வலைவாசல்:மின்னணுவியல்/மேற்கோள்

இது வலைவாசல்:மின்னணுவியல்இல் தோன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கோள்களின் காப்பகம் ஆகும்:

துலக்கத்திறன் (Responsivity) என்பது ஒரு கண்டுணர்வி கட்டகத்தின் உள்ளீடு-வெளியீடு ஈட்டத்தை அளப்பது ஆகும். ஒளிமின் கண்டுணர்வி ஒன்றை எடுத்துக்கொண்டால், அதில் ஒரு ஒளி உள்ளீடுக்கு வெளிவரும் மின்சாரத்தை அளந்து தருவது துலக்கத்திறன் ஆகும்.

நிறுத்தப்பட்டை (Stopband) என்பது குறித்த வரம்புக்குள் உள்ள அதிர்வெண்களின் பட்டையாகும். அந்த நிறுத்தப்பட்டையின் வழியாக மின்சுற்றுகள் எந்த குறிகைகளையும் உள்ளனுப்பாது அல்லது மெலிப்பானது தேவையான நிறுத்தப்பட்டை மெலிப்பு அளவை விட மிஞ்சியிருக்கும். பயன்பாட்டைப் பொருத்து, நிறுத்தப்பட்டைக்குள் உள்ள தேவையான மெலிப்பு 20 முதல் 120 டெசிபெல் வரம்புக்குள் இருக்கும், ஆனால் பெரும்பாலும் 0 டெசிபெல் கொண்டிருக்கும் வரைக் கடத்துப்பட்டை மெலிப்பை விட அதிகமாக இருக்கும்.

திண்மநிலை மின்னணுவியல் (Solid-state electronics) என்பது மின்னிகள் அல்லது மின்னூட்ட ஏந்திகள் திண்மப்பொருட்களுக்குள்ளேயே முழுவதும் கட்டுறக்கூடியத் திண்மப்பொருட்களினால் கட்டியமைத்தச் சுற்றுகள் அல்லது கருவிகள் ஆகும். இக்கலைச்சொல் சில வேளைகளில் வெற்றிடம் மற்றும் வளிம மின்னிறக்கக் குழாய்கள் போன்ற ஆரம்பத் தொழினுட்பங்களைக் குறிக்கப்பயன்படும்.

 
புயலின் போது மரக்கிளைகள் பட்டு ஏற்படும் ஒரு குறுக்குச் சுற்று

குறுக்குச் சுற்று அல்லது கு/சு (Short circuit or s/c) என்பது பெரும்பாலும் மின்சார மறிப்பு இல்லாத அல்லது குறைவானதாக உள்ள இடத்தில், திட்டமிடாத பாதையில் மின்சாரம் பாயுமாறு அமைந்துவிடுகிற ஒரு மின்சாரச் சுற்று ஆகும். குறுக்குச் சுற்றின் எதிர்மறை திறந்த சுற்றாகும். அது மின்சுற்றின் இரு கணுக்களுக்கு இடையில் அளவுகடந்த மின்தடை சேரும் பொழுது நேரும். ஆங்கிலத்தில் சார்ட்டு சர்கியூட் என அழைக்கப்பெறும் இச்சொல்லை சில வேலைகளில் மின்சார தடங்கல் பிறவற்றிற்கும் கூட தவறாக பயன்படுத்துவது ஒரு பொது வழக்காகும்.

சிதறல் அளபுருக்கள் (Scattering parameters) அல்லது சி-அளப்புருக்கள் (S-parameters) மின்சாரக் குறிகைகளினால் வெவ்வேறு நிலைத்த நிலை தூண்டல்கள் ஏற்படும் பொழுது, நேரியல் மின்சார வலையமைப்புகளின் மின்னியல் பண்புகளை விளக்குவதாகும்.

இந்த அளபுருக்கள் மின்சாரப் பொறியியல், மின்னணு பொறியியல் மற்றும் தெரிவிப்புப் பொறியியல் குறிப்பாக நுண்ணலை பொறியியல் போன்ற துறைகளில் பயன்படுகின்றன.

கணித்தல் விளிம்பு (Timing margin) என்பது குறிகையின் நிகழ் மாற்றத்திற்கும், குறிகை நன்றாக செயல்பட மாறும் கடைசி நேரத்திற்கு உள்ள வேறுபாட்டினை காட்டும் கோவையாகும். இதனை எண்முறை மின்னணுவியலில் பயன்படுத்துவர்.

 
ஒளியன் இரைச்சல் பாவனையாக்கம்

குண்டு இரைச்சல் (Shot noise) என்பது மின்சார ஊட்டங்களின் (மின்னூட்டுகளின்) ஒரு தனிப்பட்ட இரைச்சலை ஆதாரமாக கொண்ட ஒரு மின்னணு இரைச்சல் ஆகும். இந்த கலைச்சொல் சில நேரங்களில், குண்டு இரைச்சல் ஒளித் துகள்களின் பண்புகளுடன் தொடர்புடைய ஒளியியல் கருவிகளின் ஒளியன் பெருக்கிக்கு பயன்படுத்துவர்.

