால் தமிழில் எழுதப்பட்ட நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆன நானூறு நீதிப் பாடல்களின் தொகுப்பு ஆகும்.
- தற்காலம்வரை செந்தமிழுக்கான இலக்கணம் பெரும்பாலும் நன்னூலைப் பின்பற்றி உள்ளது.
- ஐஞ்சிறுகாப்பியங்களாக அறியப்படுபவை உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், நீலகேசி, சூளாமணி ஆகியவை ஆகும்.