ஒரு பந்தணி (Ball grid array) என்பது பரபேற்றுச் சாதனங்களில் (Surface Mount Devices) ஒரு பொதிய முறை ஆகும். பந்தணி முள்ளணியிளிருந்து உருவாகிய பொதிய முறை. முள்ளணியில் ஒரு முகத்தில் முள்கள் நிரப்பப்படுகின்றன. பந்தணியில் முள்கள் சூட்டிணை பந்துகளால் (solder balls) மாற்றப்படுகின்றன. சூட்டிணைப் பந்துகள் சுற்றுப்பலகையில் உள்ள செப்பு நிரப்பிடங்கள் (solder pads) மீது ஒட்டுகின்றன.

ஒரு மின் கடத்தியில், நேர்மின்னோட்டம் நடக்கும் பொழுது, அக்கடத்தியின் உள்ளே, அதன் குறுக்கு வெட்டுப் பரப்பில், எல்லா இடங்களிலும், ஒரே சீராக ஒரே அளவு மின்னோட்டம் தான் இருக்கும். ஆனால், மின்னோட்டம் மாறு மின்னோட்டமாக இருந்தால், மிக அதிக அதிர்வெண் கொண்ட மாறு மின்னோட்டம் நிகழும் பொழுது, மின்னொட்டம் பெரும்பாலும் அந்த மின் கட்த்தியின் மேற்புரத்திலேயே நிகழும், கடத்தியின் அச்சு போன்ற உட்பகுதியில், அதிக மின்னோட்டம் இராது. இப்படி ஒரு கடத்தியின் (அச்சு போன்ற) உட்பகுதியிலே மின்னோட்டம் நிகழாது, புறப்பகுதியில் அதிகமாக மின்னொட்டம் நிகழ்வதை புறணி விளைவு (skin effect) என அழைக்கிறார்கள்.

மின்சக்தி பாவிக்கப்படும் அல்லது ஓடும் வேக விகிதம் மின்திறன் ஆகும்; அதாவது மின்திறன் = மின்சத்தி / நேரம். மின்னாற்றல் என்பது ஒரு மின்சுற்றில் சுழலும் மின்சக்தியின் வீதம் ஆகும். ஒரு மின்சாரம் மின்சுற்றில் சுழலும் பொழுது , அது இயற்வினை செய்வதற்கான ஆற்றலை தருகிறது . அந்த ஆற்றலையே மின்னாற்றல் என்பது வழக்கு. கருவிகள் மின்சக்தியை வெப்பம் ( மின்னடுப்புகள்) , ஒளி ( மின்விளக்கு) , இயக்கம் ( மின்னியக்கி) , ஒலி ( ஒலிபெருக்கி), அல்லது ரசாயன மாற்றங்கள் போன்ற பல விதங்களில் மாற்றபடுகிறது. மின்சாரத்தை இயக்கத்தினால் உண்டாக்கலாம் , ரசாயனத்தால் அல்லது ஒளியில் இருந்து நேராக ஒளிமின்ன செதிழ்களால் உருவாக்கலாம் , மேலும் அதை ரசாயன மின்க்கூட்டினில் சேமிக்கலாம்.

மின்னணுவியலில், உணர்வு (Sense) என்பது மின்திறன் வழங்கி மின்சுமையின் மீது சரியான மின்னழுத்தத்தை கொடுக்கப் பயன்படும் ஒரு தொழினுட்பம் ஆகும். எளிமையான மின்தேக்கிகள் இயல்பாகவே சரியான மின்னழுத்தத்தை கொடுக்கிறதென்றாலும், எந்த ஒரு மின்திறன் வழங்கியும் விரும்பும் மின்னழுத்திற்கும், உள்ளபடியான மின்னழுத்திற்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்த ஒரு வழிகாட்டல் கட்டகத்தை அமைக்க வேண்டியுள்ளது. வழிகாட்டல் கட்டகம் சரியாக வேலை செய்தால் தான் மின்திறன் வழங்கியும் சரியாக வேலை செய்யக்கூடும்.

மின்னணு தெரிவுத்திறன் (Selectivity (electronic)) என்பது ஒரு வானொலி அலையேற்பி, வேறு அலைவரிசைகளை தவிர்த்து வானொலி அலைகளை மட்டும் தெரிவு செய்யும் திறனைக் காட்டும் ஒரு அளவுகோல் ஆகும்.

மின்னணு தெரிவுத்திறனைப் பெரும்பாலும் விகிதமாக டெசிபெல்லில் குறிக்கப்பெறும். இது வெவ்வேறு அலைவரிசைகளில் உள்ள குறிகைத் திடத்தினை ஒப்பிட்டு பார்த்து கணக்கிடப்படுகிறது